டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி Vs பஜாஜ் பல்சர் என்எஸ்200!! பைக்கை வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

இந்தியாவில் வேகத்தை விரும்பக்கூடிய இளைஞர்கள் மத்தியில் 200சிசி மோட்டார்சைக்கிள்கள் வேகமாக பிரபலமாகி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் தொலைத்தூர பயணங்களுக்கும் ஏற்ற மலிவான பைக்குகளாக 200சிசி பிரிவு மோட்டார்சைக்கிள்கள் விளங்குகின்றன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி Vs பஜாஜ் பல்சர் என்எஸ்200!! பைக்கை வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

இதனாலேயே இந்தியாவில் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் குறைந்தது ஒரு 200சிசி மோட்டார்சைக்கிளை ஆவது வைத்துள்ளன. இந்த வகையில் நம் இந்திய இளைஞர்களின் கனவு பைக்குகளாக விற்பனையில் உள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ்200க்கு இடைப்பட்ட வேற்றுமைகளையும் ஒற்றுமைகளையும் பற்றி தான் இனி செய்தியில் பார்க்கவுள்ளோம்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி Vs பஜாஜ் பல்சர் என்எஸ்200!! பைக்கை வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

ஸ்டைல்

டிவிஎஸ் அப்பாச்சி200 4வி பைக்கிலும் சரி, பல்சர் என்எஸ்200 பைக்கிலும் சரி தோற்றத்தில் எந்த குறையும் கூற முடியாது. அந்த அளவிற்கு இளம் தலைமுறையினரை கவர இந்த இரு மோட்டார்சைக்கிள்களின் வடிவமைப்பில் இவற்றின் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது அனுபவத்தை பயன்படுத்தி உள்ளன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி Vs பஜாஜ் பல்சர் என்எஸ்200!! பைக்கை வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கின் ஹெட்லைட் அமைப்பு, டிஆர்எல்-கள், பாடி கிராஃபிக்ஸ் மற்றும் நிறத்தேர்வுகளை சமீபத்தில் தான் டிவிஎஸ் அப்டேட் செய்திருந்தது. மறுப்பக்கம், 2012இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பல்சர் என்எஸ்200 பைக்கின் தோற்றத்தில் பெரியதாக மாற்றங்கள் கொண்டுவரப்படவில்லை. இருப்பினும் தற்போதும் என்எஸ்200 பல தரப்பட்ட வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி Vs பஜாஜ் பல்சர் என்எஸ்200!! பைக்கை வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

வசதிகள் & சவுகரியம்

200சிசி என்பது நம் மக்களை பொறுத்தவரையில் சற்று அதிகமான சிசி தான். இதனாலேயே 200சிசி-யில் பைக்கை வாங்கபவர்களில் பலர் தொழிற்நுட்ப வசதிகளை அதிகளவில் எதிர்பார்க்கின்றனர். 200சிசி பைக்குகள் தான் மலிவான தொலைத்தூர பயணத்திற்கான பைக்குகள் என முன்பே கூறினோம். இதனை நியாயப்படுத்துவதற்காக சில கவர்ச்சிக்கரமான வசதிகள் வழங்கப்படுகின்றன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி Vs பஜாஜ் பல்சர் என்எஸ்200!! பைக்கை வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

ஒவ்வொரு திருப்பலுக்கும் வழிக்காட்டி, எரிபொருள் தேவை அலாரம், லீன் ஆங்கிள் மோட், விபத்து குறித்த எச்சரிக்கை, மொபைலுக்கு வரும் அழைப்புகள்/குறுஞ்செய்திகளை பைக்கின் மூலமாக கண்ட்ரோல் செய்யும் வசதி மற்றும் ட்யுல்-சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவற்றை கொண்ட அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கில் சமீபத்தில் தான் டிவிஎஸ் நிறுவனம் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் என்ற ப்ளூடூத் இணைப்பு வசதியை அறிமுகப்படுத்தியது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி Vs பஜாஜ் பல்சர் என்எஸ்200!! பைக்கை வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

