அப்பாச்சி ஆர்டிஆர்200 பைக்கை இப்போது வாங்கினால் ரூ.10,000 சேமிக்கலாம்!! டிவிஎஸ் அறிவிப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கிற்கு சில கவர்ச்சிகரமான பணம் தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகை தொடர்பான கூடுதல் விபரங்களை இனி பார்ப்போம்.

அப்பாச்சி ஆர்டிஆர்200 பைக்கை இப்போது வாங்கினால் ரூ.10,000 சேமிக்கலாம்!! டிவிஎஸ் அறிவிப்பு

டிவிஎஸ்-இன் இந்த சலுகையினை ஆன்லைனில் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கை முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே பெற முடியும். இணையம் மூலமாக இந்த அப்பாச்சி பைக்கை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 பணம் தள்ளுபடியை டிவிஎஸ் வழங்கியுள்ளது.

அப்பாச்சி ஆர்டிஆர்200 பைக்கை இப்போது வாங்கினால் ரூ.10,000 சேமிக்கலாம்!! டிவிஎஸ் அறிவிப்பு

அதுமட்டுமின்றி ரூ.10,000 வரையில் சேமிக்கும் வகையிலான நிதி திட்டம் ஒன்றினையும் டிவிஎஸ் அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் நடப்பு ஜூன் மாதம் முடியும் வரையில் பயன்பாட்டில் இருக்கவுள்ளன.

அப்பாச்சி ஆர்டிஆர்200 பைக்கை இப்போது வாங்கினால் ரூ.10,000 சேமிக்கலாம்!! டிவிஎஸ் அறிவிப்பு

அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மோட்டார்சைக்கிள் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் மற்றும் ட்யுல்-சேனல் ஏபிஎஸ் என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.1.29 லட்சம் மற்றும் ரூ.1.34 லட்சம் என உள்ளன.

அப்பாச்சி ஆர்டிஆர்200 பைக்கை இப்போது வாங்கினால் ரூ.10,000 சேமிக்கலாம்!! டிவிஎஸ் அறிவிப்பு

இவை இரண்டிலும் 198சிசி சிங்கிள்-சிலிண்டர் 4-வால்வு , ஆயில்-கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 20.54 பிஎச்பி மற்றும் 7,000 ஆர்பிஎம்-இல் 18.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

அப்பாச்சி ஆர்டிஆர்200 பைக்கை இப்போது வாங்கினால் ரூ.10,000 சேமிக்கலாம்!! டிவிஎஸ் அறிவிப்பு

இந்த 200சிசி அப்பாச்சி பைக்கில் மிக முக்கிய அம்சமாக ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகள் ரைடிங் மோட்களுக்கு ஏற்ப வேறுபடுகின்றன. பைக்கின் டாப் ஸ்பீடு 105kmph ஆகும்.

அப்பாச்சி ஆர்டிஆர்200 பைக்கை இப்போது வாங்கினால் ரூ.10,000 சேமிக்கலாம்!! டிவிஎஸ் அறிவிப்பு

முன்னதாக 'விலை இல்லை' என்ற மாதத்தவணை திட்டத்தை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த மாதத்தவணை திட்டம் டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன.

அப்பாச்சி ஆர்டிஆர்200 பைக்கை இப்போது வாங்கினால் ரூ.10,000 சேமிக்கலாம்!! டிவிஎஸ் அறிவிப்பு

அதேநேரம் எண்டார்க் 125 ஸ்கூட்டரின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த இலவச மாதத்தவணை திட்டம் கிடைக்கவில்லை. கிரெடிட் கார்ட் மூலமாக பணம் பரிவர்த்தனையை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே கிடைத்தது.

அப்பாச்சி ஆர்டிஆர்200 பைக்கை இப்போது வாங்கினால் ரூ.10,000 சேமிக்கலாம்!! டிவிஎஸ் அறிவிப்பு

இந்த மாதத்தவணை திட்டத்தில் பணம் செலுத்த வேண்டிய கால அளவை மூன்று மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாகவும் மாற்றி கொள்ள முடிந்தது. ஆனால் இந்த மாதத்தவணை திட்டம் கடந்த ஜூன் 15ஆம் தேதியோடு முடிவடைந்துவிட்டது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs #tvs apache
English summary
TVS Apache RTR200 4V cashback and offers upto Rs.10000.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X