500சிசி-க்கு மேல் மோட்டார்சைக்கிள் வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்!!

வெளிநாடுகளில் 125சிசி, 150சிசி-களில் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகமாகுவது மிகவும் அரிதானது. குறைந்தப்பட்சமே 250சிசி அல்லது 300சிசி தான். ஆனால் இந்திய சந்தை இன்னமும் 150சிசி, 200சிசி பைக்குகளில் தான் உள்ளது. அதற்காக நம் நாட்டில் 500சிசி-க்கு அதிகமான மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுவது இல்லை என நினைத்துவிட வேண்டாம்.

500சிசி-க்கு மேல் மோட்டார்சைக்கிள் வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்!!

ஏனெனில் Royal Enfield 650 Twins, Suzuki Hayabusa, CBR650R, Ninja உள்ளிட்ட 500சிசி-க்கும் அதிகமான கன திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் உள்ளன. குறிப்பாக ஏன் 500சிசி-க்கு மேல் என சொன்னேன் என கேட்டால், கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட 500சிசி+ மோட்டார்சைக்கிள்கள் குறித்த விபரங்களை தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

500சிசி-க்கு மேல் மோட்டார்சைக்கிள் வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்!!

500சிசி-க்கு மேல் மட்டும் மொத்தம் 1,103 மோட்டார்சைக்கிள்கள் கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு ஜூலையில் 1,345 மோட்டார்சைக்கிள்கள் விற்கப்பட்டு இருந்தன. இந்த வகையில் இந்தியாவில் 500சிசி+ மோட்டார்சைக்கிள்களின் விற்பனை 17.89% குறைந்துள்ளது.

500சிசி-க்கு மேல் மோட்டார்சைக்கிள் வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்!!

இதில் அதிகப்பட்சமாக எந்த நிறுவனத்தின் மாடல் விற்பனை செய்யப்பட்டிருக்கும் என்பதை இந்நேரத்தில் நீங்கள் கண்டுப்பிடித்திருப்பீர்கள், ஆம் Royal Enfield 650 Twins தான். 500சிசி+ மோட்டார்சைக்கிள்கள் மொத்தமாக விற்பனையானதே 1,103 தான். இதில் சுமார் 73.53% பங்கை இந்த Royal Enfield மோட்டார்சைக்கிள்கள் தான் கொண்டுள்ளன.

500சிசி-க்கு மேல் மோட்டார்சைக்கிள் வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்!!

இவை இரண்டையும் சேர்த்து கடந்த மாதத்தில் மொத்தமாக 811 யூனிட்கள் Royal Enfield நிறுவனம் விற்றுள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இதுவே குறைவு. ஏனெனில் 2020 ஜூலையில் இதனை காட்டிலும் 23.35 சதவீதம் அதிகமாக 1,058 Royal Enfield 650 Twins பைக்குகள் விற்பனையாகி இருந்தன.

500சிசி-க்கு மேல் மோட்டார்சைக்கிள் வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்!!

இந்தியாவில் Royal Enfield-இன் 650 Twins பைக்குகளாக Interceptor 650 & Continental GT650 என்பவை விற்பனை செய்யப்படுகின்றன. இவை இரண்டையும் சேர்த்து கடந்த மாதத்தில் மொத்தமாக 811 யூனிட்கள் Royal Enfield நிறுவனம் விற்றுள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இதுவே குறைவு.

500சிசி-க்கு மேல் மோட்டார்சைக்கிள் வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்!!

ஏனெனில் 2020 ஜூலையில் இதனை காட்டிலும் 23.35 சதவீதம் அதிகமாக 1,058 Royal Enfield 650 Twins பைக்குகள் விற்பனையாகி இருந்தன. இந்த அளவிற்கு இந்த Royal Enfield பைக்குகள் விற்பனையாகுவதற்கு முக்கிய காரணம் அவற்றின் மலிவான விலைகள் தான். ஏனெனில் Interceptor 650 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.75 லட்சம் மட்டுமே.

500சிசி-க்கு மேல் மோட்டார்சைக்கிள் வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்!!
Rank Model Jul-21 Jul-20 Growth (%)
1 Royal Enfield 650 Twin 811 1,058 -23.25
2 Kawasaki Z900 44 0 -
3 Suzuki Hayabusa 31 0 -
4 Honda CBR650 27 0 -
5 Triumph Tiger 900 25 26 -3.85
6 Kawasaki Ninja 650 20 42 -52.38
7 Triumph Street Twin 20 11 81.82
8 Kawasaki Ninja ZX-10R 18 0 -
9 Kawasaki Ninja 1000 16 33 -51.32
10 Kawasaki Versys 650 14 0 -

இதற்கு அடுத்துள்ள மோட்டார்சைக்கிள் 50 யூனிட் கூட விற்பனையாகவில்லை. இரண்டாவது இடத்தில் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட Kawasaki Z900 பைக் உள்ளது. கடந்த மாதத்தில் இந்த Kawasaki பைக் மொத்தம் 44 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

500சிசி-க்கு மேல் மோட்டார்சைக்கிள் வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்!!

பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட Suzuki-இன் சூப்பர்பைக்கான Hayabusa கடந்த ஜூலையில் 31 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த லிஸ்ட்டில் முன்னிலையில் இருப்பவைகளில் பாதி கடந்த ஆண்டு இறுதியில் இருந்து புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருபவை ஆகும்.

500சிசி-க்கு மேல் மோட்டார்சைக்கிள் வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்!!

Kawasaki நிறுவனத்தின் 1000சிசி மோட்டார்சைக்கிள்களான Ninja 1000 மற்றும் Versys 1000 முறையே 16 மற்றும் 6 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் Versys 1000 2020 ஜூலை மாதத்தில் வெறும் ஒன்று மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

500சிசி-க்கு மேல் மோட்டார்சைக்கிள் வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்!!

2020 ஜூலை மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட 500சிசி+ மோட்டார்சைக்கிகளில் பெரும்பான்மையானவை கடந்த ஜூலையில் ஒரு யூனிட் கூட விற்பனையாகாதது தான் ஆச்சிரியமாக உள்ளது. குறிப்பாக சுமார் 62 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு, 650 Twins பைக்குகளுக்கு அடுத்ததாக இருந்த Harley-Davidson-இன் Street 750 மாடல் இம்முறை ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை.

500சிசி-க்கு மேல் மோட்டார்சைக்கிள் வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்!!

Street 750 மட்டுமின்றி Harley-Davidson-இன் மோட்டார்சைக்கிள்கள் பெரும்பாலானவை கடந்த மாதத்தில் மிகவும் குறைவாக (சில மாடல்கள் 1 யூனிட் கூட இல்லை) விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு காரணம் எல்லாருக்கு தெரிந்தது தான், அமெரிக்க Harley-Davidson நிறுவனம் இந்தியாவில் நேரடி வணிகத்தை நிறுத்தி கொண்டதே.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 Motorcycles 500cc+ July 2021 – RE 650 Twins, Hayabusa, CBR650R, Ninja.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X