இந்த விஷயத்தில் என்எஸ்200 மிகவும் பின் தங்கியுள்ளது. ஏனெனில் இந்த 200சிசி பல்சர் பைக்கில் இன்னமும் பழைய எலக்ட்ரானிக் தொகுப்புகளே வழங்கப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் எல்இடி ஹெட்லேம்ப்கள் கூட இந்த பைக்கில் வழங்கப்படுவதில்லை. பகுதி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் திரை, 230மிமீ பின் டிஸ்க் ப்ரேக், சிங்கிள்-சேனல் ஏபிஏஸ் உள்ளிட்டவை என்எஸ்200-இல் வழங்கப்படும் சிறப்பம்சங்களாகும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி Vs பஜாஜ் பல்சர் என்எஸ்200!! பைக்கை வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

என்ஜின்

விற்பனையில் உள்ள 160சிசி பைக்குகளை கடந்து ஒருவர் 200சிசி பைக்கிற்கு வருகிறார் என்றால் அவருக்கு செயல்திறன்மிக்க மோட்டார்சைக்கிளை வழங்க வேண்டியது தயாரிப்பு நிறுவனத்தின் கட்டாயமாகும். நாம் பார்க்கும் இந்த இரு பைக்குகளுக்கு இடையிலான ஒப்பீட்டை பொறுத்தவரையில், பல்சர் என்எஸ்200 ஆற்றல்மிக்கதாக முன்னிலை பெறுகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி Vs பஜாஜ் பல்சர் என்எஸ்200!! பைக்கை வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

இதன் 4-ஸ்ட்ரோக் 4-வால்வு லிக்யுடு-கூல்டு ட்ரிபிள் ஸ்பார்க் பிஎஸ்6 டிடிஎஸ்-ஃப்யுல் இன்ஜெக்டட் என்ஜின் அதிகப்பட்சமாக 24 பிஎச்பி மற்றும் 18.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. தொழிற்நுட்ப வசதிகள் விஷயத்தில் என்எஸ்200 சறுக்கியதை போல், என்ஜின் ஆற்றல் விஷயத்தில் அப்பாச்சி மாடல் பின்னிலை வகிக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி Vs பஜாஜ் பல்சர் என்எஸ்200!! பைக்கை வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கின் 198சிசி 4-வால்வு ஆயில்-கூல்டு என்ஜின் 20 பிஎச்பி மற்றும் 17.4 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இதனுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஆனால் என்எஸ்200-ஐ காட்டிலும் அப்பாச்சி பைக் 4 கிலோ எடை குறைவானதாக உள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி Vs பஜாஜ் பல்சர் என்எஸ்200!! பைக்கை வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

விலை

நம் இந்தியர்கள் எந்தவொரு பொருளை வாங்கினாலும் விலையை மிகவும் ஆராய்ந்து வாங்கக்கூடியவர்கள். 1 லட்ச ரூபாய்க்கு மேலான விலையில் வாங்கப்படும் 200சிசி பைக்கிற்கு பார்க்க மாட்டார்களா என்ன. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கின் ஆரம்ப விலை ரூ.1,33,065 லட்சமாக உள்ளது (எக்ஸ்-ஷோரூம்). அதுவே சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இதன் இரட்டை-சேனல் ஏபிஎஸ் வெர்சனின் விலை ரூ.1,38,115 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி Vs பஜாஜ் பல்சர் என்எஸ்200!! பைக்கை வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!

பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்கின் ஆரம்ப விலையும் கிட்டத்தட்ட இதே அளவில் தான், ரூ.1,33,210 என உள்ளது. எனவே இந்த இரு பைக்குகளில் ஏதேனும் ஒன்றை வாங்க திட்டமிட்டு வருபவர்கள் மாடர்ன் தொழிற்நுட்பங்களை எதிர்பார்க்கிறீர்களா அல்லது அதிக என்ஜின் ஆற்றலை எதிர்பார்க்கிறீர்களா என்பது தான் இந்த இடத்தில் முக்கியமாகும்.

Most Read Articles
English summary
TVS Apache RTR 200 4V Vs Bajaj Pulsar NS200.
Story first published: Saturday, October 16, 2021, 2:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X