இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான பைக் எதுன்னு தெரியுமா? நீங்க நெனைக்கற அந்த பைக்தான்!

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 பைக்குகளின் பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான பைக் எதுன்னு தெரியுமா? நீங்க நெனைக்கற அந்த பைக்தான்!

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 பைக்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹீரோ ஸ்பிளெண்டர் முதல் இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் ஹீரோ நிறுவனம் 2,41,703 ஸ்பிளெண்டர் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2,32,301 ஆக இருந்தது.

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான பைக் எதுன்னு தெரியுமா? நீங்க நெனைக்கற அந்த பைக்தான்!

இதன் மூலம் விற்பனையில் 4 சதவீத வளர்ச்சியை ஹீரோ ஸ்பிளெண்டர் பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் ஹோண்டா சிபி ஷைன் 2வது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் ஹோண்டா நிறுவனம் 1,29,926 சிபி ஷைன் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1,06,133 ஆக மட்டுமே இருந்தது.

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான பைக் எதுன்னு தெரியுமா? நீங்க நெனைக்கற அந்த பைக்தான்!

இதன் மூலம் விற்பனையில் 22.4 சதவீத வளர்ச்சியை ஹோண்டா சிபி ஷைன் பதிவு செய்து அசத்தியுள்ளது. இந்த பட்டியலில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் 3வது இடத்தை பிடித்துள்ளது. ஹீரோ நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1,77,168 ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 1,14,575 ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான பைக் எதுன்னு தெரியுமா? நீங்க நெனைக்கற அந்த பைக்தான்!

இது 35.3 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் 4வது இடத்தை பஜாஜ் பல்சர் பிடித்துள்ளது. பஜாஜ் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 87,202 பல்சர் பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 66,107 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் பஜாஜ் பல்சர் பைக்கின் விற்பனை 24.1 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான பைக் எதுன்னு தெரியுமா? நீங்க நெனைக்கற அந்த பைக்தான்!

இந்த பட்டியலில் பஜாஜ் பிளாட்டினா 5வது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் பஜாஜ் நிறுவனம் 56,615 பிளாட்டினா பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 40,294 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் பஜாஜ் பிளாட்டினா பைக் விற்பனையில் 40.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான பைக் எதுன்னு தெரியுமா? நீங்க நெனைக்கற அந்த பைக்தான்!

இந்த பட்டியலில் பஜாஜ் சிடி100 பைக் 6வது இடத்தை பிடித்துள்ளது. பஜாஜ் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 34,863 சிடி100 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 26,578 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் பஜாஜ் சிடி100 விற்பனையில் 23.7 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான பைக் எதுன்னு தெரியுமா? நீங்க நெனைக்கற அந்த பைக்தான்!

இந்த பட்டியலில் 7வது இடத்தை ஹீரோ கிளாமர் பிடித்துள்ளது. ஹீரோ நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 54,315 கிளாமர் பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 23,747 ஆக குறைந்துள்ளது. இது 56.2 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் 8வது இடத்தை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பிடித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான பைக் எதுன்னு தெரியுமா? நீங்க நெனைக்கற அந்த பைக்தான்!

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 34,791 கிளாசிக் 350 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 23,453 ஆக குறைந்துள்ளது. புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான பைக் எதுன்னு தெரியுமா? நீங்க நெனைக்கற அந்த பைக்தான்!

இதன் வருகைக்காக வாடிக்கையாளர்கள் பலர் காத்து கொண்டிருந்தனர். இதன் காரணமாக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனை குறைந்திருக்கலாம். ஆனால் தற்போது புதிய தலைமுறை மாடல் வந்து விட்டதால், வரும் காலங்களில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான பைக் எதுன்னு தெரியுமா? நீங்க நெனைக்கற அந்த பைக்தான்!

இந்த பட்டியலில் டிவிஎஸ் அப்பாச்சி 9வது இடத்தை பிடித்துள்ளது. டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 33,540 அப்பாச்சி பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 16,423 ஆக குறைந்துள்ளது. இது 51 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தை ஹீரோ பேஷன் பிடித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான பைக் எதுன்னு தெரியுமா? நீங்க நெனைக்கற அந்த பைக்தான்!

ஹீரோ நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 52,471 பேஷன் பைக்குகளை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 14,812 ஆக குறைந்துள்ளது. இது 71.7 சதவீத வீழ்ச்சியாகும். இந்தியாவில் விரைவில் பண்டிகை காலம் தொடங்கவுள்ளது. இதை முன்னிட்டு பலர் புதிய இரு சக்கர வாகனங்களை வாங்குவார்கள்.

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான பைக் எதுன்னு தெரியுமா? நீங்க நெனைக்கற அந்த பைக்தான்!

எனவே வரும் மாதங்களில் இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசு விதித்து வரும் கட்டுப்பாடுகளால் இரு சக்கர வாகனங்களுக்கான தேவை உயர்ந்து கொண்டே வருகிறது. அரசு திடீரென பேருந்து சேவைக்கு தடை விதித்து விடுகிறது.

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான பைக் எதுன்னு தெரியுமா? நீங்க நெனைக்கற அந்த பைக்தான்!

அல்லது இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்து விடுகிறது. எனவே பொது போக்குவரத்தை நம்பியிருக்க மக்கள் தயாராக இல்லை. அதற்கு பதிலாக சொந்த வாகனங்களையே மக்கள் அதிகம் நம்புகின்றனர். எனவே வரும் மாதங்களில் இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

Most Read Articles
English summary
Top 10 motorcycles in august 2021 hero splendor tops the list
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X