Simple One-க்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக ரேஞ்ஜ் தந்தா யாருதான் வாங்காம இருப்பா?

Simple One எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிக்கு மிக அதிக அளவில் புக்கிங் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

Simple One-க்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக ரேஞ்ஜ் தந்தா யாருதான் வாங்காம இருப்பா?

Simple Energy நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டரான Simple One மாடலுக்கு இந்தியாவில் மிக அதிகளவில் புக்கிங் கிடைத்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Simple One-க்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக ரேஞ்ஜ் தந்தா யாருதான் வாங்காம இருப்பா?

மிக பெரிய எதிர்பார்ப்பை இந்த மின் வாகனம் ஏற்படுத்தி வந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 15ம் தேதி அன்று அறிமுகமாகியது. இது இந்திய மின் வாகன பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த நிலையிலேயே மின் வாகனத்திற்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு குறித்த தகவலை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Simple One-க்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக ரேஞ்ஜ் தந்தா யாருதான் வாங்காம இருப்பா?

Simple Energy வெளியிட்டிருக்கும் தகவலின்படி Simple One எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 30 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங் கிடைத்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதுவரை விளம்பரம் செய்யும் நோக்கில் Simple Energy நிறுவனம் எந்தவொரு முயற்சியிலும் மேற்கொள்ளாத நிலையில் இத்தகைய அமோக வரவேற்பினை எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியர்கள் கொடுத்திருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Simple One-க்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக ரேஞ்ஜ் தந்தா யாருதான் வாங்காம இருப்பா?

ஒரே நேரத்தில் அதிகப்படியானோர் குவிந்ததால் அதிகாரப்பூர்வ வலைதளம்ம லேசான சிக்கல்களைப் பெற்றதாக கூறப்படுகின்றது. இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு தற்போது புக்கிங் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துடன், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் Simple One எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவரி செய்வதற்காக புக்கிங் பணிகளை தீவிரப்படுத்தியிருப்பதாக நிறுவம் தெரிவித்துள்ளது.

Simple One-க்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக ரேஞ்ஜ் தந்தா யாருதான் வாங்காம இருப்பா?

தற்போது ரூ. 1,947 என்ற குறைந்த முன் தொகையில் Simple One எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன் பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு குறித்து நிறுவனத்தின், நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சுஹாஸ் ராஜ்குமார் கூறியதாவது, "வெளியீடு செய்யப்பட்ட நாளிலிருந்து மாபெறும் வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதனால் நாங்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றோம். உள்நாட்டு தயாரிப்பு என்பதாலும், தயாரிப்பில் அதிக நம்பிக்கை இருப்பதாலும் பேராதரவு கிடைத்து வருகின்றது" என்றார்.

Simple One-க்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக ரேஞ்ஜ் தந்தா யாருதான் வாங்காம இருப்பா?

Simple One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் Ola நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இந்தியாவில் களமிறக்கப்பட்டிருக்கின்றது. Ola நிறுவனம் S1 மற்றும் S1 Pro எனும் இரு விதமான தேர்வுகளில் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இவற்றிற்கு போட்டியாகவே அதிக ரேஞ்ஜ் திறன் வசதியுடன் Simple One விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

Simple One-க்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக ரேஞ்ஜ் தந்தா யாருதான் வாங்காம இருப்பா?

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒற்றை முழுமையான சார்ஜில் 240 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனுடன் களமிறங்கியிருக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச ரேஞ்ஜே 180 கிமீ தூரம் ஆகும். இதைக் காட்டிலும் 60 கிமீ அதிக பயண தூரத்துடன் Simple One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஓர் இந்திய தயாரிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கூடுதல் சிறப்பு தகவல் ஆகும்.

Simple One-க்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக ரேஞ்ஜ் தந்தா யாருதான் வாங்காம இருப்பா?

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை Simple Energy நிறுவனம் முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு பாகங்களை உருவாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.8kWh திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே ஈக்கோ மோட்டில் வைத்து இயக்கும்போது 240 கிமீ தூரம் வரை ரேஞ்ஜை வழங்குகின்றது.

Simple One-க்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக ரேஞ்ஜ் தந்தா யாருதான் வாங்காம இருப்பா?

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 100 கிமீ வேகம் ஆகும். மேலும், இது வெறும் 3.6 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 50 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதன் பேட்டரிகள் கழட்டி மாட்டும் வசதிக் கொண்டவை ஆகும். ஆகையால், தேவைப்படும் இடத்திற்கே எடுத்துச் சென்று பேட்டரிகளை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

Simple One-க்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக ரேஞ்ஜ் தந்தா யாருதான் வாங்காம இருப்பா?

இதுமட்டுமின்றி, தொடுதிரை, நேவிகேஷன், ப்ளூடூத் இணைப்பு என பல்வேறு சிறப்பு வசதிகளுடன் Simple One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் ஆரம்ப நிலை மாடலின் விலை ரூ. 1.10 லட்சம் ஆகும். இதன் உயர் நிலைக்கு ரூ. 1.20 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் கட்டமாக நாட்டின் 13 நகரங்களில் மட்டுமே Simple One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டுள்ளது.

Simple One-க்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக ரேஞ்ஜ் தந்தா யாருதான் வாங்காம இருப்பா?

அதில், தமிழ்நாடும் ஒன்றாகும். நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தமிழகத்தின் ஓசூரில் 2 லட்சம் சதுர அடியில் உருவாகி வருவது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள முக்கிய பகுதிகளில் தனது மின்வாகன் சார்ஜிங் மையங்களையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பணியில் Simple Energy களமிறங்கியிருக்கின்றது.

Simple One-க்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... இவ்ளோ அதிக ரேஞ்ஜ் தந்தா யாருதான் வாங்காம இருப்பா?

இந்த சிறப்பு மின்சார்ஜிங் மையங்களில் வைத்து Simple One எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்தால் ஒரு நிமிடத்தில் 2.5 கிமீ தூரம் பயணிப்பதற்கான சார்ஜை ஏற்றிக் கொள்ள முடியும். இத்தகைய சிறப்பு வாயந்த எலெக்ட்ரிக் வாகன கட்டமைப்பு வசதிகளையே நிறுவனம் நாட்டில் உருவாக்கி வருகின்றது.

Most Read Articles
English summary
Simple energy receives 30000 pre bookings for The simple one ev
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X