350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?

350,000வது டுகாட்டி மான்ஸ்டர் பைக் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?

டுகாட்டி மோட்டார்சைக்கிள் பிராண்டில் இருந்து மான்ஸ்டர் பைக் மாடல் முதன்முதலாக சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் அறிமுகமானது. இந்த 30 வருடங்களில் 3.5 லட்சம் டுகாட்டி மான்ஸ்டர் பைக்குகள் உலகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?

350,000வது மான்ஸ்டர் 1200எஸ் ‘ப்ளாக் ஆன் ப்ளாக்' பைக் டுகாட்டி சிஇஒ கிளாடியோ டொமினிகலி மற்றும் டுகாட்டி வடிவமைப்பு பிரிவின் இயக்குனர் ஆண்ட்ரியா ஃபெரரேசி முன்னிலையில் அதன் உரிமையாளர் செபாஸ்டியன் ஃபிராங்கோயிஸ் யவ்ஸ் ஹெர்வ் டி ரோஸ் என்பவருக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?

இத்தாலியை சேர்ந்த இவருக்கு அவரது டுகாட்டி மான்ஸ்டர் 1200எஸ் பைக் மிலன் நகரில் உள்ள டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளது. எந்த பைக்கிலும் இல்லாத வகையில் இந்த சிறப்புமிக்க பைக்கில் 350,000 என்ற எண் மற்றும் பைக்கை வடிவமைத்த ஏஞ்சலோ அமடோ-வின் கையெழுத்துடன் பிரத்யேக தட்டு பொருத்தப்பட்டுள்ளது.

350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?

டுகாட்டி நிறுவனத்தின் சிறந்த விற்பனை பைக் மாடலாக விளங்கும் மான்ஸ்டரின் முதல் மாதிரியான எம்900 1992ல் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முதல் டுகாட்டி மான்ஸ்டர் ட்ராக் பயன்பாட்டிற்கும் தேவையான அம்சங்களை கொண்டிருந்தது.

350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?

டுகாட்டி மான்ஸ்டர் 1200 பைக்கின் புதிய தலைமுறை கடந்த 2020 டிசம்பர் 2ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது வருகிற 2021 ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றப்படி மான்ஸ்டர் 797 மற்றும் மான்ஸ்டர் 821 பைக்குகளின் புதிய தலைமுறை கொண்டுவரப்படுவதுபோல் தெரியவில்லை.

350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?

1992 டுகாட்டி மான்ஸ்டர் பைக்கில் இருந்து வரையறைக்கப்பட்டுள்ள 2021 டுகாட்டி மான்ஸ்டர் 1200 மாடர்ன், ஸ்போர்டி, நேர்த்தி மற்றும் தொழிற்நுட்ப வசதிகள் என அனைத்திலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த டுகாட்டி மான்ஸ்டர் பைக்கும் தற்சமயம் விற்பனையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Re: Ducati Delivers 350,000th Ducati Monster
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X