விற்பனைக்கு வரவிருக்கும் 3 புதிய சீன எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! சூப்பர் சோகோ பிராண்டில் வருகின்றன...

சீனாவை சேர்ந்த சூப்பர் சோகோ நிறுவனம் இரு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஒரு இ-ஸ்கூட்டர் என அதன் புதிய மூன்று தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனைக்கு வரவிருக்கும் 3 புதிய சீன எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! சூப்பர் சோகோ பிராண்டில் வருகின்றன...

சூப்பர் சோகோ, அதன் அடுத்த நாக்டு இ-பைக்கை கடந்த 2021 ஜனவரி மாதத்திலும், அதனை தொடர்ந்து புதிய ரெட்ரோ-ஸ்டைல் மோட்டார்சைக்கிளை சில வாரங்களுக்கு முன்பும் வாடிக்கையாளர்களுக்கு வெளிக்காட்டி இருந்தது.

விற்பனைக்கு வரவிருக்கும் 3 புதிய சீன எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! சூப்பர் சோகோ பிராண்டில் வருகின்றன...

இந்த நிலையில்தான் தற்போது சூப்பர் சோகோ டிசி வாண்டரர் மற்றும் டிஎஸ் ஹண்டர் என்ற பெயர்களில் இரு எலக்ட்ரிக் நாக்டு பைக்குகளும், சியுமினி என்ற பெயரில் இ-ஸ்கூட்டரும் இந்த சீன பிராண்டில் இருந்து வெளிவந்துள்ளன.

விற்பனைக்கு வரவிருக்கும் 3 புதிய சீன எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! சூப்பர் சோகோ பிராண்டில் வருகின்றன...

சூப்பர் சோகோவின் ரெட்ரோ-ஸ்டைல் பைக்குகள் அடங்கிய டிசி லைன்அப்-இல் இணையவுள்ள டிசி வாண்டரர் பைக் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப், எளிமையான பாடிவொர்க், சிறிய எதிர்காற்று தடுப்பு கண்ணாடி மற்றும் தட்டையான கேஃப்-ரேஸர் வடிவிலான இருக்கை என்ற பாகங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வரவிருக்கும் 3 புதிய சீன எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! சூப்பர் சோகோ பிராண்டில் வருகின்றன...

தோற்றம் தான் பழமையான பைக்குகளுடையதே தவிர்த்து, டிசி வாண்டரர் பைக் வட்ட வடிவிலான டிஜிட்டல்-இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், கீலெஸ் இக்னிஷன் மற்றும் 3 ரைடிங் மோட்கள், யுஎஸ்டி ஃபோர்க், டிஸ்க் ப்ரேக்குகள், முழு-எல்இடி தரத்தில் விளக்குகள் மற்றும் ஆஃப்-ரோடு & ஆன்-ரோடு என இரு விதமான சாலைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய டயர்கள் என மாடர்ன் அம்சங்கள் பலவற்றை ஏற்றுள்ளது.

விற்பனைக்கு வரவிருக்கும் 3 புதிய சீன எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! சூப்பர் சோகோ பிராண்டில் வருகின்றன...

அப்படியே டிஎஸ் ஹண்டரின் பக்கம் சென்றால், இது நாக்டு ரக மோட்டார்சைக்கிளாகும். இதன் முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லேம்ப் யமஹா எம்டி பைக்குகளில் வழங்கப்படுவதை போன்றதான வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வரவிருக்கும் 3 புதிய சீன எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! சூப்பர் சோகோ பிராண்டில் வருகின்றன...

டிசி வாண்டரர் பைக்கை காட்டிலும் இந்த நாக்டு எலக்ட்ரிக் பைக்கில் ஹேண்டில்பார் நன்கு அகலமாக வழங்கப்பட்டுள்ளது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த இரு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளிலும் 2.5 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரை சூப்பர் சோகோ நிறுவனம் வழங்கியுள்ளது.

விற்பனைக்கு வரவிருக்கும் 3 புதிய சீன எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! சூப்பர் சோகோ பிராண்டில் வருகின்றன...

180என்எம் வரையிலான டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த எலக்ட்ரிக் மோட்டாரின் மூலம் அதிகப்பட்சமாக மணிக்கு 75கிமீ வேகத்திலும், இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்பட்டுள்ள இரு 32Ah பேட்டரிகள் மூலம் சிங்கிள்-முழு சார்ஜில் 200கிமீ தூரத்திற்கும் பைக்கை இயக்கி செல்ல முடியும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

விற்பனைக்கு வரவிருக்கும் 3 புதிய சீன எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! சூப்பர் சோகோ பிராண்டில் வருகின்றன...

இவை இரண்டிற்கும் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான கபீரா கேஎம்4000 மற்றும் கேஎம்3000 எலக்ட்ரிக் பைக்குகள் முக்கிய போட்டி மாடல்களாக விளங்கும். சூப்பர் சோகோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள சியுமினி இ-ஸ்கூட்டர் முழுக்க முழுக்க நகர்புற பயன்பாட்டிற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வரவிருக்கும் 3 புதிய சீன எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! சூப்பர் சோகோ பிராண்டில் வருகின்றன...

இதன் சிறிய 600 வாட்ஸ் தொடர் மோட்டாரில் பொருத்தப்பட்டுள்ள 7.8 கிலோ எடை கொண்ட நீக்கக்கூடிய 20Ah பேட்டரி தொகுப்பு 100 சதவீத சார்ஜில் ஸ்கூட்டரை 60ல் இருந்து 70கிமீ வரையில் இயக்கி செல்லும். இதற்கு ஆம்பியர் மேக்னஸ் ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முக்கிய போட்டி மாடலாக இருக்கும்.

Most Read Articles

English summary
Super Soco Uncovers Three New Electric Offerings
Story first published: Friday, February 26, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X