குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கு... Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர் பற்றிய அறிய வேண்டிய 5 முக்கிய தகவல்

பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 (Bounce Infinity E1) மின்சார ஸ்கூட்டர் பற்றிய அறிய வேண்டிய ஐந்து முக்கிய தகவல்களை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த முக்கிய விபரங்களைக் காணலாம்.

குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கு... Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர் பற்றிய அறிய வேண்டிய 5 முக்கிய தகவல்கள்!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம், பவுன்ஸ் (Bounce). நேற்றைய தினம் இந்நிறுவனம் அதன் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இன்ஃபினிட்டி இ1 (Infinity E1) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கு... Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர் பற்றிய அறிய வேண்டிய 5 முக்கிய தகவல்கள்!

வாகனங்களை வாடகைக்கு விடும் பணியில் ஈடுபட்டு வந்த இந்நிறுவனம், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் களமிறங்கி விற்பனைக்குக் கொண்டு வரும் முதல் இ-ஸ்கூட்டர் இதுவாகும். இந்த ஸ்கூட்டரின் பக்கம் மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு தனித்துவமான திட்டங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகின்றது. குறிப்பாக, 'பேட்டரி ஓர் சேவை' (battery as a service) திட்டத்தை நிறுவனம் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.

குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கு... Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர் பற்றிய அறிய வேண்டிய 5 முக்கிய தகவல்கள்!

இதன் வாயிலாக வாடிக்கையாளர்கள் பேட்டரி இல்லாமல் இன்ஃபினிட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைந்த விலையில் வாங்கிக் கொண்டு, பின்னர், ஸ்கூட்டருக்கு தேவையான பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடியும். இதற்காக நிறுவனம் பிரத்யேகமாக ஸ்வாப்பபிள் பேட்டரி மையங்களை நாடு முழுவதும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.

குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கு... Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர் பற்றிய அறிய வேண்டிய 5 முக்கிய தகவல்கள்!

பேட்டரியில்லாமல் ஸ்கூட்டரை பெறுவதன் வாயிலாக பல மடங்கு இதன் விலை குறையும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகளை இ-ஸ்கூட்டரில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில் நாம் கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் தற்போது பார்க்க இருக்கின்றோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கு... Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர் பற்றிய அறிய வேண்டிய 5 முக்கிய தகவல்கள்!

வெளிப்புற தோற்றம் (Exterior)

பார்ப்பதற்கு வழக்கமான ஸ்கூட்டர்களைப் போன்ற தோற்றத்தை இன்ஃபினிட்டி இ1 கொண்டிருக்கின்றது. ஆனால், இதனை உற்று பார்த்தால் ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கும் தனித்துவமான அம்சங்கள் பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரிய வரும். ஹேண்டில்பார், நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்ட முக்கோண தோற்றத்திலான பின்புற ஃபுட் பெக்குகள், டிஸ்க் பிரேக், சக்கரம் பொருத்தப்பட்டிருக்கும் ஹப் உள்ளிட்டவை மிகவும் தனித்துவமானதாக ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கு... Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர் பற்றிய அறிய வேண்டிய 5 முக்கிய தகவல்கள்!

இடவசதி (Space)

நகர்ப்புற பயன்பாட்டைக் கருத்தில் இவ்வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இந்த இருசக்கர வாகனத்திற்கு காம்பேக்ட் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தேவைக்கேற்ப இட வசதிகளை இது வழங்குகின்றது. கால்களுக்கான இடைவெளி, முழங்கால்களுக்கான இடைவெளி மற்றும் பின்பக்க பயணிகளுக்கான கூடுதல் இட வசதி ஆகியவை இதில் உள்ளன.

குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கு... Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர் பற்றிய அறிய வேண்டிய 5 முக்கிய தகவல்கள்!

இருக்கைக்கு கீழே வழங்கப்படும் ஸ்டோரேஜ் இடத்திலேயே ஸ்கூட்டருக்கான பேட்டரியை பொருத்தும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக இப்பகுதியில் உள்ள ஸ்டோரேஜின் அளவு 12 லிட்டராக மட்டுமே இருக்கின்றது. இது போதுமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கு... Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர் பற்றிய அறிய வேண்டிய 5 முக்கிய தகவல்கள்!

சிறப்பம்சங்கள் (Features)

தற்போது சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் பிற மின்சார ஸ்கூட்டர்கள் போலவே இன்பினிட்டி இ1 இ-ஸ்கூட்டரிலும் பன்முக சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அனைத்து மின் விளக்குகளும் எல்இடி ரகமாகும்.

குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கு... Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர் பற்றிய அறிய வேண்டிய 5 முக்கிய தகவல்கள்!

தொடர்ந்து, முன் மற்றும் பின் பக்கத்தில் டிஸ்க் பிரேக்குகள், எல்இடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ப்ளூடூத் இணைப்பு வசதி, டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் முன் பக்கத்திலும், ஷாக் அப்சார்பர் பின்பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுடன், ரிமோட் லாக்கிங், ஜியோ ஃபென்சிங், ரிவர்ஸிங் மோட், க்ரூஸ் கன்ட்ரோல், டோவ் அலர்ட் மற்றும் ஆன்டி தெஃப்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களும் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கு... Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர் பற்றிய அறிய வேண்டிய 5 முக்கிய தகவல்கள்!

மின் மோட்டார் (Powertrain)

பிரீமியம் தர மின்சார ஸ்கூட்டரான டிவிஎஸ் ஐ-க்யூபை போல பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 மாடலிலும் மின் மோட்டார் பின் பக்க வீலில் பொருத்தப்பட்டிருக்கின்றது. பிஎல்டிசி தர ஹப் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது மிக சிறந்த டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 83 என்எம் டார்க்கை இது வெளிப்படுத்தும்.

குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கு... Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர் பற்றிய அறிய வேண்டிய 5 முக்கிய தகவல்கள்!

இது பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிமீ எனும் வேகத்தை வெறும் 8 செகண்டுகளிலேயே எட்ட உதவும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிமீ வேகம் ஆகும். அதிகபட்ச ரேஞ்ஜ் திறன் 85 கிமீ. ஈகோ மோடிலேயே இந்த அதிகபட்ச ரேஞ்ஜை அது வழங்கும். பேட்டரியை பொருத்த வரை 2 kWh திறன் கொண்ட ஸ்வாப்பபிள் பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை கழட்டிச் சென்று எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கு... Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர் பற்றிய அறிய வேண்டிய 5 முக்கிய தகவல்கள்!

விலை (Price)

பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 79,999 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் ஃபேம்2 திட்டத்தின் கீழ் கிடைக்கும் விலை இதுவாகும். இதை விட பலமடங்கு விலை குறைவாகவும் இந்த ஸ்கூட்டரை பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பேட்டரி மற்றும் வீட்டிற்கான சார்ஜர் இல்லாமல் விற்பனைக்குப் பெறும்போதே மிகவும் குறைந்த விலையில் இதனைப் பெற முடியும். இந்த நிலையில் விற்பனைக்குக் கிடைக்கும் இன்ஃபினிட்டி இ1-இன் சென்னை விலை எவ்வளவு என்பது பற்றிய தகவல் துள்ளியமாக தெரியவில்லை.

Most Read Articles
English summary
Top 5 things to know about bounce infinity e1 e scooter
Story first published: Saturday, December 4, 2021, 13:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X