சில பொன்னேவில்லே பைக்குகளின் விற்பனையை நிறுத்தி கொண்டது ட்ரையம்ப்!! இந்தியாவில் இனி இவை கிடைக்காது

ட்ரையம்ப்பின் சில பொன்னேவில்லே பைக்குகளின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சில பொன்னேவில்லே பைக்குகளின் விற்பனையை நிறுத்தி கொண்டது ட்ரையம்ப்!! இந்தியாவில் இனி இவை கிடைக்காது

பொன்னேவில்லே பைக்குகளின் மூலமாக இந்திய சந்தையில் சில நேரங்களில் வெற்றியினை ட்ரையம்ப் நிறுவனம் ருசித்துள்ளது. இத்தகைய பொன்னேவில்லே பைக்குகளில் பொன்னேவில்லே டி100 மற்றும் டி120 பைக்குகளை உதாரணமாக சொல்லலாம்.

சில பொன்னேவில்லே பைக்குகளின் விற்பனையை நிறுத்தி கொண்டது ட்ரையம்ப்!! இந்தியாவில் இனி இவை கிடைக்காது

ஆனால் த்ரூக்ஸ்டன் ஆர் மற்றும் பொன்னேவில்லே பாப்பர் பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்ய ட்ரையம்ப் நிறுவனம் சிறிது சிரமப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் இந்திய பொன்னேவில்லே லைன்அப்-ஐ நெறிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு இந்த நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.

சில பொன்னேவில்லே பைக்குகளின் விற்பனையை நிறுத்தி கொண்டது ட்ரையம்ப்!! இந்தியாவில் இனி இவை கிடைக்காது

இதன்படி த்ரூக்ஸ்டன் ஆர் மற்றும் பொன்னேவில்லே பாப்பர் பைக்குகள் மட்டுமின்றி ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின், ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் மற்றும் ஸ்க்ரம்ப்ளர் 1200 எக்ஸ்சி பைக்குகளின் விற்பனையும் இந்தியாவில் நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளது.

சில பொன்னேவில்லே பைக்குகளின் விற்பனையை நிறுத்தி கொண்டது ட்ரையம்ப்!! இந்தியாவில் இனி இவை கிடைக்காது

இவற்றில் த்ரூக்ஸ்டன் ஆர் மற்றும் பொன்னேவில்லே பாப்பர் பைக்குகள் நம் நாட்டு சாலைகளுக்கு ஒத்துப்போகாத தோற்றத்தை கொண்டிருந்தன. இதுவே இவற்றின் விற்பனை முன்னேற்றம் அடையாமல் இருந்ததற்கு மிக முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

சில பொன்னேவில்லே பைக்குகளின் விற்பனையை நிறுத்தி கொண்டது ட்ரையம்ப்!! இந்தியாவில் இனி இவை கிடைக்காது

ஆனால் இவற்றுடன் 1200சிசி பைக் உள்பட சில ஸ்க்ரம்ப்ளர் பைக்குகளின் விற்பனை பெரிய அளவில் இல்லாதது ஏன் என்பது தெரியவில்லை. ஏனெனில் குறிப்பாக ஸ்க்ரம்ப்ளர் 1200எக்ஸ்சி பைக் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மிகவும் ஏற்ற வாகனமாக அதன் அறிமுகத்தின்போது புகழப்பட்டது.

சில பொன்னேவில்லே பைக்குகளின் விற்பனையை நிறுத்தி கொண்டது ட்ரையம்ப்!! இந்தியாவில் இனி இவை கிடைக்காது

அதிலும் ட்ரையம்ப்பின் மிடில்-வெய்ட் அட்வென்ச்சர் பைக் மாடலான டைகர் 800-ஐ காட்டிலும் இந்த 1200சிசி பைக் விலையை சில லட்சங்கள் குறைவாக கொண்டிருந்தது. இந்த விற்பனை நிறுத்தங்கள் சிறிது வருத்தத்தை ஏற்படுத்தினாலும், இவற்றிற்கு மாற்றாக ட்ரையம்ப் நிறுவனம் புதிய ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்எஸ் பைக்கை கொண்டுவர திட்டமிட்டிருப்பது சிறிது ஆறுதலை ஏற்படுத்துகிறது.

சில பொன்னேவில்லே பைக்குகளின் விற்பனையை நிறுத்தி கொண்டது ட்ரையம்ப்!! இந்தியாவில் இனி இவை கிடைக்காது

ரூ.17 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் இந்திய சந்தையில் களமிறங்கவுள்ள இந்த பைக்குடன் ட்ரையம்ப் ட்ரிடெண்ட் (திரிசூலம்) 660 பைக்கும் அடுத்ததாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அறிமுகத்திற்கு பிறகு ட்ரிடெண்ட் 660 பைக்தான் மலிவான ட்ரையம்ப் பைக்காக விற்பனை செய்யப்படவுள்ளது.

Most Read Articles
English summary
Triumph India Discontinued Bonneville Bobber Thruxton R Speed Twin Scrambler 1200 CX Street Scrambler
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X