புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு!! வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்!

புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் சர்வதேச சந்தைகளுக்காக வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய டிரையம்ப் டைகர் 900 ஸ்பெஷல் எடிசன் பைக்கை பற்றிய விரிவான தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு!! வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்!

பிரபல ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ள டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன், வழக்கமான டைகர் 900 ராலி ப்ரோ மோட்டார்சைக்கிளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு!! வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்!

விரைவில் திரைக்கு வரவுள்ள புதிய 25வது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான ‘நோ டைம் டூ டை' (No Time To Die)-இல் டைகர் 900 ராலி ப்ரோ மோட்டார்சைக்கிள் முக்கியமான ஸ்டண்ட் காட்சியில் இடம்பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் டைகர் 900 பாண்ட் எடிசன், ஓர் லிமிடெட் எடிசன் ஆகும்.

புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு!! வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்!

அதாவது வெறும் 250 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட உள்ளதாம். இந்த 250 மாதிரிகள் ஒவ்வொன்றும் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ் உடன் தனிப்பட்ட எண்ணை ஹேண்டில்பாரில் பெற்றுவரவுள்ளன. டைகர் 900 பாண்ட் எடிசன் நேர்த்தியான மேட் ஷேடில், நீலமாணிக்க கருப்பு நிற பெயிண்ட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு!! வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்!

மேலும் இந்த ஸ்பெஷல் எடிசனில் பெட்ரோல் டேங்க் பகுதியில் பிரத்யேகமான ‘007' கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் பெயரான ‘Tiger' கிராஃபிக்ஸும் பெட்ரோல் டேங்கின் கீழ்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் கருப்பு நிறத்திற்கு ஏற்ப இந்த கிராஃபிக்ஸ் ஆரஞ்ச் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு!! வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்!

உண்மையில் இந்த கிராஃபிக்ஸ் தான் இந்த ஸ்பெஷல் எடிசன் அட்வென்ச்சர் பைக்கிற்கு சிறப்பான தோற்றத்தை வழங்குகிறது. இவற்றுடன் ‘007' லோகோக்கள் பைக்கின் இருக்கையிலும் வழங்கப்பட்டுள்ளன. டைகர் 900 பாண்ட் எடிசனில் வழங்கப்பட்டுள்ள மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், டிஎஃப்டி ஸ்டார்ட்-அப் ஸ்க்ரீன் அனிமேஷன் மற்றும் ஹூட்டட் இருக்கைகளை சொல்லலாம்.

புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு!! வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்!

அட்வென்ச்சர் ரக பைக் என்பதால், ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற, அட்வான்ஸ்டு ஆஃப்-ரோடு திறன்களை பெற்ற டயர்கள் இந்த ஸ்பெஷல் எடிசனில் பொருத்தப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த பாண்ட் உடன் இணைந்து டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் உருவாக்கும் இரண்டாவது லிமிடெட் எடிசன், புதிய டைகர் 900 பாண்ட் எடிசன் ஆகும்.

புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு!! வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்!

இதற்கு முன்னர் கடந்த ஆண்டில், ஸ்க்ராம்ப்ளர் 1200 மோட்டார்சைக்கிளின் பாண்ட் எடிசன் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த பிரத்யேகமான தோற்றத்தை தவிர்த்து டைகர் 900 பாண்ட் எடிசனில் தொழிற்நுட்ப அம்சங்களில், டைகர் 900 ராலி ப்ரோ மாடலில் இருந்து எந்த வித்தியாசமும் இல்லை. இதனால் டைகர் 900 அட்வென்ச்சர் பைக்கின் வழக்கமான யூரோ-5க்கு இணக்கமான 888சிசி, லிக்யுடு-கூல்டு, இன்லைன் 3-சிலிண்டர் என்ஜின் தான் புதிய டைகர் 900 பாண்டு எடிசனிலும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு!! வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்!

அதிகப்பட்சமாக 8750 ஆர்பிஎம்-இல் 95 பிஎஸ் மற்றும் 7250 ஆர்பிஎம்-இல் 87 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்கில் மழை, சாலை, ஸ்போர்ட், ஆஃப்-ரோடு, ரைடர்-விருப்பம் மற்றும் ஆஃப்-ரோடு ப்ரோ என்கிற ஆறு விதமான ரைடிங் மோட்கள் இடம் பெற்றுள்ளன.

புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு!! வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்!

புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெறும் 250 யூனிட்கள் மட்டுமே உலகளவில் விற்பனை செய்யப்பட உள்ளதாக முன்னரே கூறியிருந்தோம். இதில் எத்தனை யூனிட்கள் இந்திய வாடிக்கையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன? இந்த லிமிடெட் எடிசன் டைகர் 900 மோட்டார்சைக்கிள் இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா? என்ற கேள்விகளுக்கு பதில் தற்போதைக்கு இல்லை.

புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு!! வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்!

டிரையம்ப் பிராண்டில் இருந்து கடைசியாக 2021 ஸ்பீடு ட்வின் பைக் இந்தியாவில் அறிமுகமானது. மாடர்ன் கிளாசிக் ரக மோட்டார்சைக்கிளாக கொண்டுவரப்பட்ட இதன் விலை ரூ.10.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2021 ஸ்பீடு ட்வின் பைக்கில் புதிய ப்ரேக், புதிய சஸ்பென்ஷன், புதிய டயர்கள் மற்றும் சக்கரங்கள் என பல அம்சங்கள் புதியதாக வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #டிரையம்ப் #triumph
English summary
New Triumph Tiger 900 Bond Edition Revealed; Limited to just 250 units globally.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X