டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக்கிற்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! ரூ.50,000-இல் புக் செய்யலாம்!

டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக்கிற்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்தும், இந்த புதிய டிரையம்ப் பைக்கை பற்றியும் கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக்கிற்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! ரூ.50,000-இல் புக் செய்யலாம்!

கடந்த அக்டோபர் மாதத்தில் புத்தம் புதிய டிரையம்ப் டைகர் 660 ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் ஐரோப்பாவில் வெளியீடு செய்யப்பட்டது. இதன் ஸ்ட்ரீட்ஃபைட்டர் மாடலான ட்ரைடெண்ட் 660-ஐ உருவாக்க பயன்படுத்தப்பட்ட அதே ஃப்ரேமின் அடிப்படையில், மலிவான டிரையம்ப் டைகர் பைக்காக டைகர் ஸ்போர்ட் 660 உருவாக்கப்பட்டுள்ளது.

டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக்கிற்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! ரூ.50,000-இல் புக் செய்யலாம்!

இத்தகைய மலிவான அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மற்ற நாடுகளை காட்டிலும் நம் இந்தியாவிற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். இதன் காரணமாகவே டைகர் ஸ்போர்ட் 660 பைக்கை இந்திய சந்தையில் களமிறக்க டிரையம்ப் நிறுவனம் தயாராகி வருகிறது. இதற்கிடையில் தான் தற்போது இந்த பைக்கிற்கான முன்பதிவுகள் ஏற்று கொள்ளப்பட துவங்கப்பட்டுள்ளன.

டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக்கிற்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! ரூ.50,000-இல் புக் செய்யலாம்!

டிரையம்ப் டைகர் 660 ஸ்போர்ட் பைக்கை முன்பதிவு செய்வதற்கான முன்தொகையாக ரூ.50,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிரையம்ப்பின் ஆரம்ப-நிலை நடுத்தர எடை கொண்ட நாக்டு மோட்டார்சைக்கிளான ட்ரைடெண்ட் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலைகள் ரூ.6.95 லட்சத்தில் இருந்து ரூ.7.08 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக்கிற்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! ரூ.50,000-இல் புக் செய்யலாம்!

அப்படியே டைகர் ஸ்போர்ட் 660 பைக்கிற்கு வந்தால், இது அனைத்து விதமான சாலைகளுக்கும் இணைக்கமான, குறிப்பாக தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்றதாக விளங்குகிறது. இதன் இந்திய அறிமுகம் ஏற்கனவே கூறியதுபோல், இந்த ஆண்டு முடிவதற்குள்ளாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இதன் முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளதை உறுதிப்ப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள படத்தில் டைகர் ஸ்போர்ட் 660 பைக் மிகவும் கூர்மையான முன்பக்கத்தை கொண்டுள்ளது.

டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக்கிற்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! ரூ.50,000-இல் புக் செய்யலாம்!

அளவில் பெரியதாக உள்ள இதன் முன்பக்கம் நமக்கு பல டைகர் அட்வென்ச்சர் பைக்குகளை ஞாபகப்படுத்துகிறது. குறிப்பாக, டைகர் ஸ்போர்ட் 850 நம் கண் முன் வந்து போகிறது. எல்இடி டிஆர்எல்கள் மற்றும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்களுடன் இந்த டைகர் ஸ்போட் பைக்கின் முன்பக்கத்தில் இரட்டை எல்இடி ஹெட்லேம்ப் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக்கிற்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! ரூ.50,000-இல் புக் செய்யலாம்!

மேலும், முன்பக்கத்தில் அளவில் பெரியதாக எதிர்காற்று தடுப்பு கண்ணாடி வழங்கப்பட்டிருக்க, முன்பக்கத்தை தாண்டி பின்பக்கத்தில் பேனல்கள் அவ்வளவாக இல்லை. ட்ரைடெண்ட் உடன் ஒப்பிடுகையில், டைகர் ஸ்போர்ட் 660 ஆனது கூடுதல் நிமிர்ந்த தோற்றம், உயரமான ஹேண்டில்பார்களுடன் சவுகரியமான ரைடிங் பொசிஷன், நீளமான இருக்கை அமைப்பு மற்றும் கச்சிதமான பொசிஷனில் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக்கிற்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! ரூ.50,000-இல் புக் செய்யலாம்!

இவை நிச்சயமாக தொலைத்தூர பயணங்களின் போது மிகவும் உதவிகரமானதாக விளங்கும். ட்ரைடெண்ட் 660 பைக்கில் இருந்துதான் பெரும்பான்மையான பாகங்களை இந்த பைக் கொண்டுள்ளதாக கூறியிருந்தோம். இருப்பினும் அட்வென்ச்சர் பைக் என்பதால் சஸ்பென்ஷன் அமைப்பு டைகர் ஸ்போர்ட் 660-இல் சற்று அதன் தோற்ற பண்பிற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக்கிற்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! ரூ.50,000-இல் புக் செய்யலாம்!

ஷோவாவின் சஸ்பென்ஷன் அமைப்புகளாக, பைக்கின் முன்பக்கத்தில் 41மிமீ-இல் தலைக்கீழான ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனை தவிர்த்து மற்ற இயந்திர பாகங்களான பிரேக் செட்அப், சக்கரங்கள் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய லிவர்கள் உள்ளிட்டவை அனைத்தும் அப்படியே தொடரப்பட்டுள்ளன.

டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக்கிற்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! ரூ.50,000-இல் புக் செய்யலாம்!

பிரேக்கிற்கு முன் சக்கரத்தில் டபுள் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க்கும் பொருத்தப்படுகிறது. புதிய டைகர் ஸ்போர்ட் பைக்கில் 660சிசி, லிக்யுடு-கூல்டு இன்லைன் 3-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. ட்ரைடெண்ட் 660 பைக்கிலும் பொருத்தப்படுகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10,250 ஆர்பிஎம்-இல் 80 பிஎச்பி மற்றும் 6,250 ஆர்பிஎம்-இல் 64 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக்கிற்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! ரூ.50,000-இல் புக் செய்யலாம்!

இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மினி-ஃபைரிங் மோட்டார்சைக்கிளாக வடிவமைக்கப்பட்டிருப்பினும் சில கூடுதல் பேனல்களினால் டைகர் ஸ்போர்ட் 660 அதன் நாக்டு வெர்சனான ட்ரைடெண்ட் 660-ஐ காட்டிலும் எடைமிக்கதாக விளங்குகிறது. இந்தியாவில் புதிய டைகர் ஸ்போர்ட் 660 பைக்கின் விலையினை ரூ.7.5 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம்.

டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக்கிற்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! ரூ.50,000-இல் புக் செய்யலாம்!

இந்த நிலையில் சமீபத்தில், பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ட்ரையம்ப் அதன் புதிய ஸ்பெஷல் எடிசன் மோட்டார்சைக்கிள்களை 221 ராக்கெட் 3 ஆர், 221 ராக்கெட் 3 ஜிடி, த்ரக்ஸ்டன் ஆர்எஸ் டன் அப் எடிசன் மற்றும் ஸ்ட்ரீட் ட்வின் இசி1 என்கிற பெயர்களில் வெளியீடு செய்தது. வழக்கமான ஸ்டார்ண்டர்ட் மாடல்களுடன் ஒப்பிடுகையில் இந்த 4 ஸ்பெஷல் எடிசன்களும் இயந்திர பாகங்களில் எந்த மாற்றத்தையும் பெற்றுவரவில்லை.

Most Read Articles
மேலும்... #டிரையம்ப் #triumph
English summary
Triumph Tiger Sport 660 Bookings Open At Rs 50k
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X