Just In
- 1 hr ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 14 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அறிமுகமானது சுசுகி கடானா... குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்குமாம்... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல..
சுசுகி நிறுவனத்தின் கடானா பைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனைக்கு வந்துள்ளது. எங்கு விற்பனைக்கு வந்தது, என்னென்ன சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்றது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம்.

சுசுகி நிறுவனம் அதன் கடானா மோட்டார்சைக்கிளை புதிய நிற தேர்வுடன் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் வெளியீடு செய்தது. இதற்கு முன்னரே அறிமுகமாக வேண்டிய இப்பைக் கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக நீண்ட கால தாமதத்திற்கு பின்னர் மார்ச் மாதத்தில் வெளியீடு பெற்றது.

இந்த நிலையிலேயே இப்பைக்கை ஜப்பான் நாட்டில் சுசுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இப்பைக்கை சுசுகி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. 100 யூனிட்டுகள் மட்டுமே தயார் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த எண்ணிக்கையில் மட்டுமே புதிய சுசுகி கடானா பைக்குகள் ஜப்பானில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றன. இது ஓர் சிறப்பு பதிப்பு என்கிற காரணத்தினாலயே குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்க சுசுகி திட்டமிட்டிருக்கின்றது.

முன்னதாக விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹயபுசா பைக்கின் நிறம் மற்றும் சில டிசைன் தாத்பரியங்கள் கடானா பைக்கிற்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. எனவேதான் இதனை சிறப்பு பதிப்பாக பார்க்கப்படுகின்றது. இப்பைக்கின் ஹேண்டில் பார், வீல் ரிம் மற்றும் சஸ்பென்ஷன் ஆகியவற்றிற்கு தனித்துவமான நிறஙகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இவையே இப்பைக்கைச் சிறப்பு பதிப்பாக காட்சிப்படுத்துகின்றன. இத்துடன், சிறப்பு அணிகலன் மற்றும் ஸ்டிக்கர் சேர்ப்பையும் சுசுகி செய்திருக்கின்றது. மேலும், இதன் இருக்கைகளை தைக்க சிவப்பு நிற நூல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறு சிறு சிறு விஷயங்களைக்கூட பார்த்து பார்த்து சுசுகி செய்திருக்கின்றது. கடானா பைக்கிற்கு சிறப்பு சேர்க்கும் விதமாகவே இத்தகைய நுணுக்கங்களை அது கையாண்டிருக்கின்றது.

இப்பைக்கில் 998சிசி திறன் கொண்ட இன்லைன் 4-சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 107 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. எஞ்ஜினைப் போல சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் அம்சங்களும் சிறப்பு திறனை வெளிப்படுத்துகின்ற வகையிலேயே சுசுகி பயன்படுத்தியிருக்கின்றது.

இத்தகைய சிறப்பு திறன்கள் கொண்ட பைக்கையே சுசுகி நிறுவனம் தற்போது ஜப்பானில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதன் இந்திய அறிமுகம் பற்றிய தகவலை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. ஆகையால் இப்போதைக்கு புதிய கடானா பைக் விற்பனைக்கு வராது என்பது தெளிவாக தெரிகின்றது.

அதேசமயம், இந்தியர்கள் மத்தியில் சூப்பர் பைக்குகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருகின்ற காரணத்தினால் இப்பைக்கினை சுசுகி நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், தற்போது லிமிடெட் வெர்ஷனில் விற்பனைக்கு வந்திருக்கும் கேண்டி டேரிங் சிவப்பு நிற கடானா பைக்கின் ஆவலை எதிர்நோக்கி இந்திய இளைஞர்கள் காத்திருக்க தொடங்கியிருக்கின்றனர்.