ட்ரைடெண்ட் 660 பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? சூசகமாக பதிலளித்த ட்ரையம்ப்!!

ட்ரையம்ப் ட்ரைடெண்ட் 660 பைக்கின் இந்திய அறிமுகம் தொடர்பான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதனை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ட்ரைடெண்ட் 660 பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? சூசகமாக பதிலளித்த ட்ரையம்ப்!!

ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அதன் விலை குறைவான மோட்டார்சைக்கிளாக ட்ரைடெண்ட் 660 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

ட்ரைடெண்ட் 660 பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? சூசகமாக பதிலளித்த ட்ரையம்ப்!!

இதற்கிடையில் தான் தற்போது இந்த ட்ரையம்ப் பைக்கின் புதிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் பைக்கின் இந்திய அறிமுக தேதி வெளிப்படையாக கூறப்படவில்லை.

ட்ரைடெண்ட் 660 பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? சூசகமாக பதிலளித்த ட்ரையம்ப்!!

மாறாக, "பொறுமையாக காத்திருக்கும் அனைவரும், புதிய ட்ரைடெண்ட் 660 பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள #தேதியையூகிக்கவும். குறிப்பு: இந்திய ஷோரூம்களை வந்தடையும் நேரம் வெகு தொலைவில் இல்லை என சிறிய பறவை ஒன்று கூறுகிறது" என்று மறைமுகமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரைடெண்ட் 660 பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? சூசகமாக பதிலளித்த ட்ரையம்ப்!!

ட்ரையம்பின் இந்த ஸ்ட்ரீட்-நாக்டு மோட்டார்ட்சைக்கிளுக்கான முன்பதிவுகள் ரூ.50,000 என்ற டோக்கன் தொகையுடன் ஏற்று கொள்ளப்பட்டு வருகின்றன. அதேநேரம் மாலிவான மோட்டார்சைக்கிளாக ட்ரையம்ப்பின் இந்திய வரிசையில் இடம் பெறவுள்ள இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.6.95 லட்சமாக நிர்ணயிக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

ட்ரைடெண்ட் 660 பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? சூசகமாக பதிலளித்த ட்ரையம்ப்!!

ட்ரையம்ப் 660 பைக்கில் லிக்யூடு-கூல்டு, இன்-லைன் 3-சிலிண்டர் 660சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 10,250 ஆர்பிஎம்-ல் 80 பிஎச்பி மற்றும் 6,250 ஆர்பிஎம்-ல் 64 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இது வடிவமைக்கப்படுகிறது.

ட்ரைடெண்ட் 660 பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? சூசகமாக பதிலளித்த ட்ரையம்ப்!!

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்/அசிஸ்ட் க்ளட்ச் உடன் இணைக்கப்படுகிறது. சுற்றளவு ஃப்ரேம் மற்றும் இரு-பக்க ஸ்விங்கார்மை உபயோகித்து இந்த 660சிசி மோட்டார்சைக்கிள் தயாரிக்கப்படுகிறது.

ட்ரைடெண்ட் 660 பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? சூசகமாக பதிலளித்த ட்ரையம்ப்!!

சஸ்பென்ஷனிற்கு முன் பக்கத்தில் 41மிமீ-இல் தலைக்கீழான ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ப்ரீலோடிற்கு அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய க்ஷோவா மோனோ-ஷாக் யூனிட்டையும் இந்த மோட்டார்சைக்கிள் பெறுகிறது.

ட்ரைடெண்ட் 660 பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? சூசகமாக பதிலளித்த ட்ரையம்ப்!!

ப்ரேக்கிங் பணியினை கவனிக்க இரு-பிஸ்டன் ஸ்லைடிங் காலிபர்களுடன் 310மிமீ-இல் டிஸ்க்குகள் முன் சக்கரத்திலும், சிங்கிள்-பிஸ்டன் ஸ்லைடிங் காலிபர் உடன் 255மிமீ டிஸ்க் பின் சக்கரத்திலும் வழங்கப்படுகின்றன.

ட்ரைடெண்ட் 660 பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? சூசகமாக பதிலளித்த ட்ரையம்ப்!!

எலக்ட்ரானிக் தொகுப்புகளாக ரைடி-பை-வயர் த்ரோட்டில், ஸ்விட்ச் செய்யக்கூடிய ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை பெறும் ட்ரைடெண்ட் 660 பைக்கில் மழை, சாலை என்ற இரு ரைடிங் மோட்கள் கொடுக்கப்படுகின்றன.

ட்ரைடெண்ட் 660 பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? சூசகமாக பதிலளித்த ட்ரையம்ப்!!

இவற்றுடன் ‘ட்ரையம்ப் ஷிஃப்ட் அசிஸ்ட்' விரைவு-ஷிஃப்டர் மற்றும் ‘மை ட்ரையம்ப் கனெக்ட்டிவிட்டி சிஸ்டம்' போன்ற இணைப்பு தொழிற்நுட்பங்களையும் ட்ரையம்ப் நிறுவனம் கூடுதல் தேர்வாக இந்த பைக்கில் வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Triumph Trident 660 India Launch Teaser Officially Released: Here Are All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X