பண்டிகை மாதத்திலும் சரிந்துள்ள 2-வீலர்ஸ் விற்பனை!! கிட்டத்தட்ட 2.30 லட்ச யூனிட்கள் குறைந்தன!

கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை அட்டவணையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பண்டிகை மாதத்திலும் சரிந்துள்ள 2-வீலர்ஸ் விற்பனை!! டாப்-10 வாகனங்களின் விற்பனை 2.30 லட்ச யூனிட்கள் குறைந்தன!

மாதந்தோறும் வெளியாகும் இருசக்கர வாகனங்கள் விற்பனை எண்ணிக்கைகள் எப்போதும் நமது கவனத்தை ஈர்க்கக்கூடியவை. இருப்பினும் கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் இருசக்கர வாகனங்களின் விற்பனை 16.78% குறைந்துள்ளது.

பண்டிகை மாதத்திலும் சரிந்துள்ள 2-வீலர்ஸ் விற்பனை!! டாப்-10 வாகனங்களின் விற்பனை 2.30 லட்ச யூனிட்கள் குறைந்தன!

ஏனெனில் கடந்த மாதத்தில் மொத்தம் 11,26,760 2-வீலர்ஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் 2,27,212 யூனிட்கள் அதிகமாக 13,53,972 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இத்தனைக்கும் கடந்த மாதத்தில் சில பண்டிகை நாட்கள் வந்தன.

பண்டிகை மாதத்திலும் சரிந்துள்ள 2-வீலர்ஸ் விற்பனை!! டாப்-10 வாகனங்களின் விற்பனை 2.30 லட்ச யூனிட்கள் குறைந்தன!

இதனால் இருசக்கர வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்மறையாக 16.78% குறைந்துள்ளது. கடந்த மாதத்திலும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட மோட்டார்சைக்கிளாக வழக்கம்போல் ஹீரோ ஸ்பிளெண்டரே தொடர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 2,67,821 ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பண்டிகை மாதத்திலும் சரிந்துள்ள 2-வீலர்ஸ் விற்பனை!! டாப்-10 வாகனங்களின் விற்பனை 2.30 லட்ச யூனிட்கள் குறைந்தன!

இது 2020 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 15.19% குறைவாகும். ஏனென்றால் அந்த மாதத்தில் 3,15,798 ஸ்பிளெண்டர் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதற்கடுத்த இடத்தை ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் எப்போதும் போல் தொடர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் 1,96,699 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பண்டிகை மாதத்திலும் சரிந்துள்ள 2-வீலர்ஸ் விற்பனை!! டாப்-10 வாகனங்களின் விற்பனை 2.30 லட்ச யூனிட்கள் குறைந்தன!

2020 அக்டோபரில் விற்பனை செய்யப்பட்ட ஆக்டிவா ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 2,39,570 ஆகும். இதன்படி பார்க்கும்போது ஹோண்டா ஸ்கூட்டர்களின் விற்பனை 17.89% குறைந்துள்ளது. இவை இரண்டு மட்டுமின்றி, 2020 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், பஜாஜ் பிளாட்டினாவை தவிர்த்து பெரும்பான்மையான இருசக்கர வாகனங்களின் விற்பனை குறைந்துள்ளது.

பண்டிகை மாதத்திலும் சரிந்துள்ள 2-வீலர்ஸ் விற்பனை!! டாப்-10 வாகனங்களின் விற்பனை 2.30 லட்ச யூனிட்கள் குறைந்தன!

இம்முறை அதிகம் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தை ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் 1,64,311 யூனிட்களுடன் பிடித்துள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டில் இதே அக்டோபரில் 2,33,061 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன. இதன்படி பார்க்கும்போது, இந்த பிரபலமான ஹீரோ பைக்கின் விற்பனை கிட்டத்தட்ட 29.50% கடந்த மாதத்தில் சரிந்துள்ளது. அதாவது 68,750 யூனிட்கள்.

பண்டிகை மாதத்திலும் சரிந்துள்ள 2-வீலர்ஸ் விற்பனை!! டாப்-10 வாகனங்களின் விற்பனை 2.30 லட்ச யூனிட்கள் குறைந்தன!

நான்காவது இடத்தில் ஹோண்டாவின் சிபி ஷைன் மாடல் உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட சிபி ஷைன் மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை 1,13,554 ஆகும். 2020 அக்டோபருடன் ஒப்பிடுகையில் சிபி ஷைனின் விற்பனை பெரிய அளவில் குறையவில்லை. வெறும் 4.21% மட்டுமே குறைந்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்திலும் கிட்டத்தட்ட இதே அளவிலான (1,18,547 யூனிட்கள்) சிபி ஷைன் பைக்குகளையே ஹோண்டா விற்பனை செய்திருந்தது.

