சூப்பர் பைக் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்... விரைவில் இந்தியா வருகிறது சுஸுகி ஹயபுசா!

புதிய தலைமுறை சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, டீசர் ஒன்றையும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சூப்பர் பைக் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்... விரைவில் இந்தியா வருகிறது சுஸுகி ஹயபுசா!

உலக அளவில் சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கிற்கு அதிக அளவில் ரசிகர்கள் உண்டு. இந்தியாவிலும் நடிகர் சல்மான்கான் தொடங்கி ஏராளமான நட்சத்திரங்களும், பணக்காரர்களும் இந்த பைக்கிற்கு வாடிக்கையாளர்களாகவும், ரசிகர்களாகவும் உள்ளனர்.

சூப்பர் பைக் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்... விரைவில் இந்தியா வருகிறது சுஸுகி ஹயபுசா!

இந்த நிலையில், சுஸுகி ஹயபுசா பைக் புதிய தலைமுறை அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. 2021 மாடலாக மூன்றாம் தலைமுறை கண்டுள்ள இந்த புதிய பைக் அண்மையில் உலக அளவில் வெளியிடப்பட்டது.

சூப்பர் பைக் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்... விரைவில் இந்தியா வருகிறது சுஸுகி ஹயபுசா!

அப்போதே இந்த பைக் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பது தெரிந்தது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இந்த நிலையில், புதிய ஹயபுசா சூப்பர் பைக்கை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியர்களுக்கு இன்பச் செய்தி ஒன்றை சுஸுகி வெளியிட்டுள்ளது.

சூப்பர் பைக் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்... விரைவில் இந்தியா வருகிறது சுஸுகி ஹயபுசா!

ஆம். இந்தியாவில் புதிய ஹயபுசா சூப்பர் பைக்கை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது சுஸுகி நிறுவனம். இதற்காக, புதிய ஹயபுசா பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகமாவதை உறுதி செய்வதற்கான டீசர் ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களின் ஆவலை தூண்டி இருக்கிறது.

சூப்பர் பைக் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்... விரைவில் இந்தியா வருகிறது சுஸுகி ஹயபுசா!

முந்தைய தலைமுறை சுஸுகி ஹயபுசா பைக்கின் டிசைன் அம்சங்கள் அப்படியே தக்க வைக்கப்பட்டு சில மாற்றங்களுடன் புதிய தலைமுறை பைக் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், உடனடியாக ஹயபுசா தனது தனித்துவமான டிசைன் அம்சங்களை பிரதிபலிக்கும் வகையிலேயே தோற்றமளிக்கிறது.

சூப்பர் பைக் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்... விரைவில் இந்தியா வருகிறது சுஸுகி ஹயபுசா!

புதிய தலைமுறை ஹயுபுசா பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1,340சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ரைடு பை ஒயர் தொழில்நுட்பம் மற்றும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் இரண்டு ஃபியூவல் இன்ஜெக்டர்கள் மூலமாக எரிபொருள் செலுத்தும் அமைப்புடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

சூப்பர் பைக் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்... விரைவில் இந்தியா வருகிறது சுஸுகி ஹயபுசா!

இதன் எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பழைய மாடலைவிட 8 பிஎச்பி பவரும், 4 என்எம் டார்க் திறனும் குறைந்துவிட்டது. குயிக் ஷிஃப்டர் வசதியுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

சூப்பர் பைக் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்... விரைவில் இந்தியா வருகிறது சுஸுகி ஹயபுசா!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வந்துள்ளது. பழைய மாடல் லிட்டருக்கு 21.5 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், புதிய மாடல் லிட்டருக்கு 18.06 கிமீ மைலேஜ் மட்டுமே வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சூப்பர் பைக் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்... விரைவில் இந்தியா வருகிறது சுஸுகி ஹயபுசா!

அனலாக் ஸ்பீடோ மீட்டர் மற்றும் டாக்கோமீட்டர் டயல்களுக்கு மத்தியில் டிஎஃப்டி திரையுடன் மல்டி இன்ஃபர்மேஷன் சாதனம் உள்ளது. இதன்மூலமாக, பைக்கின் இயக்கம் குறித்த பல முக்கிய தகவல்களை பெற முடியும். டிராக்ஷன் கன்ட்ரோல், 6 ஆக்சிஸ் ஐஎம்யூ யூனிட், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், லான்ச் கன்ட்ரோல், ஆக்டிவ் ஸ்பீடு லிமிட்டர், 6 ரைடிங் மோடுகள் என தொழில்நுட்பத்தில் தற்காலத்திற்கு இணையான சூப்பர் பைக் மாடலாக தரம் உயர்ந்துள்ளது.

சூப்பர் பைக் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்... விரைவில் இந்தியா வருகிறது சுஸுகி ஹயபுசா!

முதல்கட்டமாக இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. பின்னர், முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்ய சுஸுகி திட்டமிட்டுள்ளது. ரூ.17 லட்சம் முதல் ரூ.18 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

English summary
Suzuki has released teaser for new gen Hayabusa in India ahead of launch.
Story first published: Tuesday, March 2, 2021, 10:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X