ஒரு நாளைக்கு ரூ. 49 மட்டுமே... எக்ஸ்எல் 100 விற்பனையை சூடிபிடிக்க டிவிஎஸ்-இன் புதிய திட்டம்...

எக்ஸ்எல் 100 மொபட்டின் விற்பனையை அதிகரிக்க செய்ய டிவிஎஸ் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஒரு நாளைக்கு ரூ. 49 மட்டுமே... எக்ஸ்எல் 100 விற்பனையை சூடிபிடிக்க டிவிஎஸ்-இன் புதிய திட்டம்...

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, தனது புதிய எக்ஸ்எல் 100 ஐ-டச் ஸ்டார்ட் (TVS XL100 i-TOUCHstart) வேரியண்ட் மொபட்டை மிக எளிமையான நபர்கள்கூட மிக சுலபமாக வாங்கும் விதமாக புதிய திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரு நாளைக்கு ரூ. 49 மட்டுமே... எக்ஸ்எல் 100 விற்பனையை சூடிபிடிக்க டிவிஎஸ்-இன் புதிய திட்டம்...

அதாவது நாள் ஒன்றிற்கு ரூ. 49 வீதம், மாதத்திற்கு ரூ. 1,470 செலுத்தும் புதிய மாதத் தவணை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சுலபமான மாதத் தவணை திட்டத்திற்காக டிவிஎஸ் கிரெடிட், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எல்அண்ட்டி, ஐடிஎஃப்சி மற்றும் ஃபர்ஸ்ட் பேங்க் ஆகிய நிதி நிறுவனங்களுடன் கூட்டணியைத் தொடங்கியுள்ளது.

ஒரு நாளைக்கு ரூ. 49 மட்டுமே... எக்ஸ்எல் 100 விற்பனையை சூடிபிடிக்க டிவிஎஸ்-இன் புதிய திட்டம்...

இதுமட்டுமின்றி, தொடர்ந்து டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டின் விற்பனையை அதிகரிக்கச் செய்வதற்காக வாகனத்தை இப்போ வாங்குங்க, பணத்தை அப்புறமா செலுத்துங்க (Buy Now Pay Later), குறைந்த முன் தொகை (Low Down Payment) மற்றும் குறைந்த வட்டி விகிதம் ஆகிய திட்டங்களையும் டிவிஎஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரு நாளைக்கு ரூ. 49 மட்டுமே... எக்ஸ்எல் 100 விற்பனையை சூடிபிடிக்க டிவிஎஸ்-இன் புதிய திட்டம்...

அதாவது, ரூ. 7,999 என்ற குறைந்த முன் தொகையில், 7.99 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் இருசக்கர வாகனத்தை விற்பனைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அனைத்து திட்டங்களும் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டிற்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒரு நாளைக்கு ரூ. 49 மட்டுமே... எக்ஸ்எல் 100 விற்பனையை சூடிபிடிக்க டிவிஎஸ்-இன் புதிய திட்டம்...

புதிய டிவிஎஸ் எக்ஸ்எல் 100 ஐ-டச் ஸ்மார்ட் மொபட்டில் யுஎஸ்பி சார்ஜர் (ஆப்ஷனல்), சுலபமாக ஆன்-ஆஃப் செய்யும் சுவிட்ச் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த வாகனத்தை ஆண்கள் மட்டுமின்றி பெண்களால் சுலபமாக ஓட்ட முடியும். குறிப்பாக, லக்கேஜ் மற்றும் சிறிய சரக்குகளை ஏற்றி செல்லும் வகையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு ரூ. 49 மட்டுமே... எக்ஸ்எல் 100 விற்பனையை சூடிபிடிக்க டிவிஎஸ்-இன் புதிய திட்டம்...

பெருமளவில் இந்த வாகனம் விவசாயிகள், விற்பனையாளர்கள் மற்றும் டெலிவரி துறையைச் சேர்ந்தவர்களுக்கு உதவி வருகின்றது. இவர்கள் மிக சுலபமாக வாங்கும் நோக்கிலேயே நாள் ஒன்றிற்கு ரூ. 49 என மாதத்திற்கு ரூ. 1,470 என்ற கட்டண திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரு நாளைக்கு ரூ. 49 மட்டுமே... எக்ஸ்எல் 100 விற்பனையை சூடிபிடிக்க டிவிஎஸ்-இன் புதிய திட்டம்...

இதில், வாகனத்தை இப்போ வாங்குங்க, பணத்தை அப்புறமா செலுத்துங்க திட்டத்தின்கீழ் இருசக்கர வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர்கள், மொபட்டை வாங்கிய பின் 6 மாதங்கள் கழித்து இஎம்ஐ சொலுத்தினால் போதும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரு நாளைக்கு ரூ. 49 மட்டுமே... எக்ஸ்எல் 100 விற்பனையை சூடிபிடிக்க டிவிஎஸ்-இன் புதிய திட்டம்...

டிவிஎஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டில் ஈகோ த்ரஸ்ட் ப்யூவல் இன்ஜெக்சன் திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த எஞ்ஜின் 99.7 சிசி திறனை வெளிப்படுத்தக்கூடியது. 6,000 ஆர்பிஎம்மில் 4.3 பிஎச்பி பவரையும், 3500 ஆர்பிஎம்மில் 6.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனை இந்த எஞ்ஜின் கொண்டிருக்கின்றது.

ஒரு நாளைக்கு ரூ. 49 மட்டுமே... எக்ஸ்எல் 100 விற்பனையை சூடிபிடிக்க டிவிஎஸ்-இன் புதிய திட்டம்...

டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டானது ஐந்து விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை, டிவிஎஸ் எக்ஸ்எல் 100 ஹெவி டியூட்டி கிக்ஸ்டார்ட், டிவிஎஸ் எக்ஸ்எல் 100 ஹெவி டியூட்டி ஐ-டச்ஸ்டார்ட், டிவிஎஸ் எக்ஸ்எல் 100 ஹெவி டியூட்டி ஐ-டச்ஸ்டார்ட் வின் பதிப்பு, டிவிஎஸ் எக்ஸ்எல் 100 கம்ஃபோர்ட் கிக்ஸ்டார்ட் மற்றும் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 கம்ஃபோர்ட் ஐ-டச்ஸ்டார்ட் ஆகியை ஆகும்.

ஒரு நாளைக்கு ரூ. 49 மட்டுமே... எக்ஸ்எல் 100 விற்பனையை சூடிபிடிக்க டிவிஎஸ்-இன் புதிய திட்டம்...

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் எக்ஸ்எல் 100 ஹெவி டியூட்டி ஐ-டச்ஸ்டார்ட் வின் பதிப்பானது, டிலைட் ப்ளூ மற்றும் பீவர் பிரவுன் ஆகிய இரு அட்டகாசமான வண்ணத் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 41,220 என்ற ஆரம்ப விலையில் இருந்து இவ்வாகனம் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Announced New Payment Plan XL 100. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X