பெட்டிக்குள் இருப்பது என்ன பைக்? கண்டுபிடிங்க பார்க்கலாம்! வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டிய டிரையம்ப்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டிரையம்ப் ட்ரைடெண்ட் 660 பைக் இந்திய மண்ணை வந்தடைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்டிக்குள் இருப்பது என்ன பைக்? கண்டுபிடிங்க பார்க்கலாம்! வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டிய டிரையம்ப்

டிரையம்ப் நிறுவனம் ட்ரைடெண்ட் 660 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தற்போது தயாராகி வருகிறது. இது மிடில்வெயிட் நேக்கட் பைக் ஆகும். டிரையம்ப் ட்ரைடெண்ட் 660 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் வரும் ஏப்ரல் 6ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பெட்டிக்குள் இருப்பது என்ன பைக்? கண்டுபிடிங்க பார்க்கலாம்! வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டிய டிரையம்ப்

இதற்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ளன. இந்த பிரீமியம் பைக் நிறுவனம் ட்ரைடெண்ட் 660 மோட்டார்சைக்கிள் இந்திய மண்ணை வந்தடைந்த புகைப்படங்களை தற்போது சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளது. டிரையம்ப் இந்தியா நிறுவனம் தனது சமூக வலை தள பக்கத்தில் தற்போது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது.

பெட்டிக்குள் இருப்பது என்ன பைக்? கண்டுபிடிங்க பார்க்கலாம்! வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டிய டிரையம்ப்

இந்த புகைப்படத்தில் ஒரு பெரிய பெட்டியை நம்மால் காண முடிகிறது. இந்த புகைப்படத்துடன், ''தற்போதுதான் வந்தது. என்னவென்று யூகியுங்கள்'' என டிரையம்ப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. டிரையம்ப் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் அடுத்ததாக விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள மாடல் ட்ரைடெண்ட் 660 மோட்டார்சைக்கிள்தான்.

பெட்டிக்குள் இருப்பது என்ன பைக்? கண்டுபிடிங்க பார்க்கலாம்! வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டிய டிரையம்ப்

எனவே இந்த பெட்டிக்குள் இருக்கும் மோட்டார்சைக்கிள்கள் நிச்சயமாக டிரையம்ப் ட்ரைடெண்ட் 660ஆகதான் இருக்கும். நெட்டிசன்களும் கூட இதனை சரியாக கணித்து விட்டனர். கமெண்ட் பாக்ஸில் இது டிரையம்ப் ட்ரைடெண்ட் 660 மோட்டார்சைக்கிள்கள்தான் என நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பெட்டிக்குள் இருப்பது என்ன பைக்? கண்டுபிடிங்க பார்க்கலாம்! வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டிய டிரையம்ப்

டிரையம்ப் ட்ரைடெண்ட் 660 மோட்டார்சைக்கிள்களுக்கான அதிகாரப்பூர்வ முன்பதிவுகள் கடந்த 2020ம் ஆண்டின் கடைசியில் இருந்தே ஏற்கப்பட்டு வருகின்றன. தற்போது முன்பதிவுகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்னும் ஒரு சில தினங்களில் இந்த பைக் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பெட்டிக்குள் இருப்பது என்ன பைக்? கண்டுபிடிங்க பார்க்கலாம்! வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டிய டிரையம்ப்

ஆனால் இந்த பைக்கின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் டிரையம்ப் நிறுவனத்தின் மிகவும் விலை குறைந்த மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக ட்ரைடெண்ட் 660 இருக்க போகிறது. டிரையம்ப் நிறுவனம் ட்ரைடெண்ட் 660 பைக்கின் விலையை 7 லட்ச ரூபாய் முதல் 7.5 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்டிக்குள் இருப்பது என்ன பைக்? கண்டுபிடிங்க பார்க்கலாம்! வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டிய டிரையம்ப்

இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் டிரையம்ப் நிறுவனம் ட்ரைடெண்ட் 660 பைக்கின் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். டிரையம்ப் ட்ரைடெண்ட் 660 மோட்டார்சைக்கிளானது, கவாஸாகி இஸட்650 மற்றும் ஹோண்டா சிபி650ஆர் உள்ளிட்ட பைக்குகளுடன் போட்டியிடும்.

பெட்டிக்குள் இருப்பது என்ன பைக்? கண்டுபிடிங்க பார்க்கலாம்! வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டிய டிரையம்ப்

டிரையம்ப் ட்ரைடெண்ட் 660 மோட்டார்சைக்கிளில், 660 சிசி, இன்லைன்-மூன்று சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 79.8 பிஎச்பி பவரையும், 64 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. விலை குறைவானது என்றாலும், பல்வேறு வசதிகளை இந்த பைக் பெற்றுள்ளது.

Most Read Articles

English summary
Triumph Trident 660 Arrives On Indian Shores Ahead Of Launch - Here Are All The Details. Read in Tamil
Story first published: Saturday, April 3, 2021, 19:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X