பனி பாறைகள் நிறைந்த தென் துருவத்திற்கு பயணிக்கும் Himalayan! ரைடர் சந்தோஷ் உடனான நேரடி உரையாடல்! வீடியோ!

பனியும், பனி பாறைகளும் நிறைந்த தென் துருவத்தில் சாகச பயணத்தை மேற்கொள்வதற்காக இந்தியர் ஒருவர் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்குடன் தயாராகியுள்ளார். இவருடன் நடைபெற்ற சுவாரஷ்ய உரையாடல்களை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம்.

பனி பாறைகள் நிறைந்த தென் துருவத்திற்கு பயணிக்கும் Himalayan! ரைடர் சந்தோஷ் உடனான நேரடி உரையாடல்! சிறப்பு தொகுப்பு!

'தல' பட்டத்தைத் துறந்து அஜித் குமார் அல்லது அஜித் அல்லது ஏகே இவ்வாறு என்னை அழைத்தாலே போதும் என கூறி சக நடிகர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக மாறியிருக்கின்றார் நடிகர் அஜித். இவர் அண்மையில் வலிமை படப்பிடிப்பு முடிந்த கையோடு தன்னுடைய விலையுயர்ந்த பைக்கில் உலகம் சுற்றும் வாலிபனாக மாறி நாட்டை வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.

பனி பாறைகள் நிறைந்த தென் துருவத்திற்கு பயணிக்கும் Himalayan! ரைடர் சந்தோஷ் உடனான நேரடி உரையாடல்! சிறப்பு தொகுப்பு!

இவரைப் போலவே இன்னும் பலர் இவ்வாறு இருசக்கர வாகனத்தைக் கொண்டு ஆச்சரியமிகு இடங்களுக்கு பயணித்த வண்ணம் இருக்கின்றனர். அந்தவகையில், தென் துருவமான அண்டார்டிகாவின் பனி சூழ்ந்த பகுதியில் வலம் வருவதற்காக தயாராக இருந்த கர்நாடகத்தை சேர்ந்த முன்னால் சாஃப்ட்வேர் எஞ்ஜினியருடன் அண்மையில் வீடியோ கால் வாயிலாக நேர்காணல் செய்தோம்.

பனி பாறைகள் நிறைந்த தென் துருவத்திற்கு பயணிக்கும் Himalayan! ரைடர் சந்தோஷ் உடனான நேரடி உரையாடல்! சிறப்பு தொகுப்பு!

இந்த நேர்காணலின் வாயிலாக அவரிடம் இருந்து கிடைத்த தகவல்களையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். பல்வேறு கேள்விகள், அவரின் சுவாரஷ்யமான பயணங்கள் பற்றிய பல்வேறு முக்கிய தகவல்கள் இந்த பதிவில் இடம் பெற்றிருக்கின்றன. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

அண்டார்டிகாவில் நிலவும் சூழல் மிகவும் கடுமையானது. ஆகையால் இந்த பகுதி வாகனத்தின் திறனை நிரூபிப்பதற்கான மிக சிறந்த தளமாக காட்சியளிக்கிறது. எனவேதான் இந்த பகுதியில் வைத்து தங்களது ஹிமாலயன் பைக்கை ஆய்வு செய்வதற்காக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஓர் குழு ஆயத்தமாகியிருக்கின்றது. இதற்காக இரு ஹிமாலயன் பைக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பனி பாறைகள் நிறைந்த தென் துருவத்திற்கு பயணிக்கும் Himalayan! ரைடர் சந்தோஷ் உடனான நேரடி உரையாடல்! சிறப்பு தொகுப்பு!

அதில் ஒன்றை டீன் காக்ஸன் (Senior Engineer of Product Development for RE in the UK), மற்றொன்றை சந்தோஷ் வியஜ் குமார் (Head of Rides & Community) ஆகிய இருவரும் இயக்க இருக்கின்றனர். இவர்களின் இந்த பயணம் குறித்த தகவல்களையே பிரத்யேகமாக வீடியோ கால் வாயிலாக சந்தோஷ் விஜய் குமார் எங்களிடம் பகிர்ந்துக் கொண்டார்.

