இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை

சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை

சுஸுகியின் அடுத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டராக புர்க்மேன் எலக்ட்ரிக் வெளிவரவுள்ளது. இதன் சோதனை ஓட்டங்கள் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை

இந்த வகையில் தற்போது மீண்டும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எந்தவொரு மறைப்பும் இல்லாமல் சோதனை ஓட்டத்தில் சுஸுகி நிறுவனம் ஈடுப்படுத்தியுள்ளது. மோட்டார்பீம் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான ஸ்பை படங்களில் இரு சுஸுகி புர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒரே நேரத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை

மற்றப்படி இந்த ஸ்பை படங்கள் மூலமாக வழக்கம்போல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய எந்த விபரத்தையும் அறிய முடியவில்லை. முந்தைய ஸ்பை படங்கள் புதிய புர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பின்பக்க சஸ்பென்ஷன் அமைப்பாக இரட்டை ஷாக் அப்சார்பர்கள் பொருத்தப்பட்டுள்ளதை வெளிக்காட்டி இருந்தன.

இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை

இதனால் ஸ்கூட்டரின் பின்பக்க ஃபெண்டரும், டயரை கட்டியணைப்பானும் புதிய டிசைனில் எதிர்பார்க்கலாம். இவற்றுடன் ப்ளூடூத் இணைப்புடன் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன், முழு-எல்இடி விளக்குகள், இருக்கைக்கு அடியில் பெரிய சேமிப்பிடம் மற்றும் யுஎஸ்பி சார்ஜரும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தயாரிப்பு நிறுவனம் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை

இவை தவிர்த்து புர்க்மேனின் எலக்ட்ரிக் வெர்சன் பெரும்பான்மையாக அதன் பெட்ரோல் மாடலையே ஒத்து காணப்படும். இதன் காரணமாக ஒருங்கிணைக்கப்பட்ட டர்ன் சிக்னல்கள், பெரிய மற்றும் கவர்ச்சிகரமான ஹெட்லேம்ப் உடன் ஸ்கூட்டரின் தோற்றத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை

ஆனால் சுஸுகி புர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரில் வழங்கப்படாத புதிய வெள்ளை- நீலம் நிறத்தில் அதன் எலக்ட்ரிக் வெர்சன் வழங்கப்படவுள்ளது. புர்க்மேன் எலக்ட்ரிக்கில் பொருத்தப்படவுள்ள எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி குறித்த விபரங்கள் இன்னும் ரகசியமாகவே பாதுகாக்கப்படுகின்றன.

இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை

நமக்கு தெரிந்தவரை, சுஸுகியின் 110சிசி ஸ்கூட்டர்கள் இயங்கும் என்ஜினின் ஆற்றலில்தான் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் இயங்கும். அறிமுகத்திற்கு பிறகு சுஸுகி புர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஏத்தர் 450எக்ஸ் போன்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் விற்பனையில் மல்லுக்கட்ட உள்ளது.

Most Read Articles

English summary
Suzuki Burgman Electric Scooter Spotted Undergoing Road Test Again.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X