ராயல் என்பீல்டின் ‘தி பிக்னிக் ஸ்பெஷல்’ & ‘பெர்த் ஆஃப் தி புல்லட்’ ஹெல்மெட்கள்!! விற்பனைக்கு அறிமுகம்

தி பிக்னிக் ஸ்பெஷல் & பெர்த் ஆஃப் தி புல்லட் -என்ற பெயர்களில் இரு புதிய ஹெல்மெட்களை ராயல் என்பீல்டு நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. இந்த இரு புதிய ராயல் என்பீல்டு ஹெல்மெட்களை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

உலகின் பழம்பெறும் மோட்டார்சைக்கிள் பிராண்ட்களுள் ஒன்றான ராயல் என்பீல்டு வெற்றிக்கரமாக தனது 120 வருடங்களை நிறைவு செய்கிறது. இதனை கொண்டாடும் விதமாகவே மொத்தம் 12 விதமான நேர்த்தியான டிசைன்களில் லிமிடெட்-எடிசன் ஹெல்மெட்களை வாரத்திற்கு இரண்டு என்கிற வீதத்தில் ராயல் என்பீல்டு அறிமுகம் செய்து வருகிறது.

12 விதமான டிசைன்களில் ஹெல்மெட்கள் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 12 தசாப்தங்களை குறிக்கின்றன. அதாவது இந்த 120 வருடங்களில் ஒவ்வொரு 10 வருடங்களிலும் சந்தையில் ட்ரெண்டாக இருந்த டிசைன்களை குறிப்பதாகும். இதன்படி சில தினங்களுக்கு முன்பு, தி ஒரிஜினல் ராயல் என்பீல்டு மற்றும் வி ட்வின் என்ற ஹெல்மெட்களை ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. இவை இரண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் அன்றே விற்று தீர்ந்தன.

இதனை தொடர்ந்து தற்போது மேலும் இரு புதிய ஹெல்மெட்களை ராயல் என்பீல்டு அறிமுகப்படுத்தி உள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் 1901இல் முதன்முதலாக இங்கிலாந்தில் தனது செயல்பாடுகளை துவங்கியது. கடந்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹெல்மெட்கள் 1901-இல் இருந்து 1920 வரையிலான ஆண்டுகளில் பிரபலமாக இருந்த ஹெல்மெட் டிசைன்களில் வடிவமைக்கப்பட்டு இருந்தன.

புதிய தி பிக்னிக் ஸ்பெஷல் ஹெல்மெட் ஆனது 1920-இல் இருந்து 1930ஆம் ஆண்டு வரையிலான டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. இது வருகிற அக்டோபர் 30ஆம் தேதியில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. மற்றொரு மாடலான, பெர்த் ஆஃப் தி புல்லட் ஹெல்மெட் 1930களில் பிரபலமாக இருந்த ஹெல்மெட்களின் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அக்.31இல் இருந்து விற்பனைக்கு கிடைக்குமாம்.

ராயல் என்பீல்டு பிரபலமான மாடல்களுள் ஒன்றாக விளங்கும் புல்லட்-ஐ 1930களில் தான் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தான் 'பெர்த் ஆஃப் தி புல்லட்' என்ற பெயரினை ராயல் என்பீல்டு நிறுவனம் சூட்டியுள்ளது. இந்த பிரத்யேகமான ஹெல்மெட்களை வாங்குவது சற்று கடினம் தான். ஏனெனில் இவை இரண்டும் தலா 120 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன.

ஆனால் மொத்தம் 12 லிமிடெட் எடிசன் ஹெல்மெட்களை (இதுவரையில் 4 அறிமுகமாகியுள்ளன) அறிமுகப்படுத்த ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளதால், மொத்தம் 1440 யூனிட்களில் இந்த சிறப்பு பதிப்பு ஹெல்மெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே சற்று தீவிரமாக முயற்சி செய்தால் இந்த 1440 யூனிட்களில் ஏதேனும் ஒரு யூனிட்டை சொந்தமாக்கலாம்.

ஐஎஸ்ஐ, டாட் மற்றும் இசிஇ சான்றளிக்கப்பட்ட பிக்னிக் ஸ்பெஷல் ஆனது முழு-முக ஹெல்மெட் ஆகும். அதிக பாதுகாப்பிற்காக மூச்சுத்திணறல், கருத்து திரை மற்றும் டி வளையத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹெல்மெட்டின் உட்புறம் பாலிஜீன் நுண்ணுயிர்-எதிர்ப்பு பாகங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வெளிப்பக்கத்தில் ஸ்விட்ச் உடன் சன் விஸர் இந்த ஹெல்மெட்டில் வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் புகை-எதிர்ப்பு படலத்துடன் முக்கியமான விஸரையும் இது கொண்டுள்ளது. தி பிக்னிக் ஸ்பெஷல் ஹெல்மெட்டின் விலையினை ரூ.8,450 ஆக ராயல் என்பீல்டு நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த ஹெல்மெட்டின் பின்பக்கத்தில் இங்கிலாந்தில் 1901இல் ராயல் என்பீல்டு நிறுவனம் துவங்கும்போது இருந்த சூழலை படமாக கொடுத்துள்ளனர்.

பெர்த் ஆஃப் தி புல்லட் ஹெல்மெட்டும் ஐஎஸ்ஐ, டாட், இசிஇ சான்றிதழ்களை பெற்றுள்ளது. இது முழு-முக ஹெல்மெட் கிடையாது. இதில் கீழ் தாடை உள்பட முக்கால்வாசி முகம் வெளியே தெரியும். பாதுகாப்பிற்கு குமிழ் போன்ற வடிவிலான கண்ணாடி இந்த ஹெல்மெட்டில் வழங்கப்பட்டுள்ளது. உள்ளே பாலிஜீன் துணி உள்ளீடுகளுடன் பிரீமியம் தரத்திலான லெதர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மேல்கூடு ஆனது எடை குறைவான ஃபைபர் கண்ணாடி பாகங்களினால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் ஓரங்கள் வெறும் கையால் தையிடப்பட்ட லெதரால் மடிக்கப்பட்டுள்ளன. பெர்த் ஆஃப் தி புல்லட்டின் விலை ரூ.6,950 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுதான், ராயல் என்பீல்டு புல்லட் பைக்குகளின் பிறப்பினை நினைவுக்கூறும் விதமாக இந்த ஹெல்மெட் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், 1930களுக்கு பிறகே ராயல் என்பீல்டு வளர்ச்சி உலகெங்கிலும் புல்லட் பைக்குகளினால் சூடுப்பிடிக்க ஆரம்பித்தது.

Most Read Articles
English summary
Royal Enfield unveils ‘The Picnic Special’ and ‘Birth of the Bullet’ helmets from its limited edition range to mark its 120th anniversary
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X