ராயல்என்பீல்டின் விற்பனையில் கிளாசிக்கிற்கு அடுத்த இடத்தில் மீட்டியோர் 350!! புல்லட் மூன்றாம் இடத்திற்கு சரிவு

கடந்த 2021 ஜூன் மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 200சிசி- 500சிசி மோட்டார்சைக்கிள்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல்என்பீல்டின் விற்பனையில் கிளாசிக்கிற்கு அடுத்த இடத்தில் மீட்டியோர் 350!! புல்லட் மூன்றாம் இடத்திற்கு சரிவு

200சிசி-யில் இருந்து 500சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 43,741 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த பிரிவில் 44,102 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ராயல்என்பீல்டின் விற்பனையில் கிளாசிக்கிற்கு அடுத்த இடத்தில் மீட்டியோர் 350!! புல்லட் மூன்றாம் இடத்திற்கு சரிவு

இந்த வகையில் இந்த பிரிவு மோட்டார்சைக்கிள்களின் விற்பனை 0.82% குறைந்துள்ளது. 2020 ஜூன் உடன் ஒப்பிடுகையில் இந்த பிரிவில் கேடிஎம் 250 மற்றும் 390 பைக்குகளை தவிர்த்து பெரும்பான்மையான மோட்டார்சைக்கிள்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

ராயல்என்பீல்டின் விற்பனையில் கிளாசிக்கிற்கு அடுத்த இடத்தில் மீட்டியோர் 350!! புல்லட் மூன்றாம் இடத்திற்கு சரிவு

ஆனால் அதேநேரம் முந்தைய 2021 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 200சிசி-500சிசி மோட்டார்சைக்கிள்களின் விற்பனை சுமார் 98.43% அதிகரித்துள்ளது. மே மாதத்தில் ஒரே ஒரு ஹோண்டா சிபி300ஆர் பைக் விற்பனையாகி இருந்தது. அது மட்டுமே கடந்த மாதத்தில் விற்பனையில் சரிவை கண்டுள்ளது.

ராயல்என்பீல்டின் விற்பனையில் கிளாசிக்கிற்கு அடுத்த இடத்தில் மீட்டியோர் 350!! புல்லட் மூன்றாம் இடத்திற்கு சரிவு

வழக்கம்போல் பிரிமீயம் மோட்டார்சைக்கிள்கள் எனப்படும் இந்த பிரிவில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. எந்த அளவிற்கு என்றால், இந்த டாப்-10 மோட்டார்சைக்கிள்களில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பங்கு மட்டுமே சுமார் 80% ஆகும்.

Rank Model Jun-21 Jun-20 Growth (%)
1 Royal Enfield Classic 350 17,377 22,699 -23.45
2 Royal Enfield Meteor 350 8,770 0 -
3 Royal Enfield Bullet 350 5,317 8,108 -34.42
4 Bajaj Pulsar 220 3,540 4,371 -19.01
5 Royal Enfield Electra 350 3,137 4,058 -22.70
6 Honda H'ness CB350 1,853 0 -
7 Royal Enfield Himalayan 684 835 -18.08
8 Yamaha FZ25 562 0 -
9 KTM 250 536 300 78.67
10 Bajaj Avenger 220 500 830 -39.76
ராயல்என்பீல்டின் விற்பனையில் கிளாசிக்கிற்கு அடுத்த இடத்தில் மீட்டியோர் 350!! புல்லட் மூன்றாம் இடத்திற்கு சரிவு

ராயல் என்பீல்டின் சிறந்த விற்பனை மாடலாக விளங்கும் கிளாசிக் 350 இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் உள்ளது. 17,377 யூனிட்களின் விற்பனையுடன் இந்த டாப்-10 லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பினும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் விற்பனை 23.45% குறைந்துள்ளது.

ராயல்என்பீல்டின் விற்பனையில் கிளாசிக்கிற்கு அடுத்த இடத்தில் மீட்டியோர் 350!! புல்லட் மூன்றாம் இடத்திற்கு சரிவு

ஏனெனில் அந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 22,699 கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும் 2020 மே மாதத்தை காட்டிலும் சுமார் 88.08% அதிகமாகும். இந்த 10 பைக்குகளின் விற்பனையில் கிளாசிக்கின் பங்கு மட்டுமே கிட்டத்தட்ட 40% உள்ளது.

ராயல்என்பீல்டின் விற்பனையில் கிளாசிக்கிற்கு அடுத்த இடத்தில் மீட்டியோர் 350!! புல்லட் மூன்றாம் இடத்திற்கு சரிவு

இதற்கிடையில் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கை சந்தையில் அறிமுகப்படுத்த ராயல் என்பீல்டு நிறுவனம் தயாராகி வருகிறது. இரண்டாவது ராயல் என்பீல்டின் சமீபத்திய அறிமுகமான மீட்டியோர் 8,770 யூனிட்களின் விற்பனையுடன் உள்ளது.

ராயல்என்பீல்டின் விற்பனையில் கிளாசிக்கிற்கு அடுத்த இடத்தில் மீட்டியோர் 350!! புல்லட் மூன்றாம் இடத்திற்கு சரிவு

கடந்த மே மாதத்தில் 3,375 மீட்டியோர் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. பொதுவாக கிளாசிக் 350 பைக்கிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ராயல் என்பீல்டு புல்லட் 350 மாடல் தான் இருப்பது வழக்கம். ஆனால் இம்முறை புல்லட் 350 5,317 யூனிட்களின் விற்பனை உடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ராயல்என்பீல்டின் விற்பனையில் கிளாசிக்கிற்கு அடுத்த இடத்தில் மீட்டியோர் 350!! புல்லட் மூன்றாம் இடத்திற்கு சரிவு

நான்காவது இடத்தில் பஜாஜின் பல்சர் 220 3,540 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. இதற்கு அடுத்து மீண்டும் ராயல் என்பீல்டு பைக்காக எலக்ட்ரா 350 ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆறாவது இடத்தை மீட்டியோர் 350 பைக்கிற்கு போட்டியாக ஹோண்டா அறிமுகப்படுத்திய ஹைனெஸ் சிபி350 பிடித்துள்ளது.

ராயல்என்பீல்டின் விற்பனையில் கிளாசிக்கிற்கு அடுத்த இடத்தில் மீட்டியோர் 350!! புல்லட் மூன்றாம் இடத்திற்கு சரிவு

இவற்றிற்கு அடுத்து இந்த டாப்-10 லிஸ்ட்டில் உள்ள மோட்டார்சைக்கிள்களின் விற்பனை எண்ணிக்கை ஆயிரத்தை காட்டிலும் குறைவாகவே உள்ளன. இந்த வகையில் கடைசி நான்கு இடங்களில் உள்ள ஹிமாலயன், யமஹா எஃப்.இசட்25, கேடிஎம் 250 மற்றும் பஜாஜ் அவென்ஞ்சர் 220 பைக்குகளின் விற்பனை எண்ணிக்கைகள் முறையே 684, 562, 536 மற்றும் 500 ஆகும்.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 Motorcycles 200cc To 500cc June 2021, Read All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X