2021 நவம்பரில், பைக்குகள் விற்பனையில் வெற்றிக்கரமாக 50 ஆயிரத்தை கடந்த ராயல் என்பீல்டு!! ஏற்றுமதி அதிகரிப்பு

இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ராயல் என்பீல்டு கடந்த நவம்பர் மாதத்தில் விற்பனை செய்த பைக்குகள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 நவம்பரில், பைக்குகள் விற்பனையில் வெற்றிக்கரமாக 50 ஆயிரத்தை கடந்த ராயல் என்பீல்டு!! ஏற்றுமதி அதிகரிப்பு

கொரோனா இரண்டாவது அலையினால் சரிவை கண்டுவந்த ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் விற்பனை கடந்த சில மாதங்களாக மெல்ல மெல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது. இதை தான் மீண்டும் 2021 நவம்பர் மாத விற்பனை நிலவரம் வெளிக்காட்டுகிறது.

2021 நவம்பரில், பைக்குகள் விற்பனையில் வெற்றிக்கரமாக 50 ஆயிரத்தை கடந்த ராயல் என்பீல்டு!! ஏற்றுமதி அதிகரிப்பு

கடந்த மாதத்தில் மொத்தமாக 51,654 மோட்டார்சைக்கிள்களை இந்தியாவிலும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் ராயல் என்பீல்டு நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2020 நவம்பர் மாதத்தை (63,782 யூனிட்கள்) காட்டிலும் 19% குறைவு என்றாலும், 2021 அக்டோபர் மாதத்தை விட 17.04% அதிகமாகும்.

2021 நவம்பரில், பைக்குகள் விற்பனையில் வெற்றிக்கரமாக 50 ஆயிரத்தை கடந்த ராயல் என்பீல்டு!! ஏற்றுமதி அதிகரிப்பு

ஏனெனில் கடந்த மாதத்திற்கு முந்தைய மாதத்தில் ஒட்டுமொத்தமாக 44,133 பைக்குகளை உலகளவில் இந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள 51,654 பைக்குகளில் 44,830 ராயல் என்பீல்டு பைக்குகள் உள்நாட்டிலும், 6,824 பைக்குகள் வெளிநாட்டு சந்தைகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2021 நவம்பரில், பைக்குகள் விற்பனையில் வெற்றிக்கரமாக 50 ஆயிரத்தை கடந்த ராயல் என்பீல்டு!! ஏற்றுமதி அதிகரிப்பு

இதில் 2020 நவம்பரை காட்டிலும் ராயல் என்பீல்டின் உள்நாட்டு விற்பனை 24.12% குறைந்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் 59,084 பைக்குகளை ராயல் என்பீல்டு இந்திய சந்தையில் விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் உடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி 45.25 அதிகரித்துள்ளது. அப்படியே 2021 அக்டோபர் மாதத்திற்கு வந்தோமேயானால், உள்நாட்டு விற்பனை & வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டுமே முறையே 10.39% மற்றும் 93.75% அதிகரித்துள்ளன.

2021 நவம்பரில், பைக்குகள் விற்பனையில் வெற்றிக்கரமாக 50 ஆயிரத்தை கடந்த ராயல் என்பீல்டு!! ஏற்றுமதி அதிகரிப்பு

இதில் வெளிநாட்டு ஏற்றுமதி முந்தைய அக்டோபர் மாதத்தை காட்டிலும் கடந்த நவம்பரில் இரட்டிப்பாகி உள்ளதை சொல்லியே ஆக வேண்டும். இந்திய சந்தையில் தற்சமயம் 6 மோட்டார்சைக்கிள்களை இந்த சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில் இந்த நிறுவனத்தின் புல்லட் 350, 2021 கிளாசிக் 350, மீட்டியோர் 350 மிக பிரபலமானவைகளாக விளங்குகின்றன.

