மத்த குளோவ்ஸ் மாதிரி இல்ல... கையில மாட்டி இருந்தாலும் செல்போன் பயன்படுத்த முடியும்! விலை எவ்ளோ தெரியுமா?

சிறப்பு வசதிகள் கொண்ட கையுறையை பிரபல நிறுவனம் ஒன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த கையுறையின் விலை மற்றும் சிறப்பு பண்புகள் என்ன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மத்த குளோவ்ஸ் மாதிரி இல்ல... கையில மாட்டி இருந்தாலும் செல்போன் பயன்படுத்த முடியும்! விலை எவ்ளோ தெரியுமா?

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பை வழங்கும் அம்சங்களில் ஹெல்மெட்டிற்கு அடுத்தபடியாக ரைடிங் கியர்கள் இருக்கின்றன. அதாவது, பாதுகாப்பு உடைகள் இருக்கின்றன. இவை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறுதலாகவே, விபத்தின் காரணமாகவோ தவறி விழும்போது உடல் பாகங்களுக்கு பாதுகாப்பாக அரணாய் அமையும்.

மத்த குளோவ்ஸ் மாதிரி இல்ல... கையில மாட்டி இருந்தாலும் செல்போன் பயன்படுத்த முடியும்! விலை எவ்ளோ தெரியுமா?

அதாவது, சிராய்ப்பு மற்றும் பெரும் காயங்களில் இருந்து இவை பாதுகாக்கும். எனவேதான் இருசக்கர வாகன ஆர்வலர்கள் ஹெல்மெட்டுகளுக்கு கொடுப்பதைப் போலவே ரைடிங் கியர்களுக்கும் (ஜாக்கெட், குளோவ்ஸ், காலணி) முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

மத்த குளோவ்ஸ் மாதிரி இல்ல... கையில மாட்டி இருந்தாலும் செல்போன் பயன்படுத்த முடியும்! விலை எவ்ளோ தெரியுமா?

இந்த நிலையில் ரைடிங் கியர் பிரியர்களைக் கவரும் வகையில் ஓர் சிறப்பு வசதிக் கொண்ட குளோவ்ஸை பிரபல நிறுவனம் ஒன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஹெல்மெட் மற்றும் ரைடிங் கியர் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஸ்டீல்பேர்டு (Steelbird) நிறுவனம், புதிய குளோவ்ஸ் (கையுறை) ஒன்றை ரைடர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்த குளோவ்ஸ் மாதிரி இல்ல... கையில மாட்டி இருந்தாலும் செல்போன் பயன்படுத்த முடியும்! விலை எவ்ளோ தெரியுமா?

இந்த குளோவ்ஸானது தொடுதிரையைக் கையாள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான செல்போன்கள் தொடுதிரை வசதி உடனே விற்பனைக்கு வருகின்றன. இவற்றை கையுறையை அணிந்துக் கொண்டு கையாள்வது சிரமமானது. ஏனெனில், தொடுதிரைகள் விரல்களின் நெப்பமான தோல்களால் தொட்டால் மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

மத்த குளோவ்ஸ் மாதிரி இல்ல... கையில மாட்டி இருந்தாலும் செல்போன் பயன்படுத்த முடியும்! விலை எவ்ளோ தெரியுமா?

இந்த மாதிரியான சூழ்நிலையில் கையுறைகளை அணிந்துக் கொண்டு செல்போனைப் பயன்படுத்துவது என்பது இயலாத ஒன்றாக இருக்கின்றது. ஆகையால் ஒவ்வொரு முறையும் கையுறை அணிந்துச் செல்லும் ரைடர்கள் அதனைக் கழட்டியே செல்போன் பயன்படுத்துகின்றனர். இந்த அவல நிலையைப் போக்கும் பொருட்டே ஸ்டீல்பேர்டு நிறுவனம் புதிய கையுறையை அறிமுகம் செய்திருக்கின்றது.

மத்த குளோவ்ஸ் மாதிரி இல்ல... கையில மாட்டி இருந்தாலும் செல்போன் பயன்படுத்த முடியும்! விலை எவ்ளோ தெரியுமா?

