1கிமீ போக 6 பைசா மட்டுமே! செம்ம லாபம் அடிக்கலாம்... விலையும் அவ்ளோ அதிகம் இல்ல! Stryder இ-பைக்குகள் அறிமுகம்!

பிரபல இ-மிதிவண்டி தயாரிப்பு நிறுவனம் ஸ்ட்ரைடர் (Stryder) கான்டினோ இடிபி 100 (Contino ETB 100) மற்றும் வோல்டிக் 1.7 (Voltic 1.7) ஆகிய இரு இ-பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இவற்றின் விலை மற்றும் சிறப்பு வசதிகள் என்ன என்பது பற்றிய முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒரு கிமீ போக 6 பைசா மட்டுமே... செம்ம லாபம் அடிக்கலாம்... விலையும் அவ்ளோ அதிகம் இல்ல! Stryder இ-பைக்குகள் அறிமுகம்!

டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் (Tata International Limited) நிறுவனத்தின் ஓர் அங்கமாக ஸ்ட்ரைடர் (Stryder) நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனமே மிக சிறந்த பயன்பாட்டை வழங்கக் கூடிய இரு இ-பைக்குகளை (மின்சார மிதிவண்டிகளை) இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

ஒரு கிமீ போக 6 பைசா மட்டுமே... செம்ம லாபம் அடிக்கலாம்... விலையும் அவ்ளோ அதிகம் இல்ல! Stryder இ-பைக்குகள் அறிமுகம்!

கான்டினோ இடிபி 100 (Contino ETB 100) மற்றும் வோல்டிக் 1.7 (Voltic 1.7) ஆகிய இரு இ-பைக்குகளையே ஸ்ட்ரைடர் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கி உள்ளது. இவையிரண்டும் அவற்றிற்கான வகுப்பில் மிக சிறந்தவை (best-in-class) என கூறுமளவிற்கு அதிக தரம் மற்றும் மிக சிறந்த அம்சங்களுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

ஒரு கிமீ போக 6 பைசா மட்டுமே... செம்ம லாபம் அடிக்கலாம்... விலையும் அவ்ளோ அதிகம் இல்ல! Stryder இ-பைக்குகள் அறிமுகம்!

இந்திய இளைஞர்களைக் மையப்படுத்தி இந்த இ-மிதிவண்டி உருவாக்கப்பட்டிருக்கின்றது. இளைஞர்களைக் கவரும் நோக்கில் பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்களை நிறுவனம் இந்த இ-பைக்குகளில் வழங்கியிருக்கின்றது. இதில், கான்டினோ இடிபி100 இ-பைக்கானது எகனாமிக்கல் ரக மின் வாகனமாக காட்சியளிக்கின்றது.

ஒரு கிமீ போக 6 பைசா மட்டுமே... செம்ம லாபம் அடிக்கலாம்... விலையும் அவ்ளோ அதிகம் இல்ல! Stryder இ-பைக்குகள் அறிமுகம்!

இந்தியாவின் அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கும் திறன் கான்டினோ இடிபி100 இ-மிதிவண்டிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், இதனை கேம்-சேஞ்ஜிங் தயாரிப்பாக நிறுவனம் பார்க்க தொடங்கியிருக்கின்றது. வால்டிக் 1.7 நிறுவனத்தின் மற்றுமொரு மிக சிறந்த தயாரிப்பாக காட்சியளிக்கிறது.

ஒரு கிமீ போக 6 பைசா மட்டுமே... செம்ம லாபம் அடிக்கலாம்... விலையும் அவ்ளோ அதிகம் இல்ல! Stryder இ-பைக்குகள் அறிமுகம்!

இந்த இ-மிதிவண்டியில் பவர்ஃபுல் மோட்டார் மற்றும் அதிகமாக உழைக்கும் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இப்பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரங்களே போதும் என கூறப்படுகின்றது. இரு இ-பைக் மாடல்களுக்கும் நிறுவனம் இரண்டு வருடங்கள் வாரண்டியை வழங்கி இருக்கின்றது.

ஒரு கிமீ போக 6 பைசா மட்டுமே... செம்ம லாபம் அடிக்கலாம்... விலையும் அவ்ளோ அதிகம் இல்ல! Stryder இ-பைக்குகள் அறிமுகம்!

இடிபி 100 ஓர் மிக இலகு ரக தயாரிப்பாக காட்சியளிக்கிறது. இதனை வேர்ல்டு கிளாஸ் தயாரிப்பு என கூறுமளவிற்கு பன்முக ரைடிங் மோட்கள் (எலெக்ட்ரிக், ஹைபிரிட் மற்றும் பெடல்), 7 விதமான வேகக் கட்டுப்பாடு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், இதன் ரேஞ்ஜ் திறனும் நம்மைக் கவரும் வகையில் இருக்கின்றது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் முழுமையாக 60 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

ஒரு கிமீ போக 6 பைசா மட்டுமே... செம்ம லாபம் அடிக்கலாம்... விலையும் அவ்ளோ அதிகம் இல்ல! Stryder இ-பைக்குகள் அறிமுகம்!