2021 நவம்பரில், பைக்குகள் விற்பனையில் வெற்றிக்கரமாக 50 ஆயிரத்தை கடந்த ராயல் என்பீல்டு!! ஏற்றுமதி அதிகரிப்பு

எந்த அளவிற்கு என்றால், மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட 51,654 யூனிட்களில் இவை மட்டுமே சுமார் 43,346 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு 83.92%-ஐ ஆக்கிரமித்துள்ளன. மீதி 8,308 மோட்டார்சைக்கிள்கள் 350சிசி அல்லாத ராயல் என்பீல்டு பைக்குகளாகும். ஆனால் உண்மையில், 2020 நவம்பரில் மொத்தம் 57,418 350சிசி பைக்குகளை இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் ராயல் என்பீல்டு விற்பனை செய்திருந்தது.

2021 நவம்பரில், பைக்குகள் விற்பனையில் வெற்றிக்கரமாக 50 ஆயிரத்தை கடந்த ராயல் என்பீல்டு!! ஏற்றுமதி அதிகரிப்பு

இந்த எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை (43,346) கிட்டத்தட்ட 24.51% குறைவாகும். ஆனால் 2021 அக்டோபரை காட்டிலும் 15.87% அதிகமாகும். அப்டேட் செய்யப்பட்ட கிளாசிக் 350 பைக் அறிமுகமானதில் இருந்து 350சிசி ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை அதிகரித்து வருகிறது. 350சிசி அல்லாத பைக்குகள் கடந்த 2020 நவம்பர் & 2021 அக்டோபர் என இரு மாதங்களை காட்டிலும் கடந்த மாதத்தில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2021 நவம்பரில், பைக்குகள் விற்பனையில் வெற்றிக்கரமாக 50 ஆயிரத்தை கடந்த ராயல் என்பீல்டு!! ஏற்றுமதி அதிகரிப்பு

அந்த இரு மாதங்களில் 350சிசி அல்லாத ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை 6 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இந்த எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2021 ஏப்ரலில் இருந்து நவம்பர் மாதம் வரையில் கடந்த 8 மாதங்களில் 3,42,854 மோட்டார்சைக்கிள்களை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

2021 நவம்பரில், பைக்குகள் விற்பனையில் வெற்றிக்கரமாக 50 ஆயிரத்தை கடந்த ராயல் என்பீல்டு!! ஏற்றுமதி அதிகரிப்பு

2020 ஏப்ரல் -நவம்பர் மாதத்தில் விற்கப்பட்ட ராயல் என்பீல்டு பைக்குகளை காட்டிலும் தற்போதைய விற்பனை எண்ணிக்கை 1% அதிகமாகும். ஏனெனில் அந்த 8 மாதங்களில் 3,38,461 ராயல் என்பீல்டு பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன. கடந்த 8 மாத விற்பனையில், 350சிசி பைக்குகளை மட்டும் கணக்கில் எடுத்து பார்த்தால், 2,88,956 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

2021 நவம்பரில், பைக்குகள் விற்பனையில் வெற்றிக்கரமாக 50 ஆயிரத்தை கடந்த ராயல் என்பீல்டு!! ஏற்றுமதி அதிகரிப்பு

ஆனால் 2020ஆம் ஆண்டில் 3 லட்சத்திற்கும் அதிகமான ராயல் என்பீல்டு 350சிசி பைக்குகள் இந்த காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 350சிசி அல்லாத மோட்டார்சைக்கிள்களை பொறுத்தவரையில், கடந்த 8 மாதங்களில் 53,898 யூனிட்கள் உலகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2020ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 31,258 என்றே இருந்தது.

2021 நவம்பரில், பைக்குகள் விற்பனையில் வெற்றிக்கரமாக 50 ஆயிரத்தை கடந்த ராயல் என்பீல்டு!! ஏற்றுமதி அதிகரிப்பு

350சிசி அல்லாத ராயல் என்பீல்டு மாடல்களில், ஹிமாலயன், இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 உள்ளிட்டவை அடங்குகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மொத்தம் 47,143 ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் சுமார் 134% குறைவாக வெறும் 20,174 பைக்குகளையே இந்த நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது.

Most Read Articles

English summary
Royal Enfield Sales Nov 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X