பல வருடங்களாக ஆர்டிஓ அலுவலகத்தில் நிற்கும் விஐபி-களின் சூப்பர்பைக்குகள்!! ஏன் தெரியுமா?

உலகின் மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தைகளுள் இந்தியாவும் ஒன்று. அதனால் நன்கு மைலேஜ் தரக்கூடிய வாகனங்களில் இருந்து அதிக செயல்திறன்மிக்க வாகனங்கள் வரையில் வாங்குவோர் நம் நாட்டில் உள்ளனர்.

பல வருடங்களாக ஆர்டிஓ அலுவலகத்தில் நிற்கும் விஐபி-களின் சூப்பர்பைக்குகள்!! ஏன் தெரியுமா?

அதிக செயல்திறன்மிக்க மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் ஆரம்ப காலக்கட்டத்தில், அதாவது 2000ஆம் துவக்கங்களில் விற்பனையில் இல்லை. இதனால் அந்த சமயத்தில் சூப்பர் பைக்குகளை வாங்க நினைப்போர் கள்ள சந்தையின் மூலமாக வெளிநாடுகளில் விற்பனையில் இருந்த மோட்டார்சைக்கிளை சட்டத்திற்கு விரோதமாகவே சொந்தமாக்க வேண்டிய சூழல் இருந்தது.

பல வருடங்களாக ஆர்டிஓ அலுவலகத்தில் நிற்கும் விஐபி-களின் சூப்பர்பைக்குகள்!! ஏன் தெரியுமா?

இவ்வாறு சிலர் தற்போதும் வாகனங்களை வாங்கி கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் தற்போது மிகவும் குறைந்துவிட்டது. ஏனெனில் செயல்திறன்மிக்க பல மோட்டார்சைக்கிள்கள் இப்போது நம் நாட்டில் விற்பனையில் உள்ளன.

பல வருடங்களாக ஆர்டிஓ அலுவலகத்தில் நிற்கும் விஐபி-களின் சூப்பர்பைக்குகள்!! ஏன் தெரியுமா?

சரி செய்திக்குள் போவோம், இவ்வாறு சட்டத்திற்கு விரோதமாக சூப்பர்பைக் மட்டுமின்றி எந்தவொரு வாகனத்தை வாங்கினாலும், அது போலீஸாரின் கவனத்திற்கு சென்றால், போலீஸார் அவற்றை பறிமுதல் செய்வது வழக்கம். இந்த வகையில் தானேவில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் பறிமுதல் செய்யப்பட்ட சூப்பர் பைக்குகளை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

பல வருடங்களாக ஆர்டிஓ அலுவலகத்தில் நிற்கும் விஐபி-களின் சூப்பர்பைக்குகள்!! ஏன் தெரியுமா?

ரிப்_கார் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த படத்தில் சிவப்பு நிற சுஸுகி ஹயபுஸா பைக் ஒன்றையும், அதன் பின்னால் யமஹா ஆர்6 பைக் ஒன்றையும் காணலாம். டி.ஆர்.ஐ அதிகாரிகளால் இந்த சூப்பர்பைக்குகள் பல வருடங்களுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்டன.

பல வருடங்களாக ஆர்டிஓ அலுவலகத்தில் நிற்கும் விஐபி-களின் சூப்பர்பைக்குகள்!! ஏன் தெரியுமா?

இதில் ஆர்6 பைக்கை கடைசி வரையில் இந்தியாவில் யமஹா நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவரவில்லை. இதற்கு மாற்றாக ஆர்7 மாடலே உலகளவில் சமீபத்தில் அறிமுகமாகிவிட்டது. யமஹா ஆர்6 பைக்கில் 600சிசி இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

பல வருடங்களாக ஆர்டிஓ அலுவலகத்தில் நிற்கும் விஐபி-களின் சூப்பர்பைக்குகள்!! ஏன் தெரியுமா?

அதிகப்பட்சமாக 116 பிஎச்பி மற்றும் 61 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. 190 கிலோவில் கெர்ப் எடையினை கொண்ட யமஹா ஆர்6, அறிமுகமான சமயத்தில் மிக வேகமான மோட்டார்சைக்கிளாக விளங்கியது.

பல வருடங்களாக ஆர்டிஓ அலுவலகத்தில் நிற்கும் விஐபி-களின் சூப்பர்பைக்குகள்!! ஏன் தெரியுமா?

தானே ஆர்டிஓ அலுவலகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மற்றொரு மோட்டார்சைக்கிளான சுஸுகி ஹயபுஸாவை பற்றி தெரியாதவர்களே இருக்க மாட்டீர்கள் என்று தான் நினைக்கிறேன். குறிப்பாக பாலிவுட் தூம் படத்தில் ஜான் அப்ரகாம் ஓட்டிய பிறகு இந்த சுஸுகி சூப்பர்பைக் நாடு முழுவதும் பிரபலமாகியது.

பல வருடங்களாக ஆர்டிஓ அலுவலகத்தில் நிற்கும் விஐபி-களின் சூப்பர்பைக்குகள்!! ஏன் தெரியுமா?

அதிகப்பட்சமாக மணிக்கு 300கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த சூப்பர்பைக்கின் புதிய தலைமுறை சமீபத்தில் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சுஸுகி தயாரிப்பிற்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு உள்ளதால், 2021 ஹயபுஸாவின் முதல் தொகுப்பு ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டது.

பல வருடங்களாக ஆர்டிஓ அலுவலகத்தில் நிற்கும் விஐபி-களின் சூப்பர்பைக்குகள்!! ஏன் தெரியுமா?

புதிய தலைமுறை ஹயபுஸாவில் 1,340சிசி, 4-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜினை சுஸுகி நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்த என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகள் சற்று குறைக்கப்பட்டாலும், இதற்கு ஏற்ப பைக்கின் எடையை 2 கிலோ வரையில் தயாரிப்பு நிறுவனம் குறைத்துள்ளது.

பல வருடங்களாக ஆர்டிஓ அலுவலகத்தில் நிற்கும் விஐபி-களின் சூப்பர்பைக்குகள்!! ஏன் தெரியுமா?

அதேபோல் பைக் கொடுக்கும் மைலேஜ் அளவும் 21.5kmpl-இல் இருந்து 18.06kmpl ஆக குறைந்துள்ளது. இந்த குறைப்பாடுகளை சரிக்கட்டும் விதத்தில் புதிய டிஎஃப்டி திரை, லாஞ்ச் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், பின்சக்கர லிஃப்ட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், எளிமையான ஸ்டார்ட் சிஸ்டம் என ஏகப்பட்ட தொழிற்நுட்ப வசதிகளை சுஸுகி நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

Most Read Articles
English summary
Suzuki Hayabusa & Yamaha R6 superbikes abandoned in Mumbai
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X