பண்டிகை மாதத்திலும் சரிந்துள்ள 2-வீலர்ஸ் விற்பனை!! டாப்-10 வாகனங்களின் விற்பனை 2.30 லட்ச யூனிட்கள் குறைந்தன!

இவ்வாறு டாப்-10 2-வீலர்ஸ் லிஸ்ட்டில் முதல் நான்கு இடங்களை ஹீரோ மோட்டோகார்ப் & ஹோண்டா நிறுவனங்களின் தயாரிப்புகள் ஆக்கிரமித்திருக்க, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களை பஜாஜ் ஆட்டோவின் தயாரிப்புகள் பெற்றுள்ளன. 5வது இடத்தில் உள்ள பிரபலமான பல்சர் பைக்குகள் கடந்த மாதத்தில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கை 86,500 ஆகும்.

பண்டிகை மாதத்திலும் சரிந்துள்ள 2-வீலர்ஸ் விற்பனை!! டாப்-10 வாகனங்களின் விற்பனை 2.30 லட்ச யூனிட்கள் குறைந்தன!

இதில் பல்சர் 125 மாடலில் இருந்து பல்சர் 220எஃப் வரையில் அனைத்து மாடல்களின் விற்பனையும் அடங்குகின்றன. 86,500 என்ற எண்ணிக்கை உண்மையில் குறைவு தான். ஏனெனில் 2020 அக்.இல் 1,38,218 பல்சர் பைக்குகளை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பல்சர் பைக்குகளின் விற்பனை சுமார் 51,718 யூனிட்கள் குறைந்துள்ளன.

பண்டிகை மாதத்திலும் சரிந்துள்ள 2-வீலர்ஸ் விற்பனை!! டாப்-10 வாகனங்களின் விற்பனை 2.30 லட்ச யூனிட்கள் குறைந்தன!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சமீபத்தில் தான் அதன் முற்றிலும் புதிய 250சிசி பல்சர் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளதால், வரும் மாதங்களில் பல்சர் பைக்குகளின் விற்பனை அதிகரிக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். இந்த வரிசையில் ஆறாவது இடத்தில் பிளாட்டினா மாடல் உள்ளது. ஏற்கனவே கூறியதுதான், இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடந்த ஆண்டு அக்டோபரை காட்டிலும் கடந்த அக்டோபரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஒரே மாடல் பிளாட்டினா தான்.

பண்டிகை மாதத்திலும் சரிந்துள்ள 2-வீலர்ஸ் விற்பனை!! டாப்-10 வாகனங்களின் விற்பனை 2.30 லட்ச யூனிட்கள் குறைந்தன!

2020 அக்.இல் 60,967 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்த பிளாட்டினா பைக்குகள், கடந்த மாதத்தில் சுமார் 37.96% அதிகமாக 84,109 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. பல்சர் பைக்குகளுடன் ஒப்பிடுகையில் பிளாட்டினா பைக்குகள் சில ஆயிர யூனிட்கள் மட்டுமே குறைவாக விற்கப்பட்டுள்ளன, இல்லையென்றால் பிளாட்டினா 5வது இடத்தை பிடித்திருக்கும். 7வது மற்றும் 8வது இடங்களில் முறையே டிவிஎஸ் மோட்டாரின் ஜூபிட்டர் ஸ்கூட்டர் மற்றும் எக்ஸ்.எல்100 மாடல்கள் உள்ளன.

பண்டிகை மாதத்திலும் சரிந்துள்ள 2-வீலர்ஸ் விற்பனை!! டாப்-10 வாகனங்களின் விற்பனை 2.30 லட்ச யூனிட்கள் குறைந்தன!

இதில் ஹோண்டா ஆக்டிவாவிற்கு அடுத்து அதிக பேரால் வாங்கப்படும் ஸ்கூட்டராக விளங்கும் டிவிஎஸ் ஜூபிட்டரின் விற்பனை வெறும் 2 ஆயிரம் யூனிட்கள் மட்டுமே கடந்த மாதத்தில் குறைந்திருந்தாலும், ஏழை மக்களின் நம்பிக்கைக்குரிய மினி-பைக்காக விளங்கும் எக்ஸ்.எல்100-இன் விற்பனை எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 ஆயிரம் யூனிட்கள் குறைந்துள்ளன.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 Two Wheelers Last Month Fell By 16.78%.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X