ஹைபிரிட் மோடில் வைத்து பயணிக்கும் போது மட்டுமே இத்தகைய அதிகபட்ச பயண தூரத்தை நம்மால் பெற முடியும். இதுவே எலெக்ட்ரிக் மோடில் வைத்து இ-பைக்கை ஓட்டினால் வெறும் 30 கிமீ தூரம் வரை மட்டுமே நம்மால் பயணிக்க முடியும். ஒவ்வொரு மோடும் வெவ்வேறு விதமாக மோட்டாரை இயங்க அனுமதிக்கின்றன. ஆகையால், ரேஞ்ஜ் திறன் ஒவ்வொரு மோடுக்கும் மாறுகின்றது.

ஒரு கிமீ போக 6 பைசா மட்டுமே... செம்ம லாபம் அடிக்கலாம்... விலையும் அவ்ளோ அதிகம் இல்ல! Stryder இ-பைக்குகள் அறிமுகம்!

தொடர்ந்து, மிதித்து செல்லும் வசதியும் இந்த இ-பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், சார்ஜ் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயமே தேவையில்லை. மேலும், பெடல் செய்தவாறு இ-பைக்கை பயன்படுத்தும்போது கூடுதல் பயண தூரத்தை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். இந்த இ-பைக்கில் ரோபஸ்ட் ஸ்பெஷல் 6061 அலாய், இரட்டை டிஸ்க் பிரேக், கீ லாக்கட் பேட்டரி, எல்இடி மின் விளக்கு, பேட்டரியை கழட்டி மாட்டுதல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஒரு கிமீ போக 6 பைசா மட்டுமே... செம்ம லாபம் அடிக்கலாம்... விலையும் அவ்ளோ அதிகம் இல்ல! Stryder இ-பைக்குகள் அறிமுகம்!

தண்ணீரால் பாதிக்கப்படாத வண்ணம் இதன் பேட்டரி மற்றும் மின் மோட்டார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், மழை காலத்திலும் தடையின்றி இவ்வாகனங்களை பயன்படுத்த முடியும். இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகள் கான்டினோ இடிபி 100 பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 37,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் நீலம் என இரு வித நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஒரு கிமீ போக 6 பைசா மட்டுமே... செம்ம லாபம் அடிக்கலாம்... விலையும் அவ்ளோ அதிகம் இல்ல! Stryder இ-பைக்குகள் அறிமுகம்!

கான்டினோ இடிபி100 இ-பைக்கைப் போலவே வால்டிக் 1.7 இ-மிதிவண்டியிலும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், ரீசார்ஜபிள் 48வோல்ட் லித்தியம்-அயன் பேட்டரி, 3 மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதி, சிறந்த சஸ்பென்ஷன் ஃபோர்க், சிறந்த பிடிமானத்தை வழங்குகின்ற வகையிலான பெரிய டயர்கள், பவர்ஃபுல் 48V / 260W மின் மோட்டார் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

ஒரு கிமீ போக 6 பைசா மட்டுமே... செம்ம லாபம் அடிக்கலாம்... விலையும் அவ்ளோ அதிகம் இல்ல! Stryder இ-பைக்குகள் அறிமுகம்!

வால்டிக் 1.7 இ-மிதிவண்டிக்கு அறிமுக விலையாக ரூ. 29,995 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை சற்று கூடுதலாக காணப்பட்டாலும், அதில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்களுக்கு ஒர்த்தான இ-மிதிவண்டிகளாக கான்டினோ இடிபி 100 மற்றும் வோல்டிக் 1.7 ஆகிய இரண்டும் காட்சியளிக்கின்றன.

ஒரு கிமீ போக 6 பைசா மட்டுமே... செம்ம லாபம் அடிக்கலாம்... விலையும் அவ்ளோ அதிகம் இல்ல! Stryder இ-பைக்குகள் அறிமுகம்!

அதேவேலையில், இதைப் பயன்படுத்துவதனாலும் நமக்கு கூடுதல் லாபமும் கூட. ஆம் இந்த இ-வண்டிகளை ஒரு கிமீ தூரம் இயக்க வெறும் 6 பைசா செலவாகும். ஆகையால், மிக மிக அதிக லாபத்தை இவ்விரு இ-மிதிவண்டிகளின் பயன்பாட்டில் வாயிலாக நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

ஒரு கிமீ போக 6 பைசா மட்டுமே... செம்ம லாபம் அடிக்கலாம்... விலையும் அவ்ளோ அதிகம் இல்ல! Stryder இ-பைக்குகள் அறிமுகம்!

தற்போது இருக்கும் பெட்ரோல் விலைவாசியில் ஒரு கிமீ தூரம் ஓர் பைக் அல்லது ஸ்கூட்டரை இயக்க மூன்று ரூபாய்க்கும் அதிகமாக நாம் செலவிட வேண்டியிருக்கின்றது. ஆகையால், இதுபோன்று இ-மிதிவிண்டிகளின் இயக்கத்திற்கு மாறுவதன் வாயிலாக பல நூறு அல்லது சில ஆயிரங்களை நம்மால் ஒவ்வொரு மாதமும் சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Stryder launched contino etb 100 and voltic 1 7 e cycles in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X