அடங்கேப்பா! செம்மையான விற்பனையான வளர்ச்சியில் டிவிஎஸ்... போன மாசம் எத்தனை யூனிட் விற்பனையாகி இருக்கு தெரியுமா?

டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2020 மார்ச் மாதத்தைக் காட்டிலும் 2021 மார்ச் மாதத்தில் அமோகமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டிவிஎஸ் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்... மார்ச் மாச விற்பனையில் கெத்து காட்டியிருக்கு!!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் கடந்த மாதம் ஜாக்பாட் அடித்தது என்றே கூறலாம். ஆமாங்க, இந்நிறுவனம் கடந்த மாதத்தில் மிக அமோகமான விற்பனையைப் பெற்றிருக்கின்றது. மார்ச் மாதத்தில் இந்நிறுவனம் ஒட்டுமொத்தமாக 123 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.

டிவிஎஸ் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்... மார்ச் மாச விற்பனையில் கெத்து காட்டியிருக்கு!!

அதாவது, 2021 மார்ச் மாதத்தில் இந்நிறுவனம் 1,44,739 யூனிட்டுகளை நிறுவனம் விற்பனைச் செய்திருக்கின்றது. அதுவே கடந்த 2020 மார்ச் மாதத்தில் பார்த்தோமேயானால் டிவிஎஸ் 3,22,683 யூனிட்டுகளை மட்டுமே நிறுவனம் விற்பனைச் செய்துள்ளது. இது மாபெரும் விற்பனை வளர்ச்சியாகும்.

டிவிஎஸ் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்... மார்ச் மாச விற்பனையில் கெத்து காட்டியிருக்கு!!

உள் மற்றும் வெளிநாட்டு விற்பனைகளை கணக்கிட்டு பார்த்தால் டிவிஎஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 130 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் என இரு விதமான டூ வீலர்களும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நல்ல விற்பனையைப் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிவிஎஸ் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்... மார்ச் மாச விற்பனையில் கெத்து காட்டியிருக்கு!!

2020 மார்ச் மாதத்தில் 66,673 யூனிட்டுகளாக இருந்த மோட்டார்சைக்கிள் விற்பனை 2021 மார்ச் மாதத்தில் 1,57,294 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. இது 136 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். இதேபோன்று, 2020 மார்ச் மாதத்தில் 34,191 யூனிட்டுகளாக இருந்த ஸ்கூட்டர் விற்பனை 2021 மார்ச் மாதத்தில் 104,513 யூனிட்டுகளாக உயர்ந்திருக்கின்றன.

டிவிஎஸ் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்... மார்ச் மாச விற்பனையில் கெத்து காட்டியிருக்கு!!

இந்த சூப்பர் விற்பனை வளர்ச்சியால் தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனம் மகிழ்ச்சியில் உறைந்திருக்கின்றது. மேலும், இதன் விற்பனை ஒட்டுமொத்த ஆட்டோ சந்தைக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

டிவிஎஸ் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்... மார்ச் மாச விற்பனையில் கெத்து காட்டியிருக்கு!!

இந்த அதீத விற்பனை வளர்ச்சிக்கு டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக இருசக்கர வாகனங்களின் அறிமுகம் மற்றும் சலுகைகளே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. டிவிஎஸ் நிறுவனம் அண்மையில் 2021 அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

டிவிஎஸ் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்... மார்ச் மாச விற்பனையில் கெத்து காட்டியிருக்கு!!

இப்பைக்கிற்கு நிறுழனம் அறிமுக விலையாக ரூ. 1.07 லட்சம் என்ற விலையை நிர்ணயித்திருக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே ஆகும். டிஸ்க் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் வசதி அல்லாதது என இரு விதமான தேர்வுகளில் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டிவிஎஸ் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்... மார்ச் மாச விற்பனையில் கெத்து காட்டியிருக்கு!!

இவ்விரு தேர்விலும் 159.7 சிசி திறன் கொண்ட எஞ்ஜினையே டிவிஎஸ் பயன்படுத்தியிருக்கின்றது. இது ஓர் சிங்கிள் சிலிண்டர் கொண்ட எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 17.63 பிஎஸ் பவரை 9,250 ஆர்பிஎம்மிலும், 14.73 என்எம் டார்க்கை 7,250 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். ரேசிங் சிவப்பு, இரவு கருப்பு மற்றும் உலோக நீலம் ஆகிய நிற தேர்வுகளில் மோட்டார்சைக்கிள் கிடைக்கும்.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Gets 123 Percent Growth In March 2021. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X