Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டரை வாங்க பிளான் போட்டிருக்கீங்களோ அப்போ இந்த குறைந்த விலை ஸ்கூட்டர்களின் பட்டியல் நிச்சயம் உதவியாக இருக்கும். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

2021ம் ஆண்டு தொடங்குவதற்கு முன்னரே வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் வாகனங்களின் விலையுயர்வைப் பற்றி அறிவிக்க ஆரம்பித்தன. ஆகையால், ஜனவரி 1ம் தேதி தொடங்கியது முதல் புதிய வாகனங்கள் பல புதிய விலையுயர்வுடன் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன.

அந்தவகையில், விலையுயர்வைப் பெற்றும் குறைந்த விலை ஸ்கூட்டராக தற்போது சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்கூட்டர்கள் எது என்பதைப் பற்றியே இப்பதிவில் நாம் காணவிருக்கின்றோம். இந்த பட்டியல் வருகின்ற குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டரை வாங்க நீங்கள் திட்டமிருந்தால் இது உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

5. ஹோண்டா டியோ:
விலை: ரூ. 62,229 - ரூ. 65,627
நாட்டில் சிறப்பான விற்பனையைப் பெறும் ஸ்கூட்டர்களில் ஹோண்டா டியோவும் ஒன்று. இந்தியாவின் குறைந்த விலை ஸ்கூட்டர்களின் பட்டியலில் இதையே நாம் முதலில் பார்க்கவிருக்கின்றோம். ஆனால், இது நம் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் குறைந்த விலை ஸ்கூட்டர்களின் வரிசையில் அதிக விலையைக் கொண்ட ஸ்கூட்டராகும். இந்த ஸ்கூட்டரின் ஆரம்பநிலை வேரியண்டின் விலை ரூ. 62,229 ஆகும்.

அதேசமயம், உயர்நிலை மாடலின் விலை ரூ. 65,627 ஆக இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரில் 109.51 சிசி திறன் கொண்ட எஞ்ஜினையே ஹோண்டா பயன்படுத்தியிருக்கின்றது. இது அதிகபட்சமாக 7.76 பிஎஸ் மற்றும் 9 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக்கூடியது. இந்த ஸ்கூட்டரில் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச், சைடு ஸ்டாண்ட் போட்டிருந்தால் எஞ்ஜினை தானாகவே ஆஃப் செய்யும் வசதி என பல்வேறு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

4. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110:
விலை: ரூ. 61,950 - ரூ. 63,450
ஹீரோ நிறுவனம் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரை 110 சிசி மற்றும் 125 சிசி ஆகிய இரு விதமான எஞ்ஜின் திறன்களில் விற்பனைச் செய்து வருகின்றது. இதில், விலைக் குறைந்த மாடலாக 110சிசி திறனில் விற்பனைக்குக் கிடைக்கும் மேஸ்ட்ரோ ஸ்கூட்டரே இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரின் ஆரம்பநிலை வேரியண்டின் விலை ரூ. 61,950 ஆகும். உயர்நிலை வேரியண்டின் ரூ. 63,450 ஆகும்.

இந்த ஸ்கூட்டரில் 110.9 சிசி திறனை வெளிப்படுத்தக்கூடிய சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினைய ஹீரோ பயன்படுத்தியுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8.15 பிஎஸ் பவரையும், 8.7 என்என் டார்க்கையும் வெளிப்படுத்தக் கூடியது. பன்முக நிற தேர்வில் இந்த ஸ்கூட்டரை ஹீரோ விற்பனைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

3. டிவிஎஸ் ஜெஸ்ட் 110:
விலை: ரூ. 61,345 - ரூ. 63,345
டிவிஎஸ் நிறுவனம் விற்பனைச் செய்யும் குறைந்த விலை ஸ்கூட்டர்களில் ஒன்றே இந்த ஜெஸ்ட் 110 மாடல் ஸ்கூட்டர். இதனை ரூ. 61,345 என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைச் செய்து வருகின்றது. இந்த மாடலின் அதிகபட்ச விலை ரூ. 63,345 ஆகும். நிறம் மற்றும் சில சிறப்பு வசதி வேறுபாட்டின் அடிப்படையில் இதன் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த ஸ்கூட்டரில் 109.7 சிசி திறன் கொண்ட எஞ்ஜினையே டிவிஎஸ் பயன்படுத்தியிருக்கின்றது. இது அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 7.8 பிஎஸ் பவரையும், 5500 ஆர்பிஎம்-இல் 8.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

2. ஹீரோ பிளஷ்ஷர் ப்ளஸ்:
விலை: ரூ. 57,300 - ரூ. 61,950
ஹீரோ நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக பிளஷ்ஷர் ப்ளஸ் ஸ்கூட்டர் இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரை சில குறிப்பிட்ட அப்டேட்டுகளுடன் 2019ம் ஆண்டில் ஹீரோ அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த ஸ்கூட்டரை மூன்று விதமான தேர்வுகளில் ஹீரோ விற்பனைச் செய்து வருகின்றது.

அவை எல்எக்ஸ், விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகியவை ஆகும். இதில், எல்எக்ஸ் வேரியண்டிற்கு ரூ. 57,300 என்ற விலையையும், விஎக்ஸ் வேரியண்டிற்கு ரூ. 59,950 என்ற விலையுயும், இசட்எக்ஸ் வேரியண்டிற்கு ரூ. 61,950 என்ற விலையையும் ஹீரோ நிர்ணயித்துள்ளது.

1. டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்:
விலை: ரூ. 54,374 - ரூ. 56,224
டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் இந்தியாவிலேயே மிக குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர் இதுவே ஆகும். இந்த ஸ்கூட்டருக்கு ரூ. 54,374 என்ற விலையை டிவிஎஸ் நிர்ணயித்துள்ளது. இது ஆரம்பநிலை வேரியண்டின் விலை மட்டுமே ஆகும். இந்த ஸ்கூட்டரின் உயர்நிலை வேரியண்டின் விலை ரூ. 56,224 ஆகும்.

இந்த ஸ்கூட்டரில் 87.8 சிசி திறன் கொண்ட ப்யூவல் இன்ஜெக்டட் சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினை டிவிஎஸ் ப யன்படுத்தியிருக்கின்றது. இது அதிகபட்சமாக 5.43 பிஎஸ் பவரையும், 6.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றக் கூடியது.
குறிப்பு: மேலே பார்த்த அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பாகும்.