மிகுந்த எதிர்பார்ப்பில் அறிமுகமாகவிருக்கும் டாப்-5 பைக்குகள்!! ஆர்சி390 முதல் ராயல்என்பீல்டு ஹண்டர்350 வரையில்

உலகளவில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் விற்பனையாகும் நாடு என்று பார்த்தால், அதில் இந்தியாவும் ஒன்றாக, முன்னிலையில் இருக்கும். அந்த அளவிற்கு, பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் நம் நாட்டில் வீட்டிற்கு ஒரு 2-சக்கர வாகனமாவது உள்ளது. மேலும் இதனாலேயே 2-சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு இடையே எப்போதும் போட்டி அதிகமாக இருக்கும்.

மிகுந்த எதிர்பார்ப்பில் அறிமுகமாகவிருக்கும் டாப்-5 பைக்குகள்!! ஆர்சி390 முதல் ராயல்என்பீல்டு ஹண்டர்350 வரையில்

கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக அவ்வப்போது கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளினால் சற்று ஓய்வு எடுத்துக்கொண்ட 2-சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள், தற்போது ஓரளவிற்கு நிலைமை சீராகிவிட்டதால், மீண்டும் முழு வீச்சில் தங்களது சிறந்த தயாரிப்பு வாகனங்களை களமிறக்க தயாராகி வருகின்றன.

மிகுந்த எதிர்பார்ப்பில் அறிமுகமாகவிருக்கும் டாப்-5 பைக்குகள்!! ஆர்சி390 முதல் ராயல்என்பீல்டு ஹண்டர்350 வரையில்

இதனால் வருகிற 2022ஆம் ஆண்டு புதிய 2-வீலர்களால் நிரம்பி வழியவுள்ளதை மட்டும் உறுதியாக கூற முடியும். இந்த வகையில் இந்திய சந்தையில் அடுத்ததாக அறிமுகப்படுத்தப்பட உள்ள முக்கிய 5 மோட்டார்சைக்கிள்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மிகுந்த எதிர்பார்ப்பில் அறிமுகமாகவிருக்கும் டாப்-5 பைக்குகள்!! ஆர்சி390 முதல் ராயல்என்பீல்டு ஹண்டர்350 வரையில்

கேடிஎம் ஆர்சி390 & அட்வென்ச்சர் 390

இந்தியாவில் விரைவில் அப்டேட் செய்யப்பட்ட புதிய ஆர்சி390 பைக்கை அறிமுகப்படுத்த உள்ளதாக கேடிஎம் நிறுவனம் சமீபத்தில் தான் அறிவித்திருந்தது. சற்று நீளமான எதிர்காற்று தடுப்பு கண்ணாடியுடன் புதிய ஆர்சி390 பைக் முற்றிலும் வேறுப்பட்ட முன்பக்கத்தை பெற்று வரவுள்ளது. இதனுடன் ஸ்லிப்பர் க்ளட்ச், விரைவு-கியர் மாற்றி, மிகவும் உணர்வுத்திறன் மிக்க கார்னரிங் ஏபிஎஸ் போன்ற வசதிகளும் புதிய ஆர்சி390 பைக்கில் கேடிஎம் வழங்கியுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பில் அறிமுகமாகவிருக்கும் டாப்-5 பைக்குகள்!! ஆர்சி390 முதல் ராயல்என்பீல்டு ஹண்டர்350 வரையில்

390 அட்வென்ச்சர் பைக்கை பொறுத்தவரையில், இது இன்னமும் இந்திய சாலைகளில் மறைப்புகளுடன் சோதனை ஓட்டத்தில் தான் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த 390சிசி அட்வென்ச்சர் பைக் 2022ஆம் ஆண்டின் இறுதியில் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதன் சமீபத்திய சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம், ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ப இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் ஹேண்டில்பார்கள் வழக்கத்தை காட்டிலும் சற்று உயரத்தில் பொருத்தப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது.

மிகுந்த எதிர்பார்ப்பில் அறிமுகமாகவிருக்கும் டாப்-5 பைக்குகள்!! ஆர்சி390 முதல் ராயல்என்பீல்டு ஹண்டர்350 வரையில்

ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650

ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தவுள்ளதாக ராயல் என்பீல்டு முன்பு கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த வகையில் அடுத்ததாக வெளிவரவுள்ள மோட்டார்சைக்கிள் தான் சூப்பர் மீட்டியோர் 650 ஆகும். கடந்த 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு மீட்டியோர் 350 பைக் விற்பனையில் உள்ளது. இதன் பெரிய உருவம் கொண்ட 650சிசி வெர்சனாக சூப்பர் மீட்டியோர் 650 கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மிகுந்த எதிர்பார்ப்பில் அறிமுகமாகவிருக்கும் டாப்-5 பைக்குகள்!! ஆர்சி390 முதல் ராயல்என்பீல்டு ஹண்டர்350 வரையில்

இருப்பினும் இதன் அறிமுகம் குறித்து தற்போதுவரையில் ராயல் என்பீல்டு நிறுவனத்திடம் இருந்து எந்தவொரு அறிவிப்பும் இல்லை. விற்பனையில் உள்ள இண்டர்செப்டர் 650 பைக்கின் அதே 650சிசி இணையான-இரட்டை என்ஜினையே பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படும் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் அறிமுகத்தை 2022 பிப்ரவரியில் எதிர்பார்க்கிறோம்.

