விரைவில் விற்பனைக்கு வரவுள்ள Royal Enfield Scram 411 பைக்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக் பற்றிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள Royal Enfield Scram 411 பைக்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

வரும் 2022ம் ஆண்டில் ஏராளமான புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் தயாராகி வருகிறது. ஹண்டர் 350, சூப்பர் மீட்டியோர் 650 க்ரூஸர், சூட்கன் 650 பாபர், அடுத்த தலைமுறை புல்லட் 350 மற்றும் ஸ்க்ராம் 411 என ஏராளமான புதிய பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஸ்க்ராம் 411 பைக் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள Royal Enfield Scram 411 பைக்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

அறிமுகம்:

இது ராயல் என்பீல்டு ஹிமாலயன் ட்யூயல்-பர்பஸ் அட்வென்ஜர் டூரர் பைக்கின் சாலை சார்ந்த வெர்ஷன் ஆகும். வரும் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இது ஷோரூம்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து ஹண்டர் 350 மற்றும் சூப்பர் மீட்டியோர் 650 க்ரூஸர் ஆகிய பைக்குகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்குகள் 2022ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம்.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள Royal Enfield Scram 411 பைக்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

விலை:

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் 2.10 லட்ச ரூபாய் முதல் 2.18 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதைக்காட்டிலும் 30 ஆயிரம் ரூபாய் குறைவான விலையில் ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும்.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள Royal Enfield Scram 411 பைக்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு கீழாக ஸ்க்ராம் 411 நிலைநிறுத்தப்படவுள்ளது. முறையான ஆஃப் ரோடு பைக்கை வாங்க விரும்பாத வாடிக்கையாளர்களை மனதில் வைத்து ராயல் என்பீல்டு நிறுவனம் ஸ்க்ராம் 411 பைக்கை உருவாக்கி வருகிறது. அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இது மிகச்சிறந்த தேர்வாக இருக்கலாம்.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள Royal Enfield Scram 411 பைக்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

ஸ்டைல்:

சமீபத்தில் விளம்பரம் தொடர்பான ஷூட்டிங் எடுக்கப்பட்டபோது ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 கேமரா கண்களில் சிக்கியது. இந்த பைக் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது என்பதை காட்டும் அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் பல்வேறு டிசைன் அம்சங்கள் ஸ்க்ராம் 411 பைக்கிலும் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள Royal Enfield Scram 411 பைக்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

இன்ஜின்:

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள அதே 411 சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு இன்ஜின்தான் ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கிலும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 24.3 பிஹெச்பி பவரையும், 32 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும்.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள Royal Enfield Scram 411 பைக்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

வசதிகள்:

ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கில், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கில் வழங்கப்பட்டுள்ள ட்ரிப்பர் நேவிகேஷன் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகள், ஸ்க்ராம் 411 பைக்கிலும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள Royal Enfield Scram 411 பைக்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

அத்துடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியையும் ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது பல்வேறு புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. இதில், மீட்டியோர் 350 மற்றும் புதிய தலைமுறை கிளாசிக் 350 உள்ளிட்ட பைக்குகள் குறிப்பிடத்தகுந்தவை. இந்த வரிசையில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்க்ராம் 411 பைக்கும் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Royal enfield scram 411 here s everything you need to know
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X