போடு செம்ம... அடுத்த 650சிசி ராயல் என்பீல்டு பைக்கின் பெயர் இதுதானா!! காப்புரிமை பதிவு செய்யப்பட்டது...

ரோட்ஸ்டர், க்ரூஸர் என ராயல் என்பீல்டின் 650சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் பல புதிய தயாரிப்புகள் அறிமுகமாகவுள்ளன. இந்த நிலையில் தற்போது ஸ்க்ராம் என்ற பெயரில் புதிய ராயல் என்பீல்டு பைக் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

போடு செம்ம... அடுத்த 650சிசி ராயல் என்பீல்டு பைக்கின் பெயர் இதுதானா!! காப்புரிமை பதிவு செய்யப்பட்டது...

இதுகுறித்து தற்போது கிடைத்துள்ள ஆவண படத்தின் மூலம் ராயல் என்பீல்டு ஸ்க்ராம் ஆனது ஸ்க்ரம்ப்ளர் தோற்றத்தை கொண்ட மோட்டார்சைக்கிளாக இருக்கலாம் என தோன்றுகிறது. மேலும், இது ராயல் என்பீல்டின் புதிய 650சிசி பைக்குகளில் ஒன்றிற்கான பெயராக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

போடு செம்ம... அடுத்த 650சிசி ராயல் என்பீல்டு பைக்கின் பெயர் இதுதானா!! காப்புரிமை பதிவு செய்யப்பட்டது...

ஆனால் இங்கு தான் நமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய 650சிசி மோட்டார்சைக்கிள்கள் பலமுறை பொது சாலையில் சோதனை ஓட்டத்தின்போது நமது கேமிராக்களில் சிக்கியுள்ளன. ஆனால் அவற்றில் எதுவும் ஸ்க்ரம்ப்ளர் தோற்றத்தை கொண்டிருக்கவில்லை.

போடு செம்ம... அடுத்த 650சிசி ராயல் என்பீல்டு பைக்கின் பெயர் இதுதானா!! காப்புரிமை பதிவு செய்யப்பட்டது...

எனவே, ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போதுதான் இந்த ஸ்க்ர்ம்ப்ளர் மோட்டார்சைக்கிளின் வடிவமைப்பு பணிகளில் ஈடுப்பட துவங்கியிருக்கும். இதனால் இந்த புதிய ராயல் என்பீல்டு பைக்கின் தோற்றத்தை பற்றி ஆராய்வது தற்போதைக்கு சரியானதாக இருக்காது.

போடு செம்ம... அடுத்த 650சிசி ராயல் என்பீல்டு பைக்கின் பெயர் இதுதானா!! காப்புரிமை பதிவு செய்யப்பட்டது...

நமக்கு தெரிந்தவரையில் வட்ட வடிலான ஹெட்லேம்ப், மிகவும் குறைவான உடல் வேலைப்பாடுகள், அதிக க்ரவுண்ட் க்ளியரென்ஸ், மேல் நோக்கி வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய், ஸ்போக் சக்கரங்கள் மற்றும் ஆஃப்-ரோடு & ஆன்-ரோடு என விதமான சாலைகளுக்கும் பயன்படுத்தும் வகையிலான டயர்களை ராயல் என்பீல்டு ஸ்க்ராம் பெற்றுவரலாம்.

போடு செம்ம... அடுத்த 650சிசி ராயல் என்பீல்டு பைக்கின் பெயர் இதுதானா!! காப்புரிமை பதிவு செய்யப்பட்டது...

தயாரிப்பு செலவை குறைப்பதற்காக இந்த 650சிசி மோட்டார்சைக்கிளும், தற்போதைய 650 இரட்டை (இண்டர்செப்டர் 650 & காண்டினெண்டல் ஜிடி650) பைக்குகளின் அதே ப்ளாட்ஃபாரத்தில் தான் தயாரிக்கப்படும். இந்த ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படும் 650 இரட்டை பைக்குகளில் சிறப்பான ஹேண்ட்லிங் & கண்ட்ரோல் கிடைப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

போடு செம்ம... அடுத்த 650சிசி ராயல் என்பீல்டு பைக்கின் பெயர் இதுதானா!! காப்புரிமை பதிவு செய்யப்பட்டது...

ஒரே ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுவதால் ஸ்க்ராம் என்ற ஸ்க்ரம்ப்ளர் பைக்கிலும் வழக்கமான 648சிசி காற்று/ஆயில்-கூல்டு, இணையான இரட்டை என்ஜின் பொருத்தப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

போடு செம்ம... அடுத்த 650சிசி ராயல் என்பீல்டு பைக்கின் பெயர் இதுதானா!! காப்புரிமை பதிவு செய்யப்பட்டது...

அதிகப்பட்சமாக 7150 ஆர்பிஎம்-இல் 47 எச்பி மற்றும் 5250 ஆர்பிஎம்-இல் 52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கான்ஸ்டண்ட் மெஷ் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. சஸ்பென்ஷன் & ப்ரேக்கிங் பாகங்களிலும் பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது.

போடு செம்ம... அடுத்த 650சிசி ராயல் என்பீல்டு பைக்கின் பெயர் இதுதானா!! காப்புரிமை பதிவு செய்யப்பட்டது...

இந்திய சந்தையில் அடுத்த 7 வருடங்களுக்கு உள்ளாக 28 புதிய தயாரிப்பு வாகனங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தது. தற்போதைக்கு இந்த சென்னை மோட்டார்சைக்கிள் பிராண்டிற்கு 350சிசி பைக்குகள் தான் பிரதான மாடல்களாக விளங்குகின்றன.

Most Read Articles
English summary
Royal Enfield Scram Motorcycle Name Registered.
Story first published: Monday, May 24, 2021, 16:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X