அதிரடியாக உயர்ந்த ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை!! ஓரங்கட்டப்படும் நிலையில் புல்லட் 350

கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 200சிசி- 500சிசி மோட்டார்சைக்கிள்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

அதிரடியாக உயர்ந்த ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை!! ஓரங்கட்டப்படும் நிலையில் புல்லட் 350

ஒரு காலத்தில் இந்தியாவில் 100சிசி-யிலும், 150சிசி-யிலும் தான் அதிக பைக்குகள் விற்பனை செய்யப்பட்டன. 200சிசி-க்கு மேல் மோட்டார்சைக்கிளை வாங்குவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால் தற்போது 200சிசி- 500சிசி பிரிவு பல்வேறு மாடல்களுடன் விற்பனையில் களைக்கட்ட துவங்கியுள்ளது.

அதிரடியாக உயர்ந்த ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை!! ஓரங்கட்டப்படும் நிலையில் புல்லட் 350

இந்த பிரிவில் நம்மூர் ராயல் என்பீல்டு பிராண்டின் ஆதிக்கம் தான் எப்போதும் அதிகமாக இருக்கும் என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். இது கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையிலும் தொடர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் இந்த பிரிவில் மொத்தம் 49,263 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதிரடியாக உயர்ந்த ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை!! ஓரங்கட்டப்படும் நிலையில் புல்லட் 350

ஆனால் 2020 ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 60,889 பைக்குகள் 200சிசி- 500சிசியில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் 2021 ஆகஸ்ட்டில் இத்தகைய மோட்டார்சைக்கிள்களின் விற்பனை 19.09% குறைந்துள்ளது. மிடில்-வெய்ட் மோட்டார்சைக்கிள்கள் எனப்படும் 200சிசி- 500சிசி பைக்குகளின் விற்பனை இந்த அளவிற்கு குறைந்தததற்கு காரணங்களுள் ஒன்று, கிளாசிக் 350-இன் வீழ்ச்சியாகும்.

அதிரடியாக உயர்ந்த ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை!! ஓரங்கட்டப்படும் நிலையில் புல்லட் 350

ஏற்கனவே கூறியதுதான், இந்த பிரிவில் எப்போதுமே ராயல் என்பீல்டின் ஆட்சி தான். இந்த நிறுவனத்தின் கிளாசிக் 350 மாடல் தான் பெரும்பாலும் இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருந்து வருகிறது. முதலிடத்தை பிடித்து இருந்தாலும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகளின் விற்பனை 2020 ஆகஸ்ட் உடன் ஒப்பிடுகையில், 2021 ஆகஸ்ட்டில் சுமார் 32.59% குறைந்துள்ளது.

அதிரடியாக உயர்ந்த ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை!! ஓரங்கட்டப்படும் நிலையில் புல்லட் 350
Rank 200-500cc Motorcycle Sales Aug-21 Aug-20 Growth (%) % Share Aug 21
1 Royal Enfield Classic 350 23,453 34,791 -32.59 47.61
2 Royal Enfield Meteor 350 6,381 0 - 12.95
3 Pulser 220 4,161 5,558 -25.13 8.45
4 Royal Enfield Bullet 350 3,669 7,257 -49.44 7.45
5 Royal Enfield Himalayan 2,770 530 422.64 5.62
6 Royal Enfield Electro 350 1,963 4,129 -52.46 3.98
7 KTM 250 1,444 1,391 3.81 2.93
8 Honda H'ness CB350 1,047 0 - 2.13
9 Yamaha FZ25 991 1,736 -42.91 2.01
10 KTM 390 760 785 -3.18 1.54

கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் மொத்தம் 34,791 கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் வெறும் 23,453 மோட்டார்சைக்கிள்களே விற்கப்பட்டுள்ளன. இரண்டாவது இடத்தில் மற்றொரு ராயல் என்பீல்டு பைக்காக மீட்டியோர் 350 6,381 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. மிக பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த ஆண்டு இறுதியில் தான் மீட்டியோர் 350 சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிரடியாக உயர்ந்த ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை!! ஓரங்கட்டப்படும் நிலையில் புல்லட் 350

இந்த லிஸ்ட்டில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு மத்தியில் முன்னிலையில் இருக்கும் மாடல் பஜாஜ் பல்சர் 220 ஆகும். பஜாஜ் பல்சர் பைக்குகளுக்கு எல்லா நேரங்களிலும் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என்பது நமக்கு தெரியும். இது ஆகஸ்ட்டிலும் தொடர்ந்துள்ளது என்றாலும், மீட்டியோர் 350-இன் வருகையினால் 2020 ஆகஸ்ட்டில் 2வது இடத்தில் இருந்த பல்சர் 220, இம்முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அதிரடியாக உயர்ந்த ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை!! ஓரங்கட்டப்படும் நிலையில் புல்லட் 350

நான்காவது இடத்தை, தொடர்ச்சியாக விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துவரும் புல்லட் 350 பெற்றுள்ளது. கடந்த மாதத்தில் 3,669 ராயல் என்பீல்டு புல்லட் பைக்குகள் விற்கப்பட்டுள்ளன. ஆனால் 2020 ஆகஸ்ட்டில் கிட்டத்தட்ட 50% அதிகமாக 7,257 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

அதிரடியாக உயர்ந்த ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை!! ஓரங்கட்டப்படும் நிலையில் புல்லட் 350

இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள ராயல் என்பீல்டின் அட்வென்ச்சர் பைக் மாடலான ஹிமாலயனை பற்றி தான் முக்கிய பார்க்க வேண்டும். ஏனெனில் இதன் விற்பனை தான் எல்லாரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக சுமார் 422.64 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020 ஆகஸ்ட்டில் வெறும் 530 ஹிமாலயன் பைக்குகள் விற்கப்பட்டன.

அதிரடியாக உயர்ந்த ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை!! ஓரங்கட்டப்படும் நிலையில் புல்லட் 350

ஆனால் கடந்த மாதத்தில் 2,770 யூனிட் ஹிமாலயன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ராயல் என்பீல்டு ஹிமாலயனின் புதிய தலைமுறை குறிப்பிடத்தக்க அப்கிரேட்களுடன் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அறிமுகம் இந்த விற்பனை வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாகும்.

அதிரடியாக உயர்ந்த ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை!! ஓரங்கட்டப்படும் நிலையில் புல்லட் 350

தற்சமயம் ஹிமாலயன் அட்வென்ச்சர் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.05 லட்சமாக உள்ளது. ஹிமாலயனை போல் கேடிஎம் 250 பைக்குகளின் விற்பனையும் கணிசமாக (3.81%) உயர்ந்துள்ளது. ராயல் என்பீல்டின் மீட்டியோர் 350 பைக்கிற்கு போட்டியாக களமிறக்கப்பட்ட ஹோண்டா ஹைனெஸ் சிபி350 கடந்த மாதத்தில் 1,047 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Top 10 Motorcycles 200cc To 500cc August 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X