‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்!! ரூ.6,500இல் இருந்து விலைகள்

ஸ்டூட்ஸ் நிறுவனம் மோட்டார்சைக்கிள் ரைடிங் ஜாக்கெட்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்டூட்ஸ் ஜாக்கெட்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்!! ரூ.6,500இல் இருந்து விலைகள்

இருசக்கர வாகனங்களுக்கான ஹெல்மெட் தயாரிப்பில் பிரபலமான நிறுவனமாக விளங்கும் ஸ்டூட்ஸின் இந்த புதிய மோட்டார்சைக்கிள் ரைடிங் ஜாக்கெட்களின் விலைகள் ரூ.6,500-இல் இருந்து ஆரம்பிக்கின்றன.

பாதுகாப்பான ஜாக்கெட்களாக உருவாக்கப்பட்டுள்ள இவை காற்று புகுந்து செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஸ்டூட்ஸ் ஜாக்கெட்கள் வெயில் காலத்திலும் அணிந்து இருப்பவரை காற்றோட்டமாக வைத்திருக்கும்.

‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்!! ரூ.6,500இல் இருந்து விலைகள்

மேலும் இந்த ஜாக்கெட்களின் உட்புற வெப்ப லைனரை வெயில் அதிகமாக இருக்கும் சமயங்களில் தேவை இல்லையென்றால் நீக்கி கொள்ளலாம். இரு விதமான டிசைன்களில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்டூட்ஸ் மோட்டார்சைக்கிள் ரைடிங் ஜாக்கெட்களில் ஒன்று கருப்பு நிறத்திலும், மற்றொன்று பச்சை-கருப்பு கலந்த நிறத்திலும் உள்ளது.

‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்!! ரூ.6,500இல் இருந்து விலைகள்

இந்த புதிய மோட்டார்சைக்கிள் ஜாக்கெட்கள் அறிமுகப்படுத்தியது குறித்து ஸ்டூட்ஸ் ஆக்ஸஸரீஸின் நிர்வாக இயக்குனர் சித்தார்தா பூஷன் குரானா கருத்து தெரிவிக்கையில், எங்களது இருசக்கர வாகன ஆக்ஸஸரீகள், நிறுவனத்தின் மொத்த விற்பனையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.

‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்!! ரூ.6,500இல் இருந்து விலைகள்

மேலும் மோட்டார்சைக்கிள் சவாரி ஜாக்கெட்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான மற்றும் மேம்பட்ட பயண அனுபவத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். புதிய ஜாக்கெட்கள் நிலையானவை மற்றும் பாதுகாப்பை வழங்கக்கூடியவை.

நாட்டில் பாதுகாப்பான சவாரி கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் இந்த ஜாக்கெட்கள் தொழில்முறை ரைடர்ஸை பூர்த்தி செய்வது மட்டுமில்லாமல், தினசரி பயணத்திற்கும் பயன்படுத்தலாம் என கூறினார். ஸ்டூட்ஸின் இந்த ஜாக்கெட்கள் எந்தவொரு ஓட்டுனருக்கும் கச்சிதமாக பொருந்தும்.

‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்!! ரூ.6,500இல் இருந்து விலைகள்

ஏனெனில் உடற்அமைப்பிற்கு ஏற்றப்படி அட்ஜெஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. சாவி, மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை வைத்து கொள்ள பாக்கெட்கள் ஆங்காங்கே வழங்கப்பட்டுள்ளன. ஜாக்கெட்டில் கழுத்து பகுதியில், தோல்பட்டை பகுதியில், எல்போ பகுதியில் பாதுகாப்பான்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
Studds launches motorcycle riding jackets range.
Story first published: Tuesday, July 27, 2021, 23:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X