சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...

ஆண்டுத்தோறும் அதிகரிக்கப்படுவதைபோல் சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...

தொடர்ந்து அதிகரித்துவரும் வாகன தயாரிப்பிற்கான பாகங்களின் விலைகளினால் வருட துவக்கத்திலோ அல்லது ஆண்டு இறுதியிலோ விற்பனை வாகனங்களின் எக்ஸ்ஷோரூம் விலைகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிகரிப்பது வழக்கம்.

சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...

இந்த வகையில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் அனைத்து இரு சக்கர வாகனங்களின் எக்ஸ்ஷோரூம் விலைகளையும் கணிசமாக உயர்த்தியுள்ளது. இந்த விலை அதிகரிப்புகள் அனைத்தும் ரூ.186 என்ற அளவில்தான் உள்ளது.

சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
Model New Prices Old Prices Price Difference
Access 125 ₹70,686 - ₹78,786 ₹70,500 - ₹ 78,800 ₹186
Burgman Street 125 ₹81,286 - ₹84,786 ₹81,100 - ₹84,600 ₹186
Gixxer ₹1,14,687 ₹1,14,500 ₹187
Gixxer SF ₹1,25,156 ₹1,24,970 ₹186
Intruder ₹1,22,327 ₹1,22,141 ₹186
Gixxer 250 ₹1,65,627 ₹1,65,441 ₹186
Gixxer SF 250 ₹1,76,326 - ₹1,77,127 ₹1,76,140 - ₹1,76,941 ₹186

ஆக்ஸஸ் 125, பர்க்மேன் ஸ்ட்ரீட் 125, ஜிக்ஸெர் எஸ்எஃப், இண்டூரர், ஜிக்ஸெர் 250, ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மோட்டார்சைக்கிள்களின் விலைகள் 186 ரூபாயும், ஜிக்ஸெரின் விலை மட்டும் 187 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...

7 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் புதிய விலைகள் ரூ.70,686ல் இருந்து ரூ.78,786 வரையிலும், ப்ளூடூத் உடன் மற்றும் ப்ளூடூத் வசதி இல்லாத என்ற இரு விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மேக்ஸி-ஸ்கூட்டரின் புது விலைகள் ரூ.81,286 & ரூ.84,786 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...

இவை இரண்டும் தான் தற்சமயம் பிரபலமான 125சிசி சுஸுகி ஸ்கூட்டர்களாக விளங்குகின்றன. 155சிசி ஜிக்ஸெர் பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலைகள் இனி ரூ.1,14,687 மற்றும் ரூ.1,25,156 (எஸ்எஃப்) ஆகும்.

சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...

250சிசி ஜிக்ஸெர் பைக்குகளின் விலைகள் ரூ.1,65,627 மற்றும் ரூ.1,76,326 & ரூ.1,77,127 (எஸ்எஃப்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இண்ட்ரூடர் பைக்கின் விலை ரூ.1,22,141ல் இருந்து ரூ.1,22,327ஆக கொண்டுவரப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
All Suzuki Two-wheelers Get Nominal Price Hikes
Story first published: Monday, January 25, 2021, 22:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X