கடந்த ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்கள்!! தொடர்ந்து முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா

கடந்த 2021 ஜூன் மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டர்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்கள்!! தொடர்ந்து முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா

2021 ஜூன் மாதத்தை ஹீரோ ஸ்பிளெண்டர், ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் மாடல்களுக்கு அடுத்ததாக அதிகளவில் விற்பனையான மூன்றாவது இருசக்கர வாகனம் என்கிற பெயருடன் ஹோண்டா ஆக்டிவா நிறைவு செய்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்கள்!! தொடர்ந்து முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா

பெரும்பாலும் இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் ஆக்டிவா இம்முறை சற்று பின்னடைவு அடைந்திருந்தாலும், ஸ்கூட்டர்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தையே தக்க வைத்து கொண்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்கள்!! தொடர்ந்து முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா

இன்னும் சொல்லப்போனால், அதிகம் விற்பனையான இரண்டாவது ஸ்கூட்டர் மாடலை காட்டிலும் ஹோண்டா ஆக்டிவாவின் விற்பனை கடந்த மாதத்தில் சுமார் 3 மடங்கு அதிகமாக உள்ளது. ஹோண்டா ஆக்டிவாவின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 94,274 ஆகும்.

கடந்த ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்கள்!! தொடர்ந்து முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா

இரண்டாவது இடத்தில் உள்ள டிவிஎஸ் ஜூபிட்டரின் விற்பனை எண்ணிக்கை 31,848 ஆகும். இருப்பினும் ஆக்டிவாவின் விற்பனை அதன் 2020 ஜூன் மாத விற்பனையை காட்டிலும் 22.52 சதவீதம் கடந்த ஜூன் மாதத்தில் குறைந்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் 1.21 லட்ச ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கடந்த ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்கள்!! தொடர்ந்து முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா

அதேபோல் ஜூபிட்டரின் விற்பனையும் 15.82% குறைந்துள்ளது. ஆனால் மூன்றாவது இடத்தில் உள்ள சுஸுகி ஆக்ஸஸின் விற்பனை 2020 ஜூன் மாதத்தை காட்டிலும் 68.09% அதிகரித்துள்ளது. கடந்த 2021 ஜூனில் ஜூபிட்டரை காட்டிலும் சில நூறு யூனிட்கள் மட்டுமே குறைவாக 31,399 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்கள்!! தொடர்ந்து முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா

இந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தை இளைஞர்களின் ஃபேவரட் ஸ்கூட்டரான ஹோண்டா டியோ 18,983 யூனிட்களின் விற்பனையுடன் பிடித்துள்ளது. இதன் விற்பனை 2020 ஜூன்-2021 ஜூன் ஒப்பிடுகையில் 22.16% உயர்ந்துள்ளது. அதேபோல் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ள ஹீரோ பிளஷரின் விற்பனையும் 19.48% அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்கள்!! தொடர்ந்து முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா

கடந்த மாதத்தில் பிளஷர் விற்பனை செய்யப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கை 17,937 ஆகும். டிவிஎஸ் எண்டார்க் 15,544 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு ஆறாவது இடத்தில் உள்ளது. இவற்றிற்கு அடுத்துள்ள ஸ்கூட்டர்களின் விற்பனை 8 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளன.

Rank Model June 2021 June 2020 Growth (%)
1 Honda Activa 94,274 1,21,668 -22.52
2 TVS Jupiter 31,848 37,831 -15.82
3 Suzuki Access 31,399 18,680 68.09
4 Honda Dio 18,983 15,540 22.16
5 Hero Pleasure 17,937 15,012 19.48
6 TVS Ntorq 15,544 12,883 20.66
7 Suzuki Burgman 7,935 12,475 -36.39
8 Hero Destini 5,491 8,291 -33.77
9 TVS Pep+ 3,368 7,832 57
10 Honda Grazia 3,334 7,116 -53.15
கடந்த ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்கள்!! தொடர்ந்து முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா

சுஸுகி பர்க்மேன் 7,935 யூனிட்களின் விற்பனையுடன் 7வது இடத்தையும், ஹீரோ டெஸ்டினி 5,491 யூனிட்களின் விற்பனையுடன் 8வது இடத்தையும் பெற்றுள்ளன. இவை இரண்டின் விற்பனையும் 2020 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் சில ஆயிரங்கள் குறைந்துள்ளன.

கடந்த ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்கள்!! தொடர்ந்து முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா

இவற்றை காட்டிலும் இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களில் உள்ள டிவிஎஸ் பெப்+ மற்றும் ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர்களின் விற்பனை 2020 ஜுன் மாதத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் பாதியாக குறைந்துள்ளது. அதேநேரம் இவை இரண்டின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகளில் பெரிய அளவில் வித்தியாசமில்லை.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 Scooters In June 2021, Honda Activa posted 94,274 units.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X