செல்போன் மட்டுமின்றி சில இருசக்கர வாகனங்களிலும் தொடுதிரை வசதிக் கொண்ட திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுமாதிரியான அம்சங்களைப் பயன்படுத்த நிச்சயம் இந்த கையுறை உதவும் என தெரிகின்றது. ஸ்டீல்பேர்டு நிறுவனம் இப்புதிய கையுறைக்கு இந்திய மதிப்பில் ரூ. 599 விலை நிர்ணயித்துள்ளது.

மத்த குளோவ்ஸ் மாதிரி இல்ல... கையில மாட்டி இருந்தாலும் செல்போன் பயன்படுத்த முடியும்! விலை எவ்ளோ தெரியுமா?

இந்த கையுறை இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். முழுமையாக கையை மூடும் வகையிலும், பாதியாக கையை மூடும் வகையிலும் இந்த கையுறை விற்பனைக்குக் கிடைக்கும். மேலே பார்த்த விலையானது முழுமையாக கைகளை மூடும் குளோவ்ஸின் விலை ஆகும். பாதியாகக் கைகளை மூடக் கூடிய கையுறையின் விலை ரூ. 529 ஆகும்.

மத்த குளோவ்ஸ் மாதிரி இல்ல... கையில மாட்டி இருந்தாலும் செல்போன் பயன்படுத்த முடியும்! விலை எவ்ளோ தெரியுமா?

இத்தகைய குறைந்தபட்ச விலையிலேயே விபத்து போன்ற அசம்பாவிதங்களில் கைகளையும், கை விரல்களையும் காக்கக் கூடிய கையுறையை ஸ்டீல்பேர்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டார்சைக்கிள் பயனர்கள் மட்டுமின்றி ஸ்கூட்டர் பயனர்களும் இந்த கையுறையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்த குளோவ்ஸ் மாதிரி இல்ல... கையில மாட்டி இருந்தாலும் செல்போன் பயன்படுத்த முடியும்! விலை எவ்ளோ தெரியுமா?

இந்த கையுறை மிக சிறந்த கிரிப்பான அனுபவத்தையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. சிறந்த ஹேண்ட்லிங்கை கவனத்தில் கொண்டு இந்த வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. முழு கைகளையும் மூடக் கூடிய வசதியுடன் கிடைக்கும் கையுறையில் குஷன் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது.

மத்த குளோவ்ஸ் மாதிரி இல்ல... கையில மாட்டி இருந்தாலும் செல்போன் பயன்படுத்த முடியும்! விலை எவ்ளோ தெரியுமா?

பாதியாக மூடக் கூடிய கையுறையை சூயட் பாலிஸ்டர் ஃபேப்ரிக்கைக் கொண்டு நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதன் பின்பக்கத்தில் ரிப்பட் ஃபேப்ரிக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், மிக சிறந்த கிரிப்பிற்காக உள்ளங்கை பக்கத்தில் சிந்தெட்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மத்த குளோவ்ஸ் மாதிரி இல்ல... கையில மாட்டி இருந்தாலும் செல்போன் பயன்படுத்த முடியும்! விலை எவ்ளோ தெரியுமா?

ஆகையால் எந்த நேரத்திலும் இந்த கையுறைகளினால் எரிச்சலான அனுபவம் ஏற்படாது என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மெட்டீரியல்கள் அனைத்து கால நிலைக்கும் ஏற்றது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. நல்ல காற்றோட்டத்தை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மத்த குளோவ்ஸ் மாதிரி இல்ல... கையில மாட்டி இருந்தாலும் செல்போன் பயன்படுத்த முடியும்! விலை எவ்ளோ தெரியுமா?

இதனை மோட்டார்சைக்கிள்களுக்கு மட்டுமின்றி ஜிம், மலை ஏறுதல், சைக்கிளிங் மற்றும் கேம்ப் போன்ற பயணங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஸ்டீல்பேர்டு தெரிவித்துள்ளது. ஆகையால், இந்த கையுறைகள் பல வகைகளில் பயன்படும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

குறிப்பு: முதல் படத்தை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Steelbird launched new riding gloves with touchscreen operation
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X