பனி பாறைகள் நிறைந்த தென் துருவத்திற்கு பயணிக்கும் Himalayan! ரைடர் சந்தோஷ் உடனான நேரடி உரையாடல்! சிறப்பு தொகுப்பு!

அவருடான உரையாடல்கள் இதோ:

கேள்வி: உங்களை பற்றி கூறுங்களேன்

பதில்: நான் பெங்களூருவைச் சேர்ந்தவன். சாஃப்ட்வேர் எஞ்ஜினியர் பணி அனுபவம் எனக்கு உண்டு. இந்த வேலையை விட்டுவிட்டு 2009இல் ராயல் என்பீல்டு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். ரைடுகள் மற்றும் நிகழ்வுகளை நான் இந்த நிறுவனத்தில் கையாண்டு வருகின்றேன். ஹிமாலயா முதல் பூட்டான், திபெத், மஸ்டாங்க உள்ளிட்ட பகுதிகளுக்கு ரைடு சென்றிருக்கின்றேன். எப்போதும் புதுமையான ஒன்றை நாங்கள் செய்ய விரும்புகின்றோம். இதன் அடிப்படையிலேயே பல இடங்களுக்கு நாங்கள் சென்றிருக்கின்றோம்.

பனி பாறைகள் நிறைந்த தென் துருவத்திற்கு பயணிக்கும் Himalayan! ரைடர் சந்தோஷ் உடனான நேரடி உரையாடல்! சிறப்பு தொகுப்பு!

கேள்வி: முழு தென் துருவ பயணத் திட்டம் எப்படி வந்தது?

பதில்: 2014ம் ஆண்டின் குளிர்காலத்தில் இமயமலையில் சவாரி செய்ய விரும்பினோம். இதைத்தொடர்ந்து, சவாரியும் சென்றோம். நாங்கள் சென்ற நேரத்தில் நல்ல பனி பொழிவு இருந்தது. ஆகையால், டயர்களில் பனி பொழிவைச் சமாளிக்கக் கூடிய சங்கிளியை மாட்டிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். அந்த நேரத்தில் நடைபெற்ற சுவாரஷ்யமான உரையடலின்போது ஓர் ரைடர், சாகச பயணங்களை மேற்கொள்லும் ஜப்பானிய மனிதர் பற்றி என்னிடம் கூறினார்.

பனி பாறைகள் நிறைந்த தென் துருவத்திற்கு பயணிக்கும் Himalayan! ரைடர் சந்தோஷ் உடனான நேரடி உரையாடல்! சிறப்பு தொகுப்பு!

வித்தியாசமான வழிகளின் வாயிலாக தென் துருவத்தில் அவர் பயணம் மேற்கொண்டது பற்றியும், அப்போது, அவருக்கு கிடைத்த அனுபவங்களைப் பற்றியும் விவரித்தார். இதுவே எங்களையும் தென் துருவத்திற்கு இழுக்க காரணமாக அமைந்தது. பயணத்தை மேற்கொள்ளும் முன் சில ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். பின்னர் ஆர்க்டிக் ட்ரக்ஸ் உதவியுடன் ஆர்க்டிக் பகுதியில் இருசக்கர வாகனத்தை இயக்குவதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறிந்தேன்.

பனி பாறைகள் நிறைந்த தென் துருவத்திற்கு பயணிக்கும் Himalayan! ரைடர் சந்தோஷ் உடனான நேரடி உரையாடல்! சிறப்பு தொகுப்பு!

இந்த நிறுவனத்தினர் 140க்கும் அதிகமான முறை இந்த பனி நிறைந்த கண்டத்தைக் கடந்திருக்கின்றனர். இதைத்தொடர்ந்து, மோட்டார்சைக்கிளைச் சோதிக்க ஐஸ்லாந்திற்கு சென்றோம். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, நாங்கள் மோட்டார்சைக்கிளை அங்கு சோதித்தோம். இந்த அனுபவத்துடனேயே தற்போது தென் துருவத்திற்கு செல்ல தயாராகியிருக்கின்றோம்.

