சிங்கப்பூரில் பைக்குகளை களமிறக்கும் நம்மூர் ராயல் என்பீல்டு!! புதிய ஷோரூமை திறந்தது...

புதிய டீலர்ஷிப் ஷோரூமை திறந்திருப்பதன் மூலம் சிங்கப்பூரிலும் வணிகத்தை சென்னையில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வரும் ராயல் என்பீல்டு ஆரம்பித்துள்ளது.

சிங்கப்பூரில் பைக்குகளை களமிறக்கும் நம்மூர் ராயல் என்பீல்டு!! புதிய ஷோரூமை திறந்தது...

இந்த ராயல் என்பீல்டு சிங்கப்பூர் ஷோரூமில் இண்டர்செப்டர் 650, காண்டினெண்டல் ஜிடி650, ஹிமாலயன் மற்றும் கிளாசிக் 350 என பெரும்பான்மையான ராயல் என்பீல்டு பைக்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் பைக்குகளை களமிறக்கும் நம்மூர் ராயல் என்பீல்டு!! புதிய ஷோரூமை திறந்தது...

மேலும் இந்த மோட்டார்சைக்கிள்களுக்கான ஆக்ஸஸரீகளும், பைக்குகளுக்கான பிரத்யேக நிறத்தேர்வுகள் & ரைடிங் கியர்களும் இந்த ஷோரூமில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன. குறிப்பாக ராயல் என்பீல்டின் பெரிய என்ஜினை கொண்ட 650 இரட்டை பைக்குகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சிங்கப்பூரில் பைக்குகளை களமிறக்கும் நம்மூர் ராயல் என்பீல்டு!! புதிய ஷோரூமை திறந்தது...

இதனால் இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 பைக்குகளும், புதிய தலைமுறை அப்கிரேடை பெற்ற ஹிமாலயன் மாடலும் சிங்கப்பூரில் சிறப்பாக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. அதேநேரம் ராயல் என்பீல்டின் சமீபத்திய அறிமுகமான மீட்டியோர் 350 மாடலும் ஆசிய சந்தைகளுக்கு ஏற்ற வாகனமாகும்.

சிங்கப்பூரில் பைக்குகளை களமிறக்கும் நம்மூர் ராயல் என்பீல்டு!! புதிய ஷோரூமை திறந்தது...

இருப்பினும் சிங்கப்பூரில் மீட்டியோர் 350 விற்பனைக்கு கொண்டுவரப்படவில்லை. நடுத்தர அளவிலான மோட்டார்சைக்கிள் பிரிவில் ராயல் என்பீல்டு தன்னை ஒரு உலகளாவிய தலைமை நிறுவனமாக நிலைநிறுத்த பல திட்டங்களை வைத்துள்ளது.

சிங்கப்பூரில் பைக்குகளை களமிறக்கும் நம்மூர் ராயல் என்பீல்டு!! புதிய ஷோரூமை திறந்தது...

இதன்படி இந்தியாவிற்கு பிறகு உலகின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் சந்தைகளில் நுழைவதை நோக்கமாக கொண்டுள்ள இந்த சென்னை மோட்டார்சைக்கிள் பிராண்ட், ஆசியா முழுவதும் தீவிரமாக சந்தையை விரிவுப்படுத்தி வருகிறது.

சிங்கப்பூரில் பைக்குகளை களமிறக்கும் நம்மூர் ராயல் என்பீல்டு!! புதிய ஷோரூமை திறந்தது...

இதன் ஒரு பகுதியாகவே தற்போது சிங்கப்பூரில் தனது காலடி தடத்தை பதித்துள்ள ராயல் என்பீல்டு ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய ஆசிய நாடுகளில் தற்சமயம் செயல்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் பைக்குகளை களமிறக்கும் நம்மூர் ராயல் என்பீல்டு!! புதிய ஷோரூமை திறந்தது...

இதில் குறிப்பாக தாய்லாந்தில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு மிக நல்ல வரவேற்பு கிடைத்து வருவதை அடுத்து அங்கு புதிய தொழிற்சாலை ஒன்று நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. ஏனெனில் தாய்லாந்தில் புதிய தொழிற்சாலையை நிறுவினால் அது அருகில் உள்ள மற்ற நாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு உதவியாக இருக்கும்.

சிங்கப்பூரில் பைக்குகளை களமிறக்கும் நம்மூர் ராயல் என்பீல்டு!! புதிய ஷோரூமை திறந்தது...

ராயல் என்பீல்டிற்கு வெளிநாட்டில் தொழிற்சாலை என்று பார்த்தால் அர்ஜெண்டினாவில் ஒன்று உள்ளது. அதற்கு அடுத்து இரண்டாவதாக வெளிநாட்டு தொழிற்சாலையில் தாய்லாந்து தொழிற்சாலை விளங்கும்.

சிங்கப்பூரில் பைக்குகளை களமிறக்கும் நம்மூர் ராயல் என்பீல்டு!! புதிய ஷோரூமை திறந்தது...

சிங்கப்பூருக்கும் எதிர்காலத்தில் ராயல் என்பீல்டு பைக்குகள் தாய்லாந்தில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் தாயகமான இந்தியாவிலும் விற்பனையை அதிகரிக்க பல முயற்சிகளை ராயல் என்பீல்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

Most Read Articles

English summary
Royal Enfield Begins Operations In Singapore With New Store
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X