இணையத்தில் வைரலாகும் மற்றொரு மாடிஃபை ராயல் என்பீல்டு பைக்!! விஸரியன் 350 என பெயர்...

ராயல் என்பீல்டு பிராண்டை இந்தியாவில் பிரபலப்படுத்திய மாடல்களுள் கிளாசிக்350 பைக்கிற்கு தவிர்க்க முடியாத இடம் உண்டு. 2009ஆம் ஆண்டில் முதன்முதலாக கிளாசிக் 350 அறிமுகப்படுத்தப்பட்டது.

இணையத்தில் வைரலாகும் மற்றொரு மாடிஃபை ராயல் என்பீல்டு பைக்!! விஸரியன் 350 என பெயர்...

எளிமையான கட்டமைப்பினால் சிறந்த விற்பனை ராயல் என்பீல்டு பைக்காக ஒவ்வொரு மாதத்திலும் விளங்கிவரும் கிளாசிக் 350, அதேநேரம் மாடிஃபிகேஷன் பணிகளை மேற்கொள்ளவும் மிகவும் ஏற்றதாக விளங்குகிறது.

இணையத்தில் வைரலாகும் மற்றொரு மாடிஃபை ராயல் என்பீல்டு பைக்!! விஸரியன் 350 என பெயர்...

இந்த வகையில் மாடிஃபை செய்யப்பட்ட கிளாசிக் 350 பைக்கை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். விஸரியன் 350 என அழைக்கப்படுகின்ற இந்த மாடிஃபை கிளாசிக் 350 பைக்கை க்ரோம்களை அதிகளவில் வழங்கி விலையுயர்ந்த பைக் போல் காட்ட மாடிஃபை செய்தவர்கள் முயற்சிக்கவில்லை.

இணையத்தில் வைரலாகும் மற்றொரு மாடிஃபை ராயல் என்பீல்டு பைக்!! விஸரியன் 350 என பெயர்...

Image Courtesy: Motorheads Customs

ஏனெனில் அவர்கள் முழுக்க முழுக்க பைக்கின் ஸ்டைலில் மட்டுமே கவனத்தை செலுத்தியுள்ளனர். முன்பக்கத்தில் இந்த பைக் புதிய எல்இடி ஹெட்லேம்ப், கஸ்டம் ஃபோர்க் கவர்கள் மற்றும் புதிய ஃபெண்டரை பெற்றுள்ளது.

இணையத்தில் வைரலாகும் மற்றொரு மாடிஃபை ராயல் என்பீல்டு பைக்!! விஸரியன் 350 என பெயர்...

கிளாசிக் 350 பைக்கின் ஒற்றை-பேட் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வலதுபக்கமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஹேண்டில்பாரின் இரு முனைகளிலும் இண்டிகேட்டர்களுடன் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.

இணையத்தில் வைரலாகும் மற்றொரு மாடிஃபை ராயல் என்பீல்டு பைக்!! விஸரியன் 350 என பெயர்...

பெட்ரோல் டேங்க் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்டாக் மாடலை காட்டிலும் இதில் பெரியதாக காட்சி தருகிறது. பெட்ரோல் டேங்க், பக்கவாட்டு பேனல்கள் இராணுவ பச்சை நிறங்களில் உள்ளன்.

இணையத்தில் வைரலாகும் மற்றொரு மாடிஃபை ராயல் என்பீல்டு பைக்!! விஸரியன் 350 என பெயர்...

அதேநேரம் என்ஜின், அதன் சிலிண்டர், எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் பின்பக்க ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் உள்ளிட்டவை க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர்த்து பைக்கின் மற்ற பாகங்கள் அனைத்தும் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன.

இணையத்தில் வைரலாகும் மற்றொரு மாடிஃபை ராயல் என்பீல்டு பைக்!! விஸரியன் 350 என பெயர்...

பேட்டரி கவர் மற்றும் ஏர் பாக்ஸில் 'விஸரியன் 350' பிராண்டின் லோகோவை பார்க்க முடிகிறது. இந்த கிளாசிக் 350 பைக்கில் பாப்பர் மோட்டார்சைக்கிள்களை போன்று ஒரே ஒரு இருக்கை மட்டுமே டைமண்ட் டிசைனிலான தையல்களுடன் உள்ளது.

இணையத்தில் வைரலாகும் மற்றொரு மாடிஃபை ராயல் என்பீல்டு பைக்!! விஸரியன் 350 என பெயர்...

பின்பக்கத்தில் புதிய ஃபெண்டர் வழங்கப்பட்டுள்ளது. நம்பர் ப்ளேட் இடதுபக்க ஸ்விங்கார்மில் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்க இண்டிகேட்டர்களிலும் எல்இடி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. கஸ்டம் எக்ஸாஸ்ட் குழாயில் வெப்பத்தை உமிழாத வ்ராப் சுற்றப்பட்டுள்ளது.

இணையத்தில் வைரலாகும் மற்றொரு மாடிஃபை ராயல் என்பீல்டு பைக்!! விஸரியன் 350 என பெயர்...

இவற்றுடன் பாப்பர் தோற்றத்தை வழங்குவதற்காக முன்பக்கத்தில் பெரியதாகவும், பின்பக்கத்தில் சிறியதாகவும் அழகாக மெஷின்-கட் அலாய் சக்கரங்கள், ப்ளாக்-பேட்டர்ன் டயர்களுடன் வழங்கப்பட்டுள்ளன. என்ஜின் அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்காது என்றே நினைக்கிறோம்.

Most Read Articles
English summary
Check Out This Lovely Custom Royal Enfield Classic 350-Based Bobber.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X