Just In
- 4 hrs ago
525எச்பி ஆற்றலில், ஆற்றல்மிக்க டிஃபெண்டர் காரை உலகளவில் வெளியிட்டது லேண்ட் ரோவர்!! இந்தியாவர வாய்ப்பிருக்கா?
- 4 hrs ago
மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை விட சிறந்த காரா டொயோட்டா அர்பன் க்ரூஸர்? ரோடு டெஸ்ட் ரிவியூ!
- 6 hrs ago
2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு
- 9 hrs ago
ஹெக்டர் எஸ்யூவி காரின் உற்பத்தியில் புதிய மைல்கல்... பெண்களுக்கு பெருமை சேர்த்த எம்ஜி மோட்டார்...
Don't Miss!
- News
தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுர் கைது.. 'சொல்வது அத்தனையும் பொய்' - ஹரியானா போலீஸ்
- Movies
48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து !
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Lifestyle
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
சுசுகி மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம் அதன் பிரபலமான அக்செஸ் 125 மாடல் ஸ்கூட்டரின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான சுசுகி, அதன் புகழ்வாய்ந்த ஸ்கூட்டர்களில் ஒன்றான அக்செஸ் 125 மாடலின் விலையைக் கணிசமாக உயர்த்தியிருக்கின்றது. நடப்பு 2021ம் ஆண்டு தொடங்கியது முதல் வாகன விலையுயர்வு பற்றிய தகவல் தினமும் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையிலேயே சுசுகி நிறுவனத்தின் அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலையுயர்வு பற்றிய தகவலும் வெளிவந்திருக்கின்றது. ஆனால், இந்நிறுவனம் பிற மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களைப் போன்றில்லாமல் மிக குறைந்தளவு தொகையையே உயர்த்தியிருக்கின்றது.

அதாவது, சுசுகி நிறுவனம் அதன் அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலையில் ரூ. 186 உயர்வினை செய்திருக்கின்றது. இதனால், முன்பைக் காட்டிலும் அக்செஸ் 125 மாடல் ஸ்கூட்டர்கள் ரூ. 186 விலையுயர்வுடனேயே இனி விற்பனைக்குக் கிடைக்கும் என்ற நிலை உருவாகியிருக்கின்றது.

சுசுகி அக்செஸ் 125 தற்போது ஏழு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. டிஸ்க், டிரம் மற்றும் அலாய் வீல் என பன் முக தேர்வுகளில் அது காட்சியளிக்கின்றது. இந்த அனைத்து வேரியண்டுகளுக்குமே புதிய விலையுயர்வு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய விலையுயர்வை பட்டியலாகக் கீழே காணலாம்:
வேரியண்ட் | விலை (டெல்லி எக்ஸ்-ஷோரூம்) |
Access Drum CBS | Rs 70,686 |
Access Drum Cast | Rs 72,386 |
Access Drum Cast Special Edition | Rs 47,086 |
Access Disc CBS | Rs 73,286 |
Access Disc CBS Special Edition | Rs 74,986 |

உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதைக் காரணம் காட்டியே அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் விலையுயர்வைச் செய்து வருகின்றனர். ஆனால், சுசுகி நிறுவனத்தின் இந்த விலையுயர்விற்கு காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், சுசுகி நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கும் உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதே காரணமாக இருக்கும் என யூகிக்கப்படுகின்றது.

ஏனெனில், எஞ்ஜின் மற்றும் உருவம் என எந்த ஒரு வகையிலும் இந்நிறுவனம் அக்செஸ் ஸ்கூட்டரில் மாற்றத்தை மேற்கொள்ளவில்லை. இதனடிப்படையிலேயே உற்பத்தி செலவு மட்டுமே தற்போதைய விலையுயர்விற்கு காரணமாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரில் 124சிசி திறனை வெளிப்படுத்தக்கூடிய சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.6 பிஎச்பி மற்றும் 10 என்எம்ம டார்க்கை வெளிப்படுத்தக் கூடியது. இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மின் விளக்குகள் எல்இடி தரத்திலானவை ஆகும்.

இதுமட்டுமின்றி, ப்ளூடூத் வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் போன்ற பிரீமியம் வசதிகளும் இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கின்றன. இதற்காக சுசுகி ரைடு எனும் பிரத்யேக செல்போன் செயலி வழங்கப்படுகின்றது. இதனைக் கொண்டு ஸ்கூட்டர் பற்றி பல்வேறு தகவல்களை செல்போன் வாயிலாகவே பெற்றுக் கொள்ள முடியும்.

இதேபோன்று, செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் திரையில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு வசதிக் கொண்ட ஸ்கூட்டரின் விலையிலேயே ரூ. 186 உயர்வை சுசுகி செய்திருக்கின்றது.