ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...

சூப்பர் சோகோ நிறுவனம் மிக சமீபத்தில் மூன்று புதிய இருசக்கர வாகனங்களை நாட்டில் அறிமுகப்படுத்தியது. அதில் இரண்டு மின் மோட்டார்சைக்கிளும், ஒன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஓர் புதுமுக மின்சார ஸ்கூட்டரை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...

சியூமினி (CUmini) எனும் பெயரிலேயே அந்த மின்சார ஸ்கூட்டர் தனது அறிமுகத்தை நாட்டில் வழங்கியிருக்கின்றது. இது ஓர் ஆரம்பநிலை மின்சார ஸ்கூட்டராகும். தினசரி மற்றும் நகர பயன்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் வாகனம் இதுவாகும். இதன் உருவம் மற்றும் வசதிவாயப்புகள் அனைத்தும் இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கின்றன.

ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...

புதிய சியூமினி மின்சார ஸ்கூட்டர் நான்கு விதமான நிற தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். கருப்பு, சாம்பல், வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களிலேயே இந்த வாகனம் கிடைக்கும். சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இதே தோற்றம் மற்றும் வசதிக் கொண்ட சியூமினி விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...

இந்த நாடுகளில் அறிமுகமானதை அடுத்தே தற்போது இந்தியாவிலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கால் தடம் பதித்திருக்கின்றது. ஆனால், சீனாவில் ஒற்றை இருக்கை வசதியுடனே இந்த ஸ்கூட்டர் களமிறங்கியிருக்கின்றது. ஐரோப்பிய மின்வாக சந்தையில் இவ்வாகனம் இருவர் அமர்ந்து செல்லும் இருக்கையுடன் அறிமுகமாகியிருக்கின்றது.

ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...

இந்த மின்சார ஸ்கூட்டரில் யு வடிவத்தை கவிழ்த்து போட்டது போன்ற இரு மின் விளக்குகள் மற்றும் கோடு போன்ற அமைப்பு உடைய மின் விளக்கு முன்பக்க மேற்புறத்திலும் வழங்கப்பட்டிருக்கின்றது. சியூமினி எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அதிக கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...

இதுதவிர, கருப்பு நிறத்திலான ஹேண்டில் பார், அலாய் வீல், ஃப்ளூர்போர்ட் மற்றும் ஸ்போர்ட்டி தோற்றத்திலான கண்ணாடி உள்ளிட்டவை இவ்வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஜிபிஎஸ், அலாரம் மற்றும் ரிமோட் வசதி என கூடுதல் சிறப்பு அம்சங்களும் இதில் இடம்பெற இருக்கின்றன.

ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...

சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டரில் 0.6 kW அல்லது 0.8 பிஎஸ் திறனை வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதற்கான மின்சாரத்தை வழங்கும் விதமாக 48V மற்றும் 20Ah திறன் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 70 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் உச்சபட்ச வேகமே மணிக்கு 45 கிமீ ஆகும்.

Most Read Articles
English summary
Super Soco Reveals 2021 CUmini Electric Scooter with 70 KMs Range. Read In Tamil.
Story first published: Monday, March 1, 2021, 19:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X