தர்மபுரியில் ரூ.2500 கோடியில் அமையும் சிம்பிள் எனர்ஜியின் பிரம்மாண்ட தொழிற்சாலை!! 2023இல் திறக்கப்படுமா?

தமிழகத்தில் புதிய தொழிற்சாலையை நிறுவுவதற்காக 330 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளதாக சிம்பிள் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தர்மபுரியில் ரூ.2500 கோடியில் அமையும் சிம்பிள் எனர்ஜியின் பிரம்மாண்ட தொழிற்சாலை!! 2023இல் திறக்கப்படுமா?

இந்தியாவில் தற்சமயம் வேகமாக வளர்ந்து இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் ஒன்றாக சிம்பிள் எனர்ஜி உள்ளது. கடந்த ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தின் போது அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக சிம்பிள் ஒன் என்கிற மாடலை அறிமுகப்படுத்திய இந்த நிறுவனம் இந்தியாவில் தனது சந்தையை விரிவுப்படுத்த பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்ட வண்ணம் உள்ளது.

தர்மபுரியில் ரூ.2500 கோடியில் அமையும் சிம்பிள் எனர்ஜியின் பிரம்மாண்ட தொழிற்சாலை!! 2023இல் திறக்கப்படுமா?

இந்த வகையில் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிம்பிள் எனர்ஜி நமது தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையினை நிறுவவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. டிவிஎஸ், ஓலா போன்ற நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை அமைத்துள்ள ஓசூரில் சிம்பிள் எனர்ஜி நிறுவனமும் தொழிற்சாலை ஒன்றினை கட்டமைத்து வருகிறது.

தர்மபுரியில் ரூ.2500 கோடியில் அமையும் சிம்பிள் எனர்ஜியின் பிரம்மாண்ட தொழிற்சாலை!! 2023இல் திறக்கப்படுமா?

வருடத்திற்கு 1 மில்லியன் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் அளவிற்கு திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுவரும் இந்த ஓசூர் தொழிற்சாலையில் வாகன தயாரிப்பு பணிகள் அடுத்த 2022ஆம் ஆண்டில் இருந்து துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, அதற்கடுத்த 2023ஆம் ஆண்டில் தர்மபுரியில் ஓர் தொழிற்சாலையினை திறக்க சிம்பிள் எனர்ஜி முனைப்புடன் உள்ளது. இதனை தொழிற்சாலை என சொல்வதை காட்டிலும் பிரம்மாண்ட தொழிற்சாலை என்றுதான் சொல்ல வேண்டும்.

தர்மபுரியில் ரூ.2500 கோடியில் அமையும் சிம்பிள் எனர்ஜியின் பிரம்மாண்ட தொழிற்சாலை!! 2023இல் திறக்கப்படுமா?

ஏனெனில், சிம்பிள் எனர்ஜியின் ஓசூர் தொழிற்சாலை 1 மில்லியன் எலக்ட்ரிக் 2-வீலர்ஸை தயாரிக்கும் திறன் உடன் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த தர்மபுரி தொழிற்சாலையினை அதனை காட்டிலும் சுமார் 12 மடங்கு அதிகமாக 12.5 மில்லியன் (1.25 கோடி) எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் அளவிற்கு பெரியதாக உருவாக்கப்பட உள்ளதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய தொழிற்சாலைக்காக இந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தற்போது வரையில் 21 மில்லியன் டாலர்களை சேகரித்துள்ளது.

தர்மபுரியில் ரூ.2500 கோடியில் அமையும் சிம்பிள் எனர்ஜியின் பிரம்மாண்ட தொழிற்சாலை!! 2023இல் திறக்கப்படுமா?

அடுத்த முதலீட்டு சுற்றில் 3 இலக்க மில்லியன் டாலர்களை எட்டிவிடுவோம் என சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் சுஹாஸ் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். 25 வயதில் சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் துணை நிறுவனராகவும் விளங்குகின்ற சுஹாஸ் ராஜ்குமார் இதுகுறித்து அளித்த பேட்டியில், "இவி உற்பத்தியில் 99% சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் தற்போதைய சூழலில், பேட்டரி தொகுப்பு மற்றும் மோட்டார் உட்பட அனைத்தையும் உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாங்கள் நிறுவனத்தை நிறுவினோம்.

