350 சிசி பைக் வாங்க போறீங்களா? அப்போ இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்கள் எதுன்னு தெரிஞ்சுகோங்க!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 350 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையான டாப்-5 பைக்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

350 சிசி பைக் வாங்க போறீங்களா? அப்போ இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்கள் எதுன்னு தெரிஞ்சுகோங்க!

1. ராயல் என்பீல்டு கிளாசிக் 350: 350 சிசி செக்மெண்ட்டில், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மிக நீண்ட காலமாகவே தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு போட்டி நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் தற்போது வரை பலன் அளிக்கவில்லை.

350 சிசி பைக் வாங்க போறீங்களா? அப்போ இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்கள் எதுன்னு தெரிஞ்சுகோங்க!

போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது மாதாந்திர விற்பனை எண்ணிக்கையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மிகப்பெரிய முன்னிலையை கைவசம் வைத்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில், 36,025 கிளாசிக் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப்-10 பைக்குகளின் பட்டியலிலும் 6வது இடத்தை கிளாசிக் 350 பிடித்துள்ளது.

350 சிசி பைக் வாங்க போறீங்களா? அப்போ இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்கள் எதுன்னு தெரிஞ்சுகோங்க!

ஆனால் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனை நடப்பாண்டு பிப்ரவரியில் குறைந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில் ராயல் என்பீல்டு நிறுவனம் 41,766 கிளாசிக் 350 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இது 13.75 சதவீத வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

350 சிசி பைக் வாங்க போறீங்களா? அப்போ இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்கள் எதுன்னு தெரிஞ்சுகோங்க!

2. ராயல் என்பீல்டு புல்லட்: கடந்த பிப்ரவரி மாதம் 350 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையான பைக்குகளின் பட்டியலில் ராயல் என்பீல்டு புல்லட் 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த பிப்ரவரியில் 11,044 புல்லட் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது விற்பனையில் 4.30 சதவீத வளர்ச்சியை ராயல் என்பீல்டு புல்லட் பதிவு செய்துள்ளது.

350 சிசி பைக் வாங்க போறீங்களா? அப்போ இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்கள் எதுன்னு தெரிஞ்சுகோங்க!

3. ராயல் என்பீல்டு மீட்டியோர் 350: ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 350 சிசி செக்மெண்ட்டில் முக்கியமான மாடலாக மீட்டியோர் 350 உருவெடுத்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 8,624 மீட்டியோர் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

350 சிசி பைக் வாங்க போறீங்களா? அப்போ இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்கள் எதுன்னு தெரிஞ்சுகோங்க!

4. ராயல் என்பீல்டு எலெக்ட்ரா: ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 6,477 எலெக்ட்ரா பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள மிகவும் பழைய பைக்குகளில் எலெக்ட்ரா ஒன்றாகும். ஆனால் செமி-அர்பன் மற்றும் கிராமப்புற பகுதிகளில் கிடைத்து வரும் நல்ல வரவேற்பு காரணமாக எலெக்ட்ரா பைக்கின் விற்பனை இன்னும் சிறப்பாக உள்ளது.

350 சிசி பைக் வாங்க போறீங்களா? அப்போ இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்கள் எதுன்னு தெரிஞ்சுகோங்க!

5. ஹோண்டா ஹைனெஸ் சிபி350: 2020ம் ஆண்டின் கடைசி காலாண்டில்தான் ஹைனெஸ் சிபி350 பைக்கை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் ஹோண்டா நிறுவனம் 3,268 ஹைனெஸ் சிபி350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் டாப்-5 பட்டியலில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 இடம்பெற்றுள்ளது.

350 சிசி பைக் வாங்க போறீங்களா? அப்போ இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்கள் எதுன்னு தெரிஞ்சுகோங்க!

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 உள்ளிட்ட பைக்குகள் உடன் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 போட்டியிட்டு வருகிறது. தற்போதைய நிலையில் ஹோண்டாவின் பிக்விங் பிரீமியம் டீலர்ஷிப்கள் வாயிலாக மட்டுமே ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Top-5 Best-selling 350 CC Motorcycles In February 2021 - Royal Enfield Classic 350 Leads Chart. Read in Tamil
Story first published: Tuesday, March 23, 2021, 18:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X