கேள்வி: தென் துருவ பயணத்தை எத்தனை மாதங்களாக திட்டமிட்டு வருகின்றீர்கள்?

பதில்: 2020 ஏப்ரலில் இருந்தே இந்த பயணத்திற்காக நாங்கள் திட்டமிட்டு வருகின்றோம். கால சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தடைப்பட்டது. ஆனால், இப்போது எங்களுக்கு சரியான நேரம் கிடைத்திருப்பதாக நம்புகின்றோம்.

பனி பாறைகள் நிறைந்த தென் துருவத்திற்கு பயணிக்கும் Himalayan! ரைடர் சந்தோஷ் உடனான நேரடி உரையாடல்! சிறப்பு தொகுப்பு!

கேள்வி: மோட்டார்சைக்கிளை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்

பதில்: நாங்கள் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை சவாரிக்கு பயன்படுத்த இருக்கின்றோம். இந்த பைக்கை பனி சிகரங்களை சமாளிக்கும் பொருட்டு லேசான மாற்றங்களுக்கு உட்படுத்தியிருக்கின்றோம். அதிக முறுக்குவிசை கிடைக்கும் பொருட்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக முன்பக்க ஸ்பிராக்கெட்டில் இரண்டு பற்களை இறக்கியிருக்கின்றோம்.

பனி பாறைகள் நிறைந்த தென் துருவத்திற்கு பயணிக்கும் Himalayan! ரைடர் சந்தோஷ் உடனான நேரடி உரையாடல்! சிறப்பு தொகுப்பு!

நாங்கள் மிக அதிக வேக பயணத்தை எதிர்பார்க்கவில்லை. மேலும், வென்மையான பனி பகுதியில் சிறந்த பிடிமானத்துடன் பயணிக்கக் கூடிய டயர்களையும் இந்த பைக்கில் பயன்படுத்தியிருக்கின்றோம். தொடர்ந்து, கியருக்கு சக்தியூட்ட அதிக சக்தி வாய்ந்த மின்மாற்றி ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்டர் ஸ்டாண்டை அகற்றிவிட்டோம்.

பனி பாறைகள் நிறைந்த தென் துருவத்திற்கு பயணிக்கும் Himalayan! ரைடர் சந்தோஷ் உடனான நேரடி உரையாடல்! சிறப்பு தொகுப்பு!

ஆயில் கூலரின் இணைப்பையும் துண்டித்துவிட்டோம். சுற்றி இருப்பது பனி என்பதால் எஞ்ஜின் அதிக வெப்பமடைய வாய்ப்பில்லை. ஆகையால் இதை செய்தோம். இதை தவிர வேறு எந்த மாற்றங்களும் பெரியளவில் செய்யப்படவில்லை. ஆகையால், இந்தியாவின் சாலைகளில் மீண்டும் எடுத்து வந்த இந்த பைக்கை பயன்படுத்த முடியும்.

பனி பாறைகள் நிறைந்த தென் துருவத்திற்கு பயணிக்கும் Himalayan! ரைடர் சந்தோஷ் உடனான நேரடி உரையாடல்! சிறப்பு தொகுப்பு!

இதுபோன்று பல்வேறு சுவாரஷ்ய நிகழ்வுகளை தென் துருவ பயணத்திற்கு முன்னர் சந்தோஷ் விஜய் குமார் எங்களிடம் பகிர்ந்துக் கொண்டார். இந்த நிகழ்வு பற்றிய முழுமையான தகவல்கள் அடங்கிய வீடியோ மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அதில், இன்னும் பல சுவாரஷ்யமான கேள்விகளுக்கான பதில்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Royal enfield south pole expedition conversation with rider santhosh vijay kumar here is a video
Story first published: Saturday, December 4, 2021, 17:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X