Just In
- 2 min ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 59 min ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- 1 hr ago ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
- 1 hr ago ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
Don't Miss!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Sports குஜராத்துக்கு எதிராக அபாரமாக வென்றது எப்படி? 89 ரன்களில் சுருட்டியதன் ரகசியத்தை கூறிய ரிஷப் பண்ட்
- News ‛‛நீங்கள் தான் என் சொத்து’’.. அண்ணாமலைக்கு பிரதமர் மோடி சொன்ன வாழ்த்து.. குஷியில் தமிழக பாஜக
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஒன்றைகூட விட்டு வைக்கல!! எல்லா ஸ்கூட்டரின் விலையையும் உயர்த்திடுச்சு.. எந்த நிறுவனம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!
டிவிஎஸ் நிறுவனம் அதன் அனைத்து ஸ்கூட்டர் மாடல்களின் விலையையும் உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
டிவிஎஸ் நிறுவனம் அதன் அனைத்து ஸ்கூட்டர் மாடல்களின் விலையையும் உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிவிஎஸ் நிறுவனத்தின்கீழ் ஸ்கூட்டி பெப், ஸ்கூட்டி ஜெஸ்ட், ஜூபிடர், என்டார்க் ஆகிய நான்கு விதமான மாடல் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
இவற்றின் விலையையே நிறுவனம் தற்போது உயர்த்தியுள்ளது. ரூ. 540 தொடங்கி ரூ. 2535 வரை ஸ்கூட்டர்களின் விலையில் உயர்வு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி செலவு உயர்ந்திருப்பதைக் காரணம் காட்டி புதிய விலையுயர்வை டிவிஎஸ் செய்திருக்கின்றது.
இதுகுறித்து அறிவிப்பு ஏற்கனவே வெளியிட்டிருந்தநிலையில் புதிய விலையுயர்வு கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் கடந்த காலங்களைக் கட்டிலும் சமீப சில மாதங்களாக நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற்ற வண்ணம் இருக்கின்றது.
கடந்த மார்ச் மாத விற்பனையே இதற்கு சான்று. டிவிஎஸ் நிறுவனம் 2020 மார்ச் மாதத்தில் 1,33,988 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது. அதுவே 2021 மார்ச் மாத்தில் பார்த்தோமேயானால் நிறுவனம் 3,07,437 யூனிட்டுகளை நிறுவனம் விற்பனைச் செய்திருக்கின்றது. இது 123 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.
இந்த மாதிரியான விற்பனை வளர்ச்சியை நிறுவனம் பெற்று வரும் வேலையில் அனைத்து மாடல் ஸ்கூட்டர்களின் விலையையும் உயர்த்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மோட்டார்சைக்கிளைப் போலவே ஸ்கூட்டர்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உண்டு.
ஆகையால், ஸ்கூட்டர்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பது இந்திய ஸ்கூட்டர்கள் பிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகக் குறைந்தபட்ச விலையுயர்வாக ரூ. . 540னை என்டார்க் 125 மாடலின் டிரம் பிரேக் வேரியண்ட் பெற்றிருக்கின்றது.
இதற்கு அடுத்தபடியாக மிக அதிகபட்ச விலையுயர்வை ஸ்கூட்டி பெப் ப்ளஸ் மேட் எடிசன் பெற்றிருக்கின்றது. இந்த ஸ்கூட்டரின் விலையில் ரூ. 2,535 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முன்னதாக ரூ. 56,224க்கு மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வந்த இந்த ஸ்கூட்டரின் விலை தற்போது ரூ. 58,759ஆக உயர்ந்துள்ளது.
இதேபோன்ற விலையுயர்வையே டிவிஎஸ் நிறுவனத்தின் அனைத்து ஸ்கூட்டர்களும் பெற்றிருக்கின்றன. எந்தெந்த ஸ்கூட்டர் எவ்வளவு விலையுயர்வைப் பெற்றிருக்கின்றது என்பது பற்றிய தகவலை தெளிவாக கீழே பட்டியலில் காணலாம்.
மாடல் | தற்போதைய விலை | முந்தைய விலை | விலை வித்தியாசம் |
ஸ்கூட்டி பெப் ப்ளஸ் க்ளாஸ்ஸி | ₹56,009 | ₹54,374 | ₹1,635 |
ஸ்கூட்டி பெப் ப்ளஸ் மேட் எடிசன் | ₹58,759 | ₹56,224 | ₹2,535 |
ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 க்ளோஸ் | ₹62,980 | ₹61,345 | ₹1,635 |
ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 மேட் செரீஸ் | ₹64,980 | ₹63,345 | ₹1,635 |
ஜூபிடர் ஷீட் மெட்டல் வீல் | ₹64,437 | ₹63,497 | ₹940 |
ஜூபிடர் எஸ்டிடி | ₹66,662 | ₹65,497 | ₹1,165 |
ஜூபிடர் இசட்எக்ஸ் | ₹69,637 | ₹68,247 | ₹1,390 |
ஜூபிடர் இசட்எக்ஸ் டிஸ்க் பிரேக், ஐ டச்ஸ்டார்ட் | ₹73,737 | ₹72,347 | ₹1,390 |
ஜூபிடர் கிளாசிக் | ₹73,707 | ₹72,472 | ₹1,235 |
என்டார்க் 125 ட்ரம் | ₹71,095 | ₹70,555 | ₹540 |
என்டார்க் 125 டிஸ்க் | ₹75,395 | ₹74,555 | ₹840 |
என்டார்க் 125 ரேஸ் எடிசன் | ₹78,375 | ₹77,035 | ₹1,340 |
என்டார்க் 125 சூப்பர் ஸ்குவாட் எடிசன் | ₹81,075 | ₹79,535 | ₹₹1,540 |