ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கியுள்ளீர்களா? அப்போ நீங்க தான் இந்த செய்தியை முதலில் தெரிஞ்சிக்கணும்!

பிரேக் அமைப்பில் ஏற்படும் பாதிப்புகளினால் ராயல் என்பீல்டு கிளாசிக்350 பைக்குகள் திரும்ப டீலர்ஷிப்களுக்கே அழைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கியுள்ளீர்களா? அப்போ நீங்க தான் இந்த செய்தியை முதலில் தெரிஞ்சிக்கணும்!

ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த ஆண்டின் மத்தியில் புதிய தலைமுறை 2021 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை சந்தையில் அறிமுகப்படுத்தியது. விற்பனையில் எதிர்பார்த்தை போல் ஜொலித்துவரும் அப்டேட் செய்யப்பட்ட கிளாசிக் 350 பைக்கின் 1 லட்சமாவது யூனிட் வெற்றிக்கரமாக தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தான் ராயல் என்பீல்டு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கியுள்ளீர்களா? அப்போ நீங்க தான் இந்த செய்தியை முதலில் தெரிஞ்சிக்கணும்!

இந்த நிலையில் தற்போது விற்பனை செய்யப்பட்ட சில குறிப்பிட்ட கிளாசிக் 350 பைக்குகளை பிரேக் அமைப்பில் ஏற்படும் பிரச்சனையின் காரணமாக திரும்ப அழைப்பதாக ராயல் என்பீல்டு அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் வரையில் தயாரிக்கப்பட்ட 26,300 கிளாசிக் 350 பைக்குகளில் இத்தகைய பிரச்சனை ஏற்படுவதாக இந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கியுள்ளீர்களா? அப்போ நீங்க தான் இந்த செய்தியை முதலில் தெரிஞ்சிக்கணும்!

சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் மற்றும் பின்பக்க ட்ரம் ப்ரேக் அமைப்பை பெறும் 2021 கிளாசிக் 350 பைக்குகளில் ஸ்விங் ஆர்ம் உடன் இணைக்கப்படும் பிரேக் ரியாக்‌ஷன் பிராக்கெட்டில் முக்கியமான பழுது ஏற்படுவதை ராயல் என்பீல்டு தொழிற்நுட்ப குழுவினர் கண்டறிந்ததை தொடர்ந்து இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையினை தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கியுள்ளீர்களா? அப்போ நீங்க தான் இந்த செய்தியை முதலில் தெரிஞ்சிக்கணும்!

குறிப்பாக இந்த பிரச்சனை ஆனது பின்பக்க ப்ரேக் பெடலுக்கு அதிக வேலை கொடுக்கக்கூடிய ஆஃப்-ரோடு பயணங்களின் போதே ஏற்படுவதாகவும், இந்த பிரச்சனையினால் பின்பக்க ப்ரேக் அமைப்பில் இருந்து வித்தியாசமான சத்தம் வெளிவருவதாகவும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கியுள்ளீர்களா? அப்போ நீங்க தான் இந்த செய்தியை முதலில் தெரிஞ்சிக்கணும்!

மேலும் இந்த பிரச்சனை, பின்பக்கத்தில் ட்ரம் ப்ரேக் & சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்-ஐ கொண்ட கிளாசிக் 350 பைக்குகளில் மட்டுமே ஏற்படுகிறதாம். இந்த ராயல் என்பீல்டு பைக்கின் மற்ற வேரியண்ட்கள் இந்த பிரச்சனையினால் பாதிக்கப்படுவதில்லை. இதனால் மற்ற வேரியண்ட்கள் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கைக்கு உட்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கியுள்ளீர்களா? அப்போ நீங்க தான் இந்த செய்தியை முதலில் தெரிஞ்சிக்கணும்!

பின்பக்க ட்ரம் ப்ரேக் & சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்-ஐ கொண்ட கிளாசிக் 350 பைக்குகளை பெற்ற உரிமையாளர்களை ராயல் என்பீல்டு மற்றும் அதன் டீலர்ஷிப்கள் இந்த பிரச்சனை தொடர்பாக இன்னும் சில நாட்களில் தொடர்பு கொள்ள உள்ளனர். இந்த வகையில் மீண்டும் டீலர்ஷிப் மையங்களுக்கு அழைக்கப்படும் உரிமையாளர்களின் கிளாசிக் 350 பைக்குகளில் ஸ்விங் ஆர்ம் பகுதியின் பிரேக் ரியாக்‌ஷன் பிராக்கெட் வலுப்படுத்தி வழங்கப்பட உள்ளன.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கியுள்ளீர்களா? அப்போ நீங்க தான் இந்த செய்தியை முதலில் தெரிஞ்சிக்கணும்!

எனவே மேற்கூறப்பட்ட கிளாசிக் 350 பைக் வேரியண்ட்டின் உரிமையாளர்கள் தாங்கள் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கைக்குள் உட்படுகிறீர்களா என்பதை தெரிந்து கொள்ள அருகில் உள்ள டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு நேரில் சென்றோ அல்லது ராயல் என்பீல்டு வாடிக்கையாளர்கள் சேவை மையத்திற்கு கால் செய்தோ தெரிந்து கொள்ளலாம். இல்லையென்றால், உங்களது வாகன சேசிஸ் எண்ணை உள்ளீடு செய்து நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலும் அறியலாம்.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கியுள்ளீர்களா? அப்போ நீங்க தான் இந்த செய்தியை முதலில் தெரிஞ்சிக்கணும்!

இந்த 2021ஆம் ஆண்டில் விற்கப்பட்ட தனது பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் திரும்ப அழைப்பது இது முதல்முறை அல்ல. முன்னதாக கடந்த மே மாதத்தில் சுமார் 2.3 லட்ச மோட்டார்சைக்கிள்களை திரும்ப அழைப்பதாக அறிவித்திருந்தது. அந்த திரும்ப அழைப்பு நடவடிக்கையில், புல்லட், கிளாசிக் 350 (முந்தைய தலைமுறை) மற்றும் மீட்டியோர் பைக்குகள் அடங்கின.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கியுள்ளீர்களா? அப்போ நீங்க தான் இந்த செய்தியை முதலில் தெரிஞ்சிக்கணும்!

குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட இந்த பைக்குகளின் யூனிட்களில் இக்னிஷன் காயிலில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறுகளினால் அந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த திரும்ப அழைப்புகள் குறித்து ராயல் என்பீல்டு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எங்கள் நிறுவனத்தில் வலுவான மற்றும் கடுமையான சோதனை மற்றும் மேம்பாட்டு நெறிமுறைகள் உள்ளன.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கியுள்ளீர்களா? அப்போ நீங்க தான் இந்த செய்தியை முதலில் தெரிஞ்சிக்கணும்!

மேலும், தரம் & நீடித்து நிலைக்கும் தன்மையை கண்டறிய உலகளாவிய சரிபார்ப்பு தரநிலைகளை கடைப்பிடிக்கிறோம். எவ்வாறாயினும், குறிப்பிட்ட சில பயண சூழல்களின்போது இதுபோன்ற பிரச்சனைகள் எழலாம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தப்பட்ச சிரமத்துடன் விரைவில் இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப விலை ரூ.1,84,374 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Royal enfield recalled the new classic 350 model over braking issues
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X