பஜாஜ் பல்சர் 250 பைக்கின் அதே எஞ்சினுடன் வருகிறது விலை குறைவான புதிய ட்ரையம்ஃப் பைக்?

பஜாஜ் பல்சர் 250 பைக்கில் இடம்பெற இருக்கும் புதிய எஞ்சினுடன் ட்ரையம்ஃப் நிறுவனத்தின் விலை குறைவான பைக் மாடல் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பஜாஜ் பல்சர் 250 எஞ்சினுடன் வருகிறது புதிய ட்ரையம்ஃப் பைக்?

இந்தியாவின் மிகப்பெரிய பைக் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ஃப் பிரிமீயம் பைக் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து நடுத்தர வகை பிரிமீயம் பைக்குகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

பஜாஜ் பல்சர் 250 எஞ்சினுடன் வருகிறது புதிய ட்ரையம்ஃப் பைக்?

இந்த நிலையில், அண்மையில் பஜாஜ் நிறுவனத்தின் புதிய பல்சர் பைக் மாடல் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பது குறித்த ஸ்பை படங்கள் வெளியாகின. இந்த பைக்கில் 250சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது.

பஜாஜ் பல்சர் 250 எஞ்சினுடன் வருகிறது புதிய ட்ரையம்ஃப் பைக்?

இந்த புதிய மாடல் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில், இந்த புதிய 250சிசி பல்சர் பைக்கில் இடம்பெற்றிருக்கும் அதே எஞ்சின்தான் ட்ரையம்ஃப் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் குறைவான விலை க்ரூஸர் பைக் மாடலிலும் இடம்பெற உள்ளதாக பைக்வாலே தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

பஜாஜ் பல்சர் 250 எஞ்சினுடன் வருகிறது புதிய ட்ரையம்ஃப் பைக்?

மேலும், புதிய பல்சர் 250 மாடலில் இடம்பெற இருக்கும் எஞ்சின் ஏர்கூல்டு சிஸ்டம் கொண்ட எஞ்சினாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதாவது, ஆயில்கூல்டு எஞ்சின் கொடுப்பதை பஜாஜ் ஆட்டோ தவிர்க்க உள்ளதாக தெரிகிறது.

பஜாஜ் பல்சர் 250 எஞ்சினுடன் வருகிறது புதிய ட்ரையம்ஃப் பைக்?

ஏனெனில், சுஸுகி ஜிக்ஸெர் 250 மற்றும் யமஹா எஃப்இசட்25 ஆகிய மாடல்களில் ஏர்கூல்டு எஞ்சின்தான் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, தனது புதிய 250சிசி பல்சர் பைக்கில் ஏர்கூல்டு எஞ்சினை பொருத்த பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளதாக கருதப்படுகிறது.

பஜாஜ் பல்சர் 250 எஞ்சினுடன் வருகிறது புதிய ட்ரையம்ஃப் பைக்?

சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பல்சர் 250 மாடலில் ஏர்கூல்டு எஞ்சின் இருப்பதும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், பைக்கின் விலையை குறைத்து நிர்ணயிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

பஜாஜ் பல்சர் 250 எஞ்சினுடன் வருகிறது புதிய ட்ரையம்ஃப் பைக்?

மேலும், பஜாஜ் நிறுவனத்தின் 200சிசி எஞ்சினில் குறிப்பிட்ட மாறுதல்களை மட்டுமே செய்து பயன்படுத்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதற்காக முற்றிலும் புதிய எஞ்சினை உருவாக்கும் அவசியமும், முதலீடும் தவிர்க்கப்படும். அதேநேரத்தில், ட்ரையம்ஃப் நிறுவனத்தின் எஞ்சின் கேஸிங் சற்றே வேறுபட்ட தோற்றத்தில் வழங்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles
--
English summary
According to report, Triumph likely to use air-cooled engine from upcoming new Bajaj Pulsar 250 bike.
Story first published: Saturday, February 27, 2021, 14:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X