சேத்தக்கை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் பஜாஜ்!! தமிழக எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு குவியும் ஆர்டர்கள்...

டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரின் விற்பனை இரண்டாவது முறையாக பஜாஜின் பிரபல சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையை முந்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சேத்தக்கை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் பஜாஜ்!! தமிழக எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு குவியும் ஆர்டர்கள்...

எலக்ட்ரிக் வாகனம் வாங்குவது குறித்த விழிப்புணர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்து வருவதால் இந்திய சந்தையில் ஸ்டார்ட்அப் மற்றும் தொழிற்நுட்ப நிறுவனங்கள் அவற்றின் புதிய தயாரிப்புகளை அடுத்தடுத்ததாக அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகின்றன.

சேத்தக்கை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் பஜாஜ்!! தமிழக எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு குவியும் ஆர்டர்கள்...

இதில் முன்னணி நிறுவனத்தின் தயாரிப்புகளாக பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

சேத்தக்கை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் பஜாஜ்!! தமிழக எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு குவியும் ஆர்டர்கள்...

சேத்தக் ஆரம்பத்தில் புனேவிலும், ஐக்யூப் பெங்களூரிலும் மட்டும் விற்பனை செய்யப்பட்டன. அதன்பின் பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெங்களுரிலும், ஐக்யூப் டெல்லியிலும் விற்பனையை துவங்கின. இருப்பினும் அப்போதில் இருந்து பஜாஜ் சேத்தக்கின் கையே ஓங்கி இருந்து வந்தது.

சேத்தக்கை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் பஜாஜ்!! தமிழக எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு குவியும் ஆர்டர்கள்...

ஆனால் அந்த நிலை கடந்த 2021 ஜனவரியிலும் தலைக்கீழாக மாறியுள்ளது. ஏனெனில் கடந்த ஜனவரியில் வெறும் 30 சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே டிவிஎஸ் ஐக்யூப் வழக்கத்திற்கு சற்று அதிகமாக 211 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Month Chetak iQube
January-2020 21 0
February-2020 100 0
March-2020 91 18
April-2020 0 0
May-2020 0 0
June-2020 0 30
July-2020 120 23
August-2020 192 23
September-2020 288 7
October-2020 258 101
November-2020 264 99
December-2020 3 58
January-2021 30 211
Total 1,367 577
சேத்தக்கை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் பஜாஜ்!! தமிழக எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு குவியும் ஆர்டர்கள்...

அறிமுகத்தில் இருந்து ஐக்யூப் ஒரு மாதத்தில் 200 யூனிட்களுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். இவ்வளவு ஏன், 100 என்ற எண்ணிக்கையையே ஒரே ஒரு மாதத்தில் (அக்டோபர் 2020) மட்டுமே இந்த டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாண்டி இருந்தது.

சேத்தக்கை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் பஜாஜ்!! தமிழக எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு குவியும் ஆர்டர்கள்...

ஆனால் சேத்தக்கின் விற்பனை பெரும்பான்மையான மாதங்களில் நல்லப்படியாகவே இருந்து வந்துள்ளது. கடந்த 2020 டிசம்பரிலும், 2021 ஜனவரி மாதத்திலும் மட்டுமே மிக பெரிய அளவில் அடி வாங்கியுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் வெறும் 3 சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

சேத்தக்கை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் பஜாஜ்!! தமிழக எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு குவியும் ஆர்டர்கள்...

உலகளவில் குறைக்கடத்திகளுக்கு மிக பெரிய அளவில் பற்றாகுறை ஏற்பட்டு வருகிறது. சேத்தக்கிலோ பெரும்பான்மையான பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், இந்த பற்றாகுறை நேரடியாக அதன் தயாரிப்பை பாதித்து வருகிறது.

சேத்தக்கை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் பஜாஜ்!! தமிழக எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு குவியும் ஆர்டர்கள்...

இதன் காரணமாக சேத்தக்கிற்கான புதிய முன்பதிவுகள் எதையும் ஏற்று கொள்ளாமல் பஜாஜ் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும் அதற்குள்ளாக சேத்தக்கிற்கு குவிந்துவிட்ட 1,500 முன்பதிவுகள் தற்போதைக்கு நிலுவையில் உள்ளன.

சேத்தக்கை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் பஜாஜ்!! தமிழக எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு குவியும் ஆர்டர்கள்...

தயாரிப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள இந்த தடையை சீரமைக்க சேத்தக்கை முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் பாகங்களை பயன்படுத்தி உருவாக்க பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்த நிலை சீராகுமாயின், சேத்தக்கின் விற்பனை எண்ணிக்கை ஒரேடியாக ஏகிறும்.

சேத்தக்கை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் பஜாஜ்!! தமிழக எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு குவியும் ஆர்டர்கள்...

சேத்தக்கின் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள இந்த தடையே வாடிக்கையாளர்களை டிவிஎஸ் ஐக்யூப் உள்பட மாற்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பக்கம் செல்ல உந்துதலாக அமைந்துள்ளது. பஜாஜ் சேத்தக்கின் விலைகள் புனே மற்றும் பெங்களூரில் ரூ.1.15 லட்சம் மற்றும் ரூ.1.20 லட்சமாகவும், டிவிஎஸ் ஐக்யூப்பின் விலை பெங்களூரில் ரூ.1.15 லட்சமாகவும், டெல்லியில் ரூ.1.08 லட்சமாகவும் உள்ளன.

Most Read Articles
English summary
TVS iqube sales higher than Bajaj Chetak electric scooter electric two wheeler sales are rising.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X