150சிசி-க்கு மேல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகள் இவைதான்!! யமஹா பைக்குகளுக்கு செம்ம ரெஸ்பான்ஸ்

தற்போதைய அசாதாரண சூழலில் 150- 200சிசி மோட்டார்சைக்கிள் பிரிவு 55.88 சதவீதம் கடந்த 2021 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்தமாக கடந்த மார்ச்சில் இந்த பிரிவில் 1,40,418 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

150சிசி-க்கு மேல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகள் இவைதான்!! யமஹா பைக்குகளுக்கு செம்ம ரெஸ்பான்ஸ்

அதுவே கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 150சிசி- 200சிசிக்குள் 90,080 மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கு 2020 மார்ச் 24ஆம் தேதியில் இருந்து நாடு தழுவிய அளவில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கை முக்கிய காரணமாக சொல்லலாம்.

150சிசி-க்கு மேல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகள் இவைதான்!! யமஹா பைக்குகளுக்கு செம்ம ரெஸ்பான்ஸ்

அதுவே இதற்கு முந்தைய 2021 பிப்ரவரி மாதத்தின் 1,43,138 மோட்டார்சைக்கிள்களின் விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் 2021 மார்ச்சின் விற்பனை எண்ணிக்கை 1.90% குறைவாகும். கடந்த மார்ச் மாத விற்பனையில் சுஸுகி ஜிக்ஸெரை தவிர்த்து இந்த பிரிவில் மற்ற அனைத்து மோட்டார்சைக்கிள்களின் விற்பனையும் 2020 மார்ச் உடன் ஒப்பிடுகையில் நேர்மறையாக இருந்துள்ளது.

150சிசி-க்கு மேல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகள் இவைதான்!! யமஹா பைக்குகளுக்கு செம்ம ரெஸ்பான்ஸ்

முதலிடத்தில் பஜாஜின் பல்சர் பைக்குகள் உள்ளன. 2021 மார்ச்சில் 38,571 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. அதேநேரம் 2020 மார்ச்சில் 27.47 சதவீதம் குறைவாக 31,720 யூனிட் பல்சர் பைக்குகளே விற்கப்பட்டு இருந்தன. ஆனால் 2021 பிப்ரவரியில் 37,193 பல்சர் பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன.

150சிசி-க்கு மேல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகள் இவைதான்!! யமஹா பைக்குகளுக்கு செம்ம ரெஸ்பான்ஸ்

டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் 33,162 யூனிட்களின் விற்பனை உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2020 மார்ச்சில் அப்பாச்சி பைக்குகள் சுமார் 52.37 சதவீதம் குறைவாக விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

150சிசி-க்கு மேல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகள் இவைதான்!! யமஹா பைக்குகளுக்கு செம்ம ரெஸ்பான்ஸ்

இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தை ஹோண்டா யூனிட்கார்ன் 160 பைக் 23,235 யூனிட்கள் விற்பனை உடன் பெற்றுள்ளது. 4வது, 5வது மற்றும் 6வது இடங்களில் யமஹாவின் தயாரிப்புகளான எஃப்.இசட், ஆர்15 மற்றும் எம்டி15 பைக்குகள் உள்ளன.

150சிசி-க்கு மேல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகள் இவைதான்!! யமஹா பைக்குகளுக்கு செம்ம ரெஸ்பான்ஸ்

கடந்த மார்ச் மாதத்தில் முறையே 16,653 எஃப்.இசட் பைக்குகளும், 6,988 ஆர்15 பைக்குகளும், 6,472 எம்டி15 பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பஜாஜ் அவென்சர் பைக்குகள் 3,074 யூனிட்கள் விற்கப்பட்டு இந்த வரிசையில் 7வது இடத்தை சொந்தமாக்கியுள்ளது.

150சிசி-க்கு மேல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகள் இவைதான்!! யமஹா பைக்குகளுக்கு செம்ம ரெஸ்பான்ஸ்

8வது மற்றும் 9வது இடங்களில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் மற்றும் எக்ஸ்பல்ஸ் 200 என்ற ஹீரோவின் தயாரிப்புகள் உள்ளன. ஏறக்குறைய 2,500 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள இந்த ஹீரோ பைக்குகளில் எக்ஸ்பல்ஸ் 200 கடந்த ஆண்டு மார்ச்சில் வெறும் 20 யூனிட்களும், எக்ஸ்ட்ரீம் 160ஆர் 194 யூனிட்களுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

150சிசி-க்கு மேல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகள் இவைதான்!! யமஹா பைக்குகளுக்கு செம்ம ரெஸ்பான்ஸ்

இதில் குறிப்பாக எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் விற்பனை சுமார் 12325 சதவீதம் உயர்ந்துள்ளது. 10வது இடத்தில் ஹோண்டா ஹார்னெட் 2.0 இந்திய சந்தையில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு தான் அறிமுகம் செய்யப்பட்டது.

150சிசி-க்கு மேல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகள் இவைதான்!! யமஹா பைக்குகளுக்கு செம்ம ரெஸ்பான்ஸ்

ஏற்கனவே கூறியதுபோல் சுஸுகி ஜிக்ஸெரின் விற்பனை மட்டுமே 2020 மார்ச் மாதத்தை காட்டிலும் 13.31 சதவீதம் குறைந்துள்ளது. 2021 மார்ச்சில் 2,019 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள இந்த சுஸுகி பைக் மாடல் 11வது இடத்தில் உள்ளது.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 Most Sold Motorcycles Between 150cc- 200cc In 2021 March. Pulsar, Apache Top In List.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X