ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் பெயிண்ட்டில் மீட்டியோர் 350!! இது இன்னும் ஸ்டைலிஷா இருக்கு!

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மிக வேகமாக இந்திய இளம் தலைமுறையினர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் பெயிண்ட்டில் மீட்டியோர் 350!! இது இன்னும் ஸ்டைலிஷா இருக்கு!

ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா என்ற மூன்று விதமான ட்ரிம் நிலைகளில் இந்த பைக் விற்பனைக்கு கிடைக்கிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான நிறத்தேர்வுகளை பெறுகின்றன.

ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் பெயிண்ட்டில் மீட்டியோர் 350!! இது இன்னும் ஸ்டைலிஷா இருக்கு!

இந்த நிறத்தேர்வுகள் அனைத்தும் மீட்டியோரின் ரெட்ரோ ஸ்டைலை எந்த விதத்திலும் குறைக்காத அளவில் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இவற்றை எல்லாம் விட பைக்கிற்கு கருப்பு நிறம் கொடுத்தால், இன்னும் மாடர்ன் பைக்குகளின் தோற்றத்திற்கு வந்துவிடும் போலிருக்கிறது.

ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் பெயிண்ட்டில் மீட்டியோர் 350!! இது இன்னும் ஸ்டைலிஷா இருக்கு!

ஏன் இதை நான் இப்போது கூறுகிறேன் என்றால், இங்கு ஒரு மீட்டியோர் 350 பைக்கிற்கு பளபளப்பான கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான படங்கள் _bee__kay_ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் பெயிண்ட்டில் மீட்டியோர் 350!! இது இன்னும் ஸ்டைலிஷா இருக்கு!

இந்த பிரத்யேக பெயிண்ட்டை பெற்றுள்ள இந்த பைக் மீட்டியோரின் ஆரம்ப நிலை ஃபயர்பால் ட்ரிம் ஆகும். பைக்கில் என்ஜின் கேஸ், எக்ஸாஸ்ட் குழாய், ஓட்டுனர் கால்களை வைக்கும் பகுதி, ஹேண்டில்பார், பக்கவாட்டு பாடி பேனல்கள், அலாய் சக்கரங்கள் மற்றும் க்ராப் ரெயில்கள் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் உள்ளன.

ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் பெயிண்ட்டில் மீட்டியோர் 350!! இது இன்னும் ஸ்டைலிஷா இருக்கு!

முழுவதும் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்ட பெட்ரோல் டேங்கின் மீது இரு சில்வர் நிற பட்டைகள் செல்கின்றன. இதனை பார்க்கும்போது நமக்கு ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் பெயிண்ட்டில் மீட்டியோர் 350!! இது இன்னும் ஸ்டைலிஷா இருக்கு!

ஏனெனில் முன்பு இந்த 650சிசி ராயல் என்பீல்டு பைக்கிற்கு ப்ளாக் மேஜிக் என்ற நிறம் வழங்கப்பட்டு வந்தது. பளபளப்பான கருப்பு நிறத்தினால் இந்த மீட்டியோர் 350 பைக் மாடர்ன் தோற்றத்திற்கு மாறியுள்ளது.

ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் பெயிண்ட்டில் மீட்டியோர் 350!! இது இன்னும் ஸ்டைலிஷா இருக்கு!

இருப்பினும் பைக்கில் ரெட்ரோ-ஸ்டைலில் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப், டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் டெயில்லேம்ப், ஹெட்லேம்பில் வட்ட வடிவில் எல்இடி டிஆர்எல், அகலமான ஹேண்டில்பார் மற்றும் வட்டமாக இன்ஸ்ட்ரூமெண்ட் டயல்கள் உள்ளிட்டவை தொடரப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் பெயிண்ட்டில் மீட்டியோர் 350!! இது இன்னும் ஸ்டைலிஷா இருக்கு!

மற்றப்படி மீட்டியோர் 350-இன் 349சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு, நீண்ட-ஸ்ட்ரோக் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டுவரப்பட்டிருக்காது. அதிகப்பட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தகூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் பெயிண்ட்டில் மீட்டியோர் 350!! இது இன்னும் ஸ்டைலிஷா இருக்கு!

ரூ.1.80 லட்சத்தில் இருந்து ரூ.1.95 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற மீட்டியோர் 350 பைக்கிற்கு விற்பனையில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350, ஜாவா 42 மற்றும் பெனெல்லி இம்பெரீயல் 400 முக்கிய போட்டி மாடல்களாக விளங்குகின்றன.

Most Read Articles
English summary
Royal Enfield Meteor 350 Custom Black With Stripes From 650 GT.
Story first published: Saturday, May 15, 2021, 13:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X