Toyota-வின் 3 சக்கர பேட்டரி வாகனம் அறிமுகம்... ரொம்ப முடியாதவங்களுக்கு வேற லெவல்ல உதவியா இருக்கும்!

Toyota நிறுவனம் C+walk T எனும் புதுமுக 3 சக்கர பேட்டரியால் ஓடும் வாகனத்தை உருவாக்கியிருக்கின்றது. மாற்றுத் திறனாளிகள், முடியாதவர்கள் என பலருக்கு உதவும் வகையில் இந்த முன்று சக்கர வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் விலை மற்றும் சிறப்பு வசதிகள் என்ன என்பது பற்றிய முக்கிய விபரங்களை இப்பதிவில் தொகுத்து வழங்கி உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Toyota-வின் 3 சக்கர பேட்டரி வாகனம் அறிமுகம்... ரொம்ப முடியாதவங்களுக்கு வேற லெவல்ல உதவியா இருக்கும்!

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான டொயோட்டா (Toyota), பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனத்தை உருவாக்கி இருக்கின்றது. நகரவாசிகளைக் கருத்தில் இவ்வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. சி-ப்ளஸ் வால்க் டி (C+walk T) எனும் பெயரில் இவ்வாகனம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

Toyota-வின் 3 சக்கர பேட்டரி வாகனம் அறிமுகம்... ரொம்ப முடியாதவங்களுக்கு வேற லெவல்ல உதவியா இருக்கும்!

இது ஓர் ஸ்கேட்டிங் ரக வாகனம் ஆகும். அடித்தளம் தட்டையாக ஓர் நபர் நின்று செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த அடித் தளத்திலேயே வாகனத்திற்கான பேட்டரி மற்றும் மின் மோட்டார் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

Toyota-வின் 3 சக்கர பேட்டரி வாகனம் அறிமுகம்... ரொம்ப முடியாதவங்களுக்கு வேற லெவல்ல உதவியா இருக்கும்!

சி-ப்ளஸ் வால்க் டி பேட்டரி வாகனத்தைக் கொண்டு மிக அதிக வேகத்தில் பயணிக்க முடியாது. ஓர் நபர் நடக்கும் வேகத்திலேயே இது இயங்கும். ஆகையால், வழக்கமான நடைமேடைகளில் கூட வைத்து இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆகையால், வழி தடை இருக்குமானால் அதைக் கண்டறிந்து தானாக வேகத்தைக் குறைத்து, நிற்கும் வசதி இதில் வழங்கப்படுகின்றது.

Toyota-வின் 3 சக்கர பேட்டரி வாகனம் அறிமுகம்... ரொம்ப முடியாதவங்களுக்கு வேற லெவல்ல உதவியா இருக்கும்!

இதேபோல் சக பயணிகளைக் கண்டறியும் தொழில்நுட்பமும் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. சி-ப்ளஸ் வால்க் டி பேட்டரி வாகனத்தில் பிரஷ் இல்லா டிசி மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதற்கு தேவையான மின்சாரத்தை லித்தியம் அயன் பேட்டரி வழங்கு வழங்குகின்றது. இது ஓர் கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி ஆகும்.

Toyota-வின் 3 சக்கர பேட்டரி வாகனம் அறிமுகம்... ரொம்ப முடியாதவங்களுக்கு வேற லெவல்ல உதவியா இருக்கும்!

இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 2.5 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும். ஏசி100 வோல்ட் சார்ஜிங் சிஸ்டத்தில் வைத்துகூட இதனை சார்ஜ் செய்து கொள்ள முடியும். தொடர்ந்து, ஆக்செலரேட்டர் லிவர், ஸ்டியரிங் சிஸ்டம் பிரேக் லிவர்கள் உள்ளிட்டவை இவ்வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளன.

Toyota-வின் 3 சக்கர பேட்டரி வாகனம் அறிமுகம்... ரொம்ப முடியாதவங்களுக்கு வேற லெவல்ல உதவியா இருக்கும்!

இத்துடன், ஓர் திரை ஒன்று இதில் வழங்கப்பட்டிருக்கின்றது. இது வாகனத்தின் வேகம் மற்றும் பேட்டரியின் சார்ஜ் அளவு உள்ளிட்ட முக்கிய தகவல்களை வழங்க உதவும். டொயோட்டா நிறுவனம் சி-ப்ளஸ் வால்க் டி வாகனத்திற்கு 3,41,000 யென்கள் என விலை நிர்ணயித்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 2.27 லட்சம் ஆகும்.

Toyota-வின் 3 சக்கர பேட்டரி வாகனம் அறிமுகம்... ரொம்ப முடியாதவங்களுக்கு வேற லெவல்ல உதவியா இருக்கும்!

இத்தகைய உச்சபட்ச விலையிலேயே சி-ப்ளஸ் வால்க் டி விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. வயதான மற்றும் மாற்று திறனாளிகளுக்கு உதவும் வகையில் இதனை உருவாகியிருப்பதாக டொயோட்டா தெரிவித்திருக்கின்றது. குறிப்பாக நீண்ட தூரம் நடக்க சிரமம்படுபவர்களுக்கு மிகுந்த உதவியை இது வழங்கும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Toyota-வின் 3 சக்கர பேட்டரி வாகனம் அறிமுகம்... ரொம்ப முடியாதவங்களுக்கு வேற லெவல்ல உதவியா இருக்கும்!

மேலும், சுற்றுலா பயணிகளுக்கும் இந்த வாகனம் மிகுந்த உதவியாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதேபோல், தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி ஆலைகளை பார்வையிடும் அதிகாரிகளுக்கு இந்த வாகனம் அதிகளவில் உதவும் என தெரிவித்திருக்கின்றது.

Toyota-வின் 3 சக்கர பேட்டரி வாகனம் அறிமுகம்... ரொம்ப முடியாதவங்களுக்கு வேற லெவல்ல உதவியா இருக்கும்!

நடமாடுவதைக் குறைத்து நின்றவாறு சென்றே அனைத்து பகுதிகளையும் பார்வையிடும் வசதியை இவ்வாகனத்தின் மூலம் பெற முடியும். இதனடிப்படையிலே இந்த பிரத்யேக வாகனத்தை ஜப்பானிய வாகன உலகின் ஜாம்பவானான டொயோட்டா உருவாக்கியிருக்கின்றது.

Toyota-வின் 3 சக்கர பேட்டரி வாகனம் அறிமுகம்... ரொம்ப முடியாதவங்களுக்கு வேற லெவல்ல உதவியா இருக்கும்!

உலகளவில் மின் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையில், விநோத பயன்பாட்டை வழங்கக் கூடிய இதுமாதிரியான வாகனங்களின் வருகை மின் வாகன ஆர்வலர்களையும், விரும்பிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

Toyota-வின் 3 சக்கர பேட்டரி வாகனம் அறிமுகம்... ரொம்ப முடியாதவங்களுக்கு வேற லெவல்ல உதவியா இருக்கும்!

மின் வாகனங்களின் விற்பனைக்கு தடைக் கல்லாக போதிய அடிப்படைக் கட்டமைப்பு வசதி இல்லாதது மட்டுமே இருக்கின்றது. இதனைக் களையெடுக்கும் நடவடிக்கைகள் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இத்துடன், அதி வேகத்தில் சார்ஜிங் செய்யும் கருவிகளும் பயன்பாட்டிற்கு வர தொடங்கியிருக்கின்றன. மின் வாகனங்களின் பக்கம் மக்களை ஈர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota launched c plus walk t three wheeled ev
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X