முன்பதிவு செய்தோர் வீட்டிற்கு செல்ல தயாராகும் 2021 சுஸுகி ஹயபுஸா!! டெலிவிரி துவங்கியது!

2021 சுஸுகி ஹயபுஸா பைக்கை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யும் பணிகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

முன்பதிவு செய்தோர் வீட்டிற்கு செல்ல தயாராகும் 2021 சுஸுகி ஹயபுஸா!! டெலிவிரி துவங்கியது!

பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றாம் தலைமுறை சுஸுகி ஹயபுஸாவின் முதல் தொகுப்பிற்கான முன்பதிவுகள், துவங்கப்பட்ட சில நாட்களிலேயே முழுவதுமாக விற்று தீர்க்கப்பட்டதால் நிறுத்தி கொள்ளப்பட்டது.

முன்பதிவு செய்தோர் வீட்டிற்கு செல்ல தயாராகும் 2021 சுஸுகி ஹயபுஸா!! டெலிவிரி துவங்கியது!

இரண்டாம் தொகுப்பு வருகிற ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாத துவக்கத்திலோ டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தான் தற்போது டெலிவிரி பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

முன்பதிவு செய்தோர் வீட்டிற்கு செல்ல தயாராகும் 2021 சுஸுகி ஹயபுஸா!! டெலிவிரி துவங்கியது!

ரூ.16.40 லட்சத்தை ஆரம்ப விலையாக பெற்றுவந்துள்ள புதிய தலைமுறை ஹயபுஸா சூப்பர் பைக்கில் காஸ்மெட்டிக் மற்றும் இயந்திர அப்கிரேட்கள் கவனிக்கத்தக்க அளவில் கொண்டுவரப்பட்டுள்ளதை பார்த்திருந்தோம்.

முன்பதிவு செய்தோர் வீட்டிற்கு செல்ல தயாராகும் 2021 சுஸுகி ஹயபுஸா!! டெலிவிரி துவங்கியது!

மற்ற வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் ஹயபுஸா பைக்கிற்கும், இந்தியாவில் மூன்று விதமான நிறங்களில் விற்பனை செய்யப்படும் ஹயபுஸாவிற்கும் தோற்றத்தில் சிறிய வித்தியாசம் உள்ளது.

முன்பதிவு செய்தோர் வீட்டிற்கு செல்ல தயாராகும் 2021 சுஸுகி ஹயபுஸா!! டெலிவிரி துவங்கியது!

புதிய சுஸுகி ஹயபுஸாவில் 1,340சிசி, 4-ஸ்ட்ரோக், லிக்யுடு-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட், இன்லைன் 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 9,700 ஆர்பிஎம்-இல் 187 பிஎச்பி மற்றும் 7,000 ஆர்பிஎம்-இல் 150 என்எம் டார்க் திறனை இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

முன்பதிவு செய்தோர் வீட்டிற்கு செல்ல தயாராகும் 2021 சுஸுகி ஹயபுஸா!! டெலிவிரி துவங்கியது!

இந்த என்ஜினின் முந்தைய வெர்சன் அதிகப்பட்சமாக வெளிப்படுத்துவதை காட்டிலும் இது 10 பிஎச்பி மற்றும் 5 என்எம் டார்க் திறன் குறைவாகும். அதேபோல் பைக்கின் எடையும் 2 கிலோ குறைக்கப்பட்டுள்ளது. 2021 ஹயபுஸாவின் டாப் ஸ்பீடு 299kmph ஆகும்.

முன்பதிவு செய்தோர் வீட்டிற்கு செல்ல தயாராகும் 2021 சுஸுகி ஹயபுஸா!! டெலிவிரி துவங்கியது!

சஸ்பென்ஷன் பணியை கவனிக்கும் ஷோவா யூனிட்கள் அப்டேட்டான இயந்திரநுட்பத்தில் பொருத்தப்பட்டுள்ளன. ப்ரெம்போ ஸ்டைலிமா காலிபர்கள் முன் சக்கரத்தில் ப்ரேக்கிற்காக வழங்கப்பட்டுள்ளன.

முன்பதிவு செய்தோர் வீட்டிற்கு செல்ல தயாராகும் 2021 சுஸுகி ஹயபுஸா!! டெலிவிரி துவங்கியது!

பைக்கின் பரிமாண அளவுகளில் சற்று மாறுதல்கள் இருந்தாலும் க்ரவுண்ட் கிளியரென்ஸ் முந்தைய தலைமுறையில் இருந்து மாறவில்லை. அதே 1,480மிமீ தான். 2021 ஹயபுஸாவில் புதிய 6-அச்சு ஐஎம்யு தொழிற்நுட்ப தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Suzuki commenced the deliveries for 2021 Hayabusa in India.
Story first published: Friday, June 18, 2021, 23:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X