இந்தியாவில் இருந்து ஏற்றுமதி... ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம்...

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி... ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம்...

ராயல் என்பீல்டு நிறுவனம் மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 8 ஆயிரம் மீட்டியோர் 350 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. முன்பதிவு தொடர்ந்து குவிந்து வருவதால், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கான காத்திருப்பு காலம் அதிகமாக உள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி... ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம்...

இந்தியாவை தொடர்ந்து சர்வதேச சந்தைகளிலும் மீட்டியோர் 350 பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. இதன்படி ஐரோப்பிய சந்தைகளிலும், தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் ஏற்கனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி... ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம்...

இந்த வரிசையில் தற்போது அமெரிக்க சந்தைக்கும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 விற்பனை செய்யப்படுகிறது. இந்த மூன்று வேரியண்ட்களும் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி... ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம்...

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுபவையாகும். இந்தியாவில் முழுவதும் கட்டமைக்கப்பட்டு, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் பல்வேறு வசதிகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி... ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம்...

இதில், ட்ரிப்பர் நேவிகேஷன் வசதி மிகவும் முக்கியமானது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளில் ட்ரிப்பர் நேவிகேஷன் வசதியை பெற்ற முதல் மாடல் இதுதான். இந்த வசதிக்காக இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு அடுத்தபடியாக சிறிய திரை வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் மற்றும் ராயல் என்பீல்டு மொபைல் செயலி மூலமாக இதனுடன் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனை கனெக்ட் செய்து கொள்ளலாம்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி... ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம்...

இதன் மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷனை வாடிக்கையாளர்கள் பெற முடியும். ட்ரிப்பர் நேவிகேஷன் தவிர, எல்இடி ரிங் உடன் ரெட்ரோ ஸ்டைல் ஹெட்லேம்ப், கண்ணீர் துளி வடிவ எரிபொருள் டேங்க், சௌகரியமான இருக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி... ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம்...

அதே சமயம் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளில் புதிய 349 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,100 ஆர்பிஎம்மில் 20.4 ஹெச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி... ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம்...

இந்திய சந்தையில், ஹோண்டா ஹைனெஸ் சிபி350, ஜாவா பெராக் மற்றும் பெனெல்லி இம்பீரியல் 400 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுடன் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 போட்டியிட்டு வருகிறது. இதில், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளும் தற்போது இந்தியாவில் வேகமாக பிரபலமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Royal Enfield Meteor 350 Launched In US: Here Are The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X