மிகுந்த எதிர்பார்ப்பில் அறிமுகமாகவிருக்கும் டாப்-5 பைக்குகள்!! ஆர்சி390 முதல் ராயல்என்பீல்டு ஹண்டர்350 வரையில்

யெஸ்டி ரோட்கிங் & ADV (அட்வென்ச்சர்)

ஜாவா, பிஎஸ்ஏ பிராண்ட்களுக்கு மறுபிறவி கொடுத்திருப்பதை போல் பழமையான யெஸ்டி பிராண்டிற்கும் புத்துயிர் கொடுக்க கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. ரோட்கிங் 1980ஆம் காலக்கட்டங்களில் இந்தியாவில் விற்பனையில் இருந்துள்ளது. ஆனால் புதியதாக அறிமுகமாகவுள்ள ரோட்கிங் மோட்டார்சைக்கிளை நிச்சயமாக மாடர்ன் தரத்தில் எதிர்பார்க்கலாம்.

மிகுந்த எதிர்பார்ப்பில் அறிமுகமாகவிருக்கும் டாப்-5 பைக்குகள்!! ஆர்சி390 முதல் ராயல்என்பீல்டு ஹண்டர்350 வரையில்

புதிய ரோட்கிங் பைக்கின் தோற்றம் இன்னமும் வெளியாகவில்லை என்றாலும், யெஸ்டி பிராண்டில் இருந்து அறிமுகமாகவுள்ள மற்றொரு மோட்டார்சைக்கிளான ADV-இன் படம் ஒன்று சில வாரங்களுக்கு முன் இணையத்தில் கசிந்து வைரலாகி இருந்தது. பெயருக்கு ஏற்ப அட்வென்ச்சர் பைக்கிற்கான தோற்றத்தை கொண்டிருக்கும் ADV பைக்கின் அந்த லீக்கான படத்தைதான் மேலே காண்கிறீர்கள்.

மிகுந்த எதிர்பார்ப்பில் அறிமுகமாகவிருக்கும் டாப்-5 பைக்குகள்!! ஆர்சி390 முதல் ராயல்என்பீல்டு ஹண்டர்350 வரையில்

ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிளேன் 125/ விட்பிளேன் 125

இந்தியாவில் தற்போதைக்கு உள்ள மிக ஸ்டைலிஷான பைக்குகளுள் ஹஸ்க்வர்னா பைக்குகளும் அடங்குகின்றன. இந்தியாவில் 250சிசி-யில் ஸ்வார்ட்பிளேன் & விட்பிளேன் என்கிற இரு விதமான உடல் அமைப்புகளில் தற்சமயம் விற்பனை செய்யப்பட்டுவரும் ஹஸ்க்வர்னா பைக்குகள், கேடிஎம் 250 பைக்குகளின் அளவிற்கு விலையினை கொண்டில்லை என்பதுதான் ஆச்சிரியமான விஷயமே.

மிகுந்த எதிர்பார்ப்பில் அறிமுகமாகவிருக்கும் டாப்-5 பைக்குகள்!! ஆர்சி390 முதல் ராயல்என்பீல்டு ஹண்டர்350 வரையில்

இத்தகைய பைக்குகள் தான் பெரும்பாலானோர் வாங்கக்கூடிய வகையில் குறைவான விலையில், விரைவில் 125சிசி-யில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எந்த அளவிற்கு என்றால், தற்போதைய கேடிஎம் ட்யூக் 125 பைக்கை காட்டிலும் குறைவான விலையில் இவை வெளிவரலாம். ஆனால் புதிய ஸ்வார்ட்பிளேன் 125 & விட்பிளேன் 125 பைக்குகளில் ட்யூக்125 பைக்கின் அதே 125சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜினே பொருத்தப்பட உள்ளதாம்.

மிகுந்த எதிர்பார்ப்பில் அறிமுகமாகவிருக்கும் டாப்-5 பைக்குகள்!! ஆர்சி390 முதல் ராயல்என்பீல்டு ஹண்டர்350 வரையில்

ராயல் என்பீல்டு ஹண்டர் 350

வெற்றிக்கரமான மாடலாக அமைந்துள்ள மீட்டியோர் 350-இன் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் மற்றொரு ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளாக ஹண்டர் விற்பனைக்கு வரவுள்ளது. மீட்டியோர் 350-இன் அறிமுகத்தின்போது இருந்தே ஹண்டர் 350 பைக்குகள் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகின்றன.

மிகுந்த எதிர்பார்ப்பில் அறிமுகமாகவிருக்கும் டாப்-5 பைக்குகள்!! ஆர்சி390 முதல் ராயல்என்பீல்டு ஹண்டர்350 வரையில்

அப்போது கிடைக்க பெற்றிருந்த ஸ்பை படங்களின் மூலம், இது ஸ்க்ராம்ப்ளர்-வகையை சேர்ந்த மோட்டார்சைக்கிள் என்பதை அறிந்திருந்தோம். சூப்பர் மீட்டியோர் 650 பைக்கிற்கு அடுத்து ஹண்டர் மாடல் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், ராயல் என்பீல்டின் இந்த புதிய ஸ்க்ராம்ப்ளர் பைக் அறிமுகமாகுவதற்கு இன்னும் 4-6 மாதங்கள் கூட ஆகலாம்.

Most Read Articles
English summary
Top-10 Upcoming Bikes In India.
Story first published: Thursday, December 9, 2021, 2:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X