தர்மபுரியில் ரூ.2500 கோடியில் அமையும் சிம்பிள் எனர்ஜியின் பிரம்மாண்ட தொழிற்சாலை!! 2023இல் திறக்கப்படுமா?

எல்லாவற்றையும் தாங்களே செய்து அதை சரியாக செய்யும் டெஸ்லா மற்றும் ரிவியனின் காலடி சுவடுகளை பின்பற்ற விரும்புகிறோம்" என்றார். 2023இல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற இந்த இரண்டாவது தமிழக தொழிற்சாலைக்காக தர்மபுரி மாவட்டத்தில் 600 ஏக்கர் நிலங்களை வாங்க சிம்பிள் எனர்ஜி திட்டமிட்டுள்ளது. இந்த 600 ஏக்கர் பரப்பளவில் தான் தொழிற்சாலை மட்டுமின்றி, தொழிற்நுட்ப ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையங்களும், சோதனை பகுதிகளையும் இந்த நிறுவனம் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தர்மபுரியில் ரூ.2500 கோடியில் அமையும் சிம்பிள் எனர்ஜியின் பிரம்மாண்ட தொழிற்சாலை!! 2023இல் திறக்கப்படுமா?

ஏற்கனவே கூறியதுதான், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு மெல்ல மெல்ல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இருந்து ஆரம்பித்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஓசூரில் உலகின் மிக பெரிய இவி 2-வீலர்ஸ் தொழிற்சாலையை உருவாக்கியுள்ளது. 90% மகளிரால் இயங்கும் இந்த தொழிற்சாலையின் மூலம் வருடத்திற்கு 10 மில்லியன் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிக்கலாம்.

தர்மபுரியில் ரூ.2500 கோடியில் அமையும் சிம்பிள் எனர்ஜியின் பிரம்மாண்ட தொழிற்சாலை!! 2023இல் திறக்கப்படுமா?

இருப்பினும் உலகளாவிய குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால், வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் தனது எஸ்1 இ-ஸ்கூட்டர்களை டெலிவிரி செய்ய முடியாமல் ஓலா நிறுவனம் போராடி வருகிறது. இதன் தொழிற்சாலை வருடத்திற்கு 10 மில்லியன் இவி-களை தயாரிக்கும் அளவிற்கு இருந்தாலும், சிம்பிள் ஒன் இதனை காட்டிலும் சற்று அதிகமாக இவி-களை தயாரிக்கக்கூடிய தொழிற்சாலையை நிறுவுவதால், வரும் வருடங்களில் உலகின் மிக பெரிய இவி தொழிற்சாலையாக சிம்பிள் எனர்ஜியின் தர்மபுரி தொழிற்சாலை விளங்கலாம்.

தர்மபுரியில் ரூ.2500 கோடியில் அமையும் சிம்பிள் எனர்ஜியின் பிரம்மாண்ட தொழிற்சாலை!! 2023இல் திறக்கப்படுமா?

கடந்த ஆகஸ்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சிம்பிள் ஒன் இந்தியாவில் நீண்ட ரேஞ்சை கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்குகிறது. இந்திய சந்தையில் மட்டுமின்றி, சற்று மாற்றியமைக்கப்பட்டு வெளிநாட்டு சந்தைகளிலும் சிம்பிள் ஒன் விற்பனை செய்யப்பட உள்ளது. குறைக்கடத்திகளுக்கு ஏற்பட்டுவரும் தேவையை நிவர்த்தி செய்ய, டெஸ்ஸஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ், ரெனெசாஸ் எலக்ட்ரானிக்ஸ் கார்பிரேஷன் மற்றும் மற்ற இரு குறைக்கடத்தி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்துள்ளதாக சிம்பிள் எனர்ஜியின் சிஇஓ தெரிவித்துள்ளார்.

Most Read Articles
English summary
Simple Energy aims to lead Indian EV race by building the world’s largest electric two-wheeler factory, company to invest 2500 cr in next 5 years.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X