இதுதான் ராயல் என்பீல்டு ‘காட்ஸில்லா’!! பெயருக்கு ஏற்ப செம்மையா இருக்கு!

காட்ஸில்லா என்ற பெயரில் ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இணையத்தை கலக்கி வரும் இந்த மாடிஃபை பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இதுதான் ராயல் என்பீல்டு ‘காட்ஸில்லா’!! பெயருக்கு ஏற்ப செம்மையா இருக்கு!

ராயல் என்பீல்டு பைக்குகள் மாடிஃபை செய்வதற்கு மிகவும் ஏற்றவை என்பதற்கு உதாரணமாக ஏகப்பட்ட மாடிஃபை பைக்குகளை இதற்கு முன் பார்த்துள்ளோம். இந்த வகையில் மாடிஃபை செய்யப்பட்ட தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிளை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

இதுதான் ராயல் என்பீல்டு ‘காட்ஸில்லா’!! பெயருக்கு ஏற்ப செம்மையா இருக்கு!

ஹாலிவுட் பேட்மேன் படங்களில் வரும் மோட்டார்சைக்கிள்களை போன்று காட்சித்தரும் இந்த மாடிஃபை தண்டர்பேர்டு பைக்கிற்கு ‘காட்ஸில்லா' என பெயர் வைத்துள்ளனர். இந்த மோட்டார்சைக்கிளை டெல்லியை சேர்ந்த நீவ் மோட்டார்சைக்கிள்ஸ் என்ற நிறுவனம் வடிவமைத்து தயாரித்துள்ளது.

Image Courtesy: Neev Motorcycles

இதுதான் ராயல் என்பீல்டு ‘காட்ஸில்லா’!! பெயருக்கு ஏற்ப செம்மையா இருக்கு!

இத்தனைக்கும் நாட்டின் தலைநகரில் உருவாக்கப்பட்டாலும், இந்த மாடிஃபை பைக்கின் தயாரிப்பிற்கு பல மணிநேரங்கள் தேவைப்பட்டுள்ளது. பைக்கில் முக்கியமான மாற்றமாக எதை சொல்வது என்றே தெரியவில்லை. ஏனெனில் அத்தனையும் சிறப்பானதாக உள்ளது.

இதுதான் ராயல் என்பீல்டு ‘காட்ஸில்லா’!! பெயருக்கு ஏற்ப செம்மையா இருக்கு!

பெட்ரோல் டேங்கில் இருந்து ஆரம்பிப்போம். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் டேங்க் "காட்ஸிலா" முத்திரையை ஆங்கிலத்தில் கொண்டுள்ளது. பெட்ரோல் டேங்க்கை தொடர்ந்து ஒற்றை இருக்கை உள்ளது.

இதுதான் ராயல் என்பீல்டு ‘காட்ஸில்லா’!! பெயருக்கு ஏற்ப செம்மையா இருக்கு!

இருக்கை மிகவும் தாழ்வாக பொருத்தப்பட்டுள்ளதினாலும், பின் இருக்கை சற்று தொலைவாக வழங்கப்பட்டுள்ளதினாலும், இந்த பைக்கில் செல்லும் எவர் ஒருவருக்கும் ரோலர்-கோஸ்டர் உணர்வு ஏற்படும் என்பது உறுதி. இதற்காக மத்திய பாடி ஃப்ரேம்கள் மாடிஃபை செய்யப்பட்டுள்ளன.

இதுதான் ராயல் என்பீல்டு ‘காட்ஸில்லா’!! பெயருக்கு ஏற்ப செம்மையா இருக்கு!

மேலும் தாழ்வான இருக்கை அமைப்பிற்கு ஏற்ப பின்பக்க சஸ்பென்ஷனும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இருக்கையை அடுத்துள்ள பைக்கின் இறுதிமுனை சுறா துடுப்பு வடிவில் உள்ளது. பின்பக்கத்தில் நம்பர் ப்ளேட் பைக்கின் நேர்கோட்டில் இருந்து சற்று விலக்கி கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதுதான் ராயல் என்பீல்டு ‘காட்ஸில்லா’!! பெயருக்கு ஏற்ப செம்மையா இருக்கு!

முன்பக்கத்தில் பஜாஜ் பல்சர் என்எஸ்200-இன் ஹெட்லைட் & டர்ன் இண்டிகேட்டர்களை நீவ் மோட்டார்சைக்கிள் நிறுவனம் பொருத்தியுள்ளது. இத்தகைய ஹெட்லைட்டினால் பைக்கின் முரட்டுத்தனமான தோற்றம் மேலும் மெருகேறியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதுதான் ராயல் என்பீல்டு ‘காட்ஸில்லா’!! பெயருக்கு ஏற்ப செம்மையா இருக்கு!

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு முழு-நீள க்ரூஸர் மோட்டார்சைக்கிள் கிடையாது. ஆனால் இந்த மாடிஃபை தண்டர்பேர்டு பைக் சற்று சாய்வாக பொருத்தப்பட்ட ஃபோர்க் கெய்டர்களுடன் உள்ள முன்பக்க சஸ்பென்ஷன் அமைப்பினால் பாப்பர் தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

இதுதான் ராயல் என்பீல்டு ‘காட்ஸில்லா’!! பெயருக்கு ஏற்ப செம்மையா இருக்கு!

சக்கரத்துடன் பைக்கை இணக்கும் முன் பாகங்கள் சற்று திருத்தியமைக்கப்பட, பின்பக்கத்தில் முற்றிலும் நீக்கப்பட்டு, புதியவைகளாக வழங்கப்பட்டுள்ளன. பைக்கின் இரு பக்கத்திலும் ஸ்போக்டு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் பின்பக்கத்தில் சக்கரம் அளவில் சற்று சிறியதாக உள்ளது.

இதுதான் ராயல் என்பீல்டு ‘காட்ஸில்லா’!! பெயருக்கு ஏற்ப செம்மையா இருக்கு!

அதற்கேற்ப அகலமான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் வளைவில்லாத ஹேண்டில்பார், சிறிய அளவில் எக்ஸாஸ்ட் குழாய், சற்று முன்னோக்கி வழங்கப்பட்ட ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி, பின்சக்கர கட்டியணைப்பான் மற்றும் என்ஜினிற்கு அடியில் வழங்கப்பட்டுள்ள பெல்லி பேன் பைக்கின் மற்ற சிறப்பம்சங்களாக சொல்லலாம்.

இதுதான் ராயல் என்பீல்டு ‘காட்ஸில்லா’!! பெயருக்கு ஏற்ப செம்மையா இருக்கு!

இவை மட்டுமின்றி பைக்கின் என்ஜின் அமைப்பிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது, என்ஜின் அமைப்பில் அதிக செயல்திறன்மிக்க காற்று வடிக்கட்டி வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய மாடிஃபை மாற்றங்களை ஏற்றுள்ள தண்டர்பேர்டு பைக் மாடல் தற்சமயம் விற்பனையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Royal Enfield Godzilla By Neev Motorcycles – Based On Thunderbird.
Story first published: Sunday, May 23, 